Sunday, April 30, 2017

வளரட்டும் நிலைக்கட்டும் உலகெங்கும் மேதினத்தின் நோக்கங்கள் எல்லாமே

தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லா"மே "
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லா"மே "

நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லா"மே "
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லா"மே "

உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லா"மே "
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லா" மே "

கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லா"மே "
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லா"மே "

உணரட்டும்  இணையட்டும் வளரட்டும்
உழைப்பவருக்கு உழைக்கின்ற எல்லா "மே "
வளரட்டும் நிலைக்கட்டும்   உலகெங்கும்
"மே "தினத்தின் நோக்கங்கள் எல்லா"மே "


(அனைவருக்கும்  மே  தின  நல்வாழ்த்துக்கள் )

11 comments:

  1. உழைப்பாளர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. டும் டும் என்று முரசு கொட்டி சொன்ன அனைத்தும் நடக்கட்டும் :)

    ReplyDelete
  3. உழைப்பாளர்களின் நோக்கங்கள் எல்லாம் நிறைவேரட்டும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எல்லா'மே' அழகானவரிகள். கண்ணதாசனின் பாடலை நினைவுபடுத்துகின்றன:

    அன்பு நடமாடும் கலைக்கூட'மே'
    ஆசை மழை மேக'மே'
    கண்ணில் விளையாடும் எழில்வண்ண'மே'
    கன்னித்தமிழ் மன்ற'மே'.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  5. மே தின வாழ்த்து அருமை.

    ReplyDelete
  6. தன்னலமின்றி உழைக்கும் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஆர்பரிக்கும் வாழ்த்துப்பா
    அருமை அய்யா
    தம +

    ReplyDelete
  8. அருமையான வாழ்த்துப்பா....

    அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. உணரட்டும் இணையட்டும் வளரட்டும்
    உழைப்பவருக்கு உழைக்கின்ற எல்லா "மே "
    வளரட்டும் நிலைக்கட்டும் உலகெங்கும்
    "மே "தினத்தின் நோக்கங்கள் எல்லா"மே "//

    Super Sir. :)

    அனைவருக்கும் 'மே' தின நல்வாழ்த்துக்கள்


    ReplyDelete
  10. நல்லபதிவை ரசிக்கும் போது எதற்கு ஒப்பீடு. எல்லாமே சிறப்பாக இருந்தது

    ReplyDelete