Wednesday, May 24, 2017

கோப்பெரும்சோழனும் பிசிராந்தையாரும்...

மூன்றுபேரைக் கடக்கும்
சமுத்திரம் எனும் சொல்
சமூத்திரமாகி
முடிவாக
மூத்திரமாகி
அர்த்தம் கெட்டுப்போவதைப்போல

சப்தமென
வார்த்தைகளென
உருமாற்றம்கொண்ட
உணர்வுகள்எல்லாம்
படைப்பிலயங்களில்
அர்த்தமற்றுத்தான்போகின்றன

ஒருகுயிலின் கூவல்  
ஒருகுழந்தையின்சிரிப்பு
நொந்தவளின்விசும்பல்
அபயம்வேண்டி
அலறுவோனின்கூக்குரல்....

எந்தஉணர்வுகளின்வெளிப்பாடும்
சப்தங்களாய்இருக்கையில்
சங்கடப்படுத்துகிறஅளவு
நம்மை இம்சிக்கிற அளவு
வார்த்தைகளில்
 வசப்படுவதேஇல்லை

வாசகனின்அனுபவங்களோடு
ஒத்தஅலைவரிசையில்
எப்போதேனும்
ஒத்துப்போகையில்
உச்சம்தொடும்படைப்பு

அதுஅற்றுப்போகையில்
சவக்கிடங்கின்பிணஅடுக்களாய்
அசைவற்று த்தான்கிடககிறது

இருப்பினும்
எடுப்பதெல்லாம்
சிப்பி ஆகிப்போயினும்
என்றேனும் முத்தும்கிடைக்குமெனும்
நம்பிக்கையில்
உயிர்ப்பயம் விடுத்து
கடல் மூழ்கும்  மனிதனாய்

கவிபடைத்துக் கொண்டிருக்கிறேன் நான்

காடுமலைகடந்து
 நாடு கடந்து
எங்கோ
முத்தின்அருமைதெரிந்த
அதை அடைவதற்கான சிரமம் புரிந்த 
முகமறியாஒருவன்  இருப்பான்
என்கிறநம்பிககையில்

வார்த்தைமூடியஅநுபவங்களை
கவிதைகளாக்கி
நம்பிக்கையுடன்
காற்றில்விதைத்தும்  போகிறேன் நான்

கோப்பெரும்சோழனும்
பிசிராந்தையாரும்
அவ்வப்போது
நம்பிக்கையூட்டிப்போகிறார்கள் 

10 comments:

  1. Ganpat said...
    ரமணி ஸார்,
    உங்கள் எழுத்துக்கள வாசகர்கள் ரசனையை ஒரே சீராக உயர்த்தி வருகின்றன.மேலும் நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் அதற்கு ஆதரவு அதிகம் என்பதை இங்கு வந்து குவியும் பின்னூட்டங்கள் சொல்லாமல் சொல்கின்றன .முத்தின்அருமைதெரிந்த
    முகமறியாஒருவன் என்பது நல்ல சொல்லாக்கம்.வாழ்த்துக்கள்..
    பி.கு:சமீபத்தில் இன்னொரு தளத்தில் "விதி விலக்குகளை விலக்கி விடலாமே" எனும் உங்கள் பின்னூட்டத்தின் சொல்நயத்தை மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. தொடரட்டும் உங்கள் அருமையான கவிப்பயணம்.

    ReplyDelete
  3. கவிபடைத்துக் கொண்டே இருங்கள் ஐயா...

    ReplyDelete
  4. பதிவர்களாகிய நம்மில் பலரும்
    தாங்கள் சொல்லியுள்ளது போல
    கோப்பெரும்சோழனும்
    பிசிராந்தையாருமாகவேதான்
    இருந்து வருகிறோம்.

    இருப்பினும் அவ்வப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துவரும்
    நம்பிக்கைதான் நம்மை வாழ வைக்கின்றன.

    இதனை அருமையாக உணர்ந்தும் உணர்த்தியும் சொல்லியுள்ள தங்களுக்கு என் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. #முகமறியாஒருவன் இருப்பான்#
    உங்கள் நம்பிக்கை வீணாகாது ,ஒருவன் அல்ல ..ஒரு கூட்டமே இருக்கு :)

    ReplyDelete
  6. வாசகனின்அனுபவங்களோடு
    ஒத்தஅலைவரிசையில்
    எப்போதேனும்
    ஒத்துப்போகையில்
    உச்சம்தொடும்படைப்பு

    அருமை
    அருமை ஐயா

    ReplyDelete
  7. நல்ல ஒப்புமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  8. ரசிய்தேன் உவமையை...

    ReplyDelete
  9. உவமை அழகு! ஆம் நம்பிக்கையில் தான் படைப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் எத்தனை முத்துக்களைப் படைத்திருக்கிறீர்கள்! மேலும் மேலும் படைத்துக் கொண்டே இருங்கள்! வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. எல்லாமே முத்துக்கள்தாம்!

    ReplyDelete