Saturday, June 3, 2017

கலைஞரும் சமயோசிதமும் ( 1 )...

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில்
ஒரு நிகழ்ச்சி.அது கவிதைப் போட்டியில்
வென்றவருக்கு பரிசு வழங்கிக் கௌரவிக்கும்
நிகழ்வாய் இருந்ததால் முதல்வராக
கலைஞர் அவர்களும்,
மற்ற அமைச்சர் பெருமக்களும்
தமிழ் அறிஞர்களும் பெருந்திரளாகக்
கலந்து கொண்ட ஒரு அருமையான நிகழ்வு

(அன்று இரவில் தான் ஆட்சிக் கலைக்கப்பட்டு
மிஸா அமலபடுத்தப்பட்டதாக ஞாபகம்)

மேடையில் ஒருபுறம் கலைஞர் உட்பட
அமைச்சர் பெருமக்கள் அனைவரும்
இருக்கையில் அமரவைக்கப்பட்டிருக்க
தமிழ் அறிஞர்கள் அனைவரும் அவர்களைக்
கௌரவிக்கும்விதமாக மிகச் சிறப்பாக
சம தளமாக படிக்கட்டு அமைப்பில்
அமைக்கப்பட்டிருந்த மேடையில்
அமர வைக்கிப்பட்டிருந்தார்கள்

அதன் காரணமாக அமைச்சர் பெருமக்கள்
அனைவரும்  கலைஞர் உட்பட  எழுந்து வந்து
 நின்றுஒலி வாங்கியின் முன் பேசும்படியாகவும்
அறிஞர்கள் அனைவரும் அமர்ந்த நிலையில்
தங்கள் இடத்திலிருந்தே பேசும்படியாகவும்
அமைந்தது

இந்த அமைப்பை மேடையில் இருந்த
அனைவரும் கீழே இருந்து இரசித்துக்
கோண்டிருந்த அனைவரும்தான்
 பார்த்துக் கொண்டிருந்தோம்
எங்களில் யாருக்கும் , ஏன் சிறப்புரையாற்றிய
அறிஞர் பெருமக்கள் யாருக்கும் கூட
அந்த அமைப்புக்கு குறித்து ஏதும்
தோன்றவில்லை  

ஆயினும் கலைஞர் தனது சிறப்புரையில்
"இந்த அரசு தமிழின் பால்  தமிழறிஞரின்பால்
அதிக மரியாதையும் மதிப்பும்
கொண்டிருக்கிறது

அதன் காரணமாகவே
அமைச்சர் பொறுப்பில் இருக்கிற
நாங்கள் எல்லோரும் எழுந்து நின்று பேச
தமிழ் அறிஞர் பெருமக்கள் எல்லாம்
அமர்ந்தபடியே உரையாற்ற ஏற்பாடு
செய்ததைக் கொண்டே நீங்கள் இதைப்
புரிந்து கொண்டிருப்பீர்கள் " என
அந்தச் சூழலை மிகப் பொருத்தமாகப்
பயன்படுத்திப் பேசியதை இரசித்த
கூட்டத்தின் கரகோஷம் அடங்க
வெகு நேரம் பிடித்தது

அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாய்
இருந்து அவரின் சமயோசிதமாய்ப் பேசியதை
இரசித்து மகிழும்படியான வாய்ப்புக் கிடைத்ததை
இன்று அவருக்கே ஆன நாளில் நினைவு
கூர்வதிலும் அதிப் பதிவு
செய்வதிலும் மிக்க மகிழ்வு கொள்கிறேன்

உழைப்பு என்றும் சலியாத உழைப்பு அதுவே
கலைஞரின் சிறப்பு என்பதை பதிவு செய்வதிலும்...

23 comments:


  1. கலைஞரிடம் பிடித்தது அவரது உழைப்பும் பேச்சும்தான் TM 3

    ReplyDelete
  2. தமிழுக்குப் பெருமை சேர்த்த கலைஞரை வாழ்த்துவதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் :)

    ReplyDelete
  3. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அவரின் திறமைக்கும், உழைப்புக்கும் தக்க மரியாதை செய்ய வேண்டும்.

    ReplyDelete
  4. தமிழாய் வாழ்ந்தவர்
    தமிழால் வளர்ந்தவர்
    தமிழ் போல் வாழ்க.

    ReplyDelete
  5. அருமையான பதிவு

    ReplyDelete
  6. தமிழுக்காகவும் தமிழகத்துக்காகவும் உழைத்தவ கலைஞர். பாராட்டுக்குரியவர் ஆனால் குடும்பபாசம் அவர் மீதும் நம்பிக்கை இழக்கும் படி செய்து விட்டது பள்ளியில் அதிகம் படிக்காத அவரிடம் தமிழ் வாழ்ந்திருந்தது

    ReplyDelete
  7. அறியாத தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா ,நானும் வாழ்த்துகிறேன் ஐயா அவர்களை

    ReplyDelete
  8. பேச்சு தானே அவருக்கு முதல்வர் பதவி கொடுத்தது.

    ReplyDelete
  9. தமிழ் அறிஞர் என்ற வகையில் மட்டும் அவரது தொண்டு போற்றப்படக்கூடியது.
    வாழ்க நலம்

    ReplyDelete
  10. தமிழறிஞர்.....நல்ல பேச்சாற்றல் உடையவர்.....அண்டப வகையில் போற்றப்படவேண்டியவர்....

    ReplyDelete
  11. கலைஞருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரின் தமிழ் தொண்டு தமிழின் வரலாற்றில் ஒரு பக்கமாக ஆழப் பதிந்துவிட்டது.

    ReplyDelete
  12. தமிழ்மண வோட் லிங்கை நீங்களும் தரலாமே சேர். என்னைப் போன்ற மொபைல்வாசிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

    ReplyDelete
  13. கலைஞரின் பேச்சுக்களும் எழுத்துக்களும் எப்போதும் சமயோசிதமாகவும் ரஸிக்கும்படியாகவும் இருக்கும்.

    எல்லாவிதத்திலும் மிகப்பெரிய சாதனையாளர்தான்.

    இன்று 94-வது பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு நம் வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. நசுக்காகப் பேசுவதென்பது இதுதானோ.. மிக அருமையான பேச்சு. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அவரது உழைப்புக்கு நிகர் அவரே.

    ReplyDelete
  16. அவர் இம்மாதிரி சூழல்களை தனக்கு சாதகம் ஆக்குவதில் அதி திறமைசாலி

    ReplyDelete
  17. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  18. உரிய நேரத்தில் வந்த எடுக் காட்டு

    ReplyDelete
  19. கலைஞர் என்றாலே எல்லோருக்கும் அவருடைய சமயோசிதமும், உழைப்பும்தான் நினைவுக்கு வரும். நல்லதொரு படைப்பு.

    ReplyDelete
  20. அயராத உழைப்பு.... உங்கள் மூலம் இன்னும் விஷயங்கள் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    ReplyDelete