Sunday, June 18, 2017

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

Image may contain: drawing

முன்னறித்  தெய்வப்பட்டியலில்
இரண்டாவதாயிருப்பதுக்  குறித்து
அவர்கள் கவலைப்பட்டதே இல்லை

குழந்தைகளின்முன்னேற்றம் குறித்துச்
சிந்திப்பதில் அவர்கள் எப்போதும்
முதலாவதாகவே இருக்கிறார்கள்

மாதா எனத் துவங்கி தெய்வத்தில் முடியும்
அந்த நால்வர் பட்டியலில்
குருவுக்கு முன்னர் இடம்பெற்றது
வெறும் வார்த்தை ஜாலத்திற்காக இல்லை

உலகைப் புரிந்து கொள்ளக்
கற்றுக் கொடுப்பதில் அவர்கள்
அனைத்து விஷயத்திலும் என்றென்றும்
குருவுக்கு முன்னால்தான் இருக்கிறார்கள்

அன்னையர் தினம் அளவு
தந்தையர் தினம் கொண்டாடப்படாதது  குறித்து
அவர்கள் சஞ்சலப்படாதே இருக்கிறார்கள்

ஆணுக்கென இந்தச் சமூகம் விதித்திருக்கும்
சில விசித்திர விதிகளினால்
அவர்கள்  உணர்வுகளை எப்போதும்
உள்ளத்தில் அடக்கிவைத்தே அலைகிறார்கள்

நம்மை வயிற்றில் சுமக்காது போயினும்
காலமெல்லாம் நெஞ்சில் சுமந்தே  சுகங்காணும்

நமக்குப் பாலூட்டி வளர்க்காது போயினும்
காலமெல்லாம் சிகரத்தில் வைக்கத்  தினம்சாகும்

தந்தையரின் தியாகங்கள்
யாருக்கும் எந்த விதத்திலும்
என்றும் சளைத்ததல்லை

ஆம் ...நிச்சயமாக

 தந்தையராய் இருப்பது மாபெரும் தவமே

ஆணினத்திற்கு இறைவன் அருளிய ஆகப்பெரிய வரமே

அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

14 comments:

  1. நன்னாளில் ஒரு நல்ல கவிதை. நன்றி.

    ReplyDelete
  2. ’தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்ற ஔவைப் பாட்டியின் வாக்கிற்கு (கொன்றைவேந்தன்) விளக்கவுரை போல் அமைந்துள்ளது இந்த பதிவு. தந்தையர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்!
    எல்லோருக்கும் நிழல் தரும் ஒரு ஆலமரம் தாய் என்றால் அந்த ஆலமரத்தைத் தாங்கிப்பிடிப்பது அதன் வேர்களான தந்தையல்லவா?
    இதை ஒரு கவிதை சொல்கிறது. படித்துப்பாருங்கள். அதன் இணைப்பு:

    http://muthusidharal.blogspot.ae/2010/08/blog-post_19.html

    ReplyDelete
  4. தாய் கொஞ்சகாலம் வயிற்றில் சுமக்கிறாள்.

    தந்தை எப்போதும் தன் சிந்தனையில் சுமக்கிறான் என்பதை படமே சொல்கிறது.

    அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மனோ சாமிநாதன் //

    அற்புதமான பதிவு
    இன்றைய தினம் இதை மீள்பதிவாகத் தரலாமே
    முன்பு படிக்கத் தவ்றியவர்களுக்கு
    படித்து மகிழ ஒரு வாய்ப்பாக இருக்குமே
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  6. அருமை
    தந்தையர் தினவாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  7. தந்தையர் தின சிறப்பு பதிவு அருமை
    த.ம.4

    ReplyDelete
  8. அருமையான பதிவு அய்யா.

    ReplyDelete
  9. நெஞ்சை உருக வைக்கும் கவிதை..!! எல்லா வரிகளுமே அற்புதமானவை. தந்தையாய் இருப்பது பெருமை - அந்தப் பெருமையை எனக்கும் வழங்கிய கடவுளுக்கு நன்றி.

    ReplyDelete
  10. தந்தையர்தின நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. வணக்கம்
    ஐயா

    தந்தையர் தினத்தை நினைவு படுத்தும் அற்புத கவிமழையில் நான் நனைந்தேன்
    இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா த.ம 5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. தன்னை விட தம்மக்கள் வளர்வதை தந்தையரே விரும்புவர்

    ReplyDelete
  13. அருமையான கவிதை, அழகான படம்.
    தந்தையர் தின வாழ்த்துக்கள். (தாமதமாய்)

    ReplyDelete