Sunday, June 25, 2017

முக நூலும் வலைத்தளமும்

திருமண வரவேற்பில்
கூடுதல் அந்தஸ்துக்காக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அந்த கச்சேரியை
கண்டும் காணாது பலரும் கடக்கிறார்கள்

விருந்துண்ண
இடம் கிடைக்காதோர்
அல்லது உண்ட அலுப்புத் தீர
சிறிது அமர்வோர் மட்டும்
இரசித்துக் கேட்கிறார்ப்  போல
கொஞ்சம் பார்க்கிறார்கள்

அது மனவருத்தம் தருவதுபோல்
இருந்தாலும்
தன்னை அறிமுகம் செய்து கொள்ள
அதுவும் பாடகனுக்குத்
தேவையாகத்தான் இருக்கிறது

சங்கீத சபாக்களில்
ரசிப்பதற்கென்றே
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அந்தக் கச்சேரியை
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே
கேட்டு இரசிக்கிறார்கள்

எண்ணிக்கை சிறிதாயினும்
மிகச் சரியாய்
உணர்ந்து இரசிப்போராய்
அவர்கள் இருப்பதால்
பாடகனின் வளர்ச்சிக்கு
அதுதான்  அவசியமாகப்படுகிறது

(முக நூலில் தொடர்பவர்கள் நான்காயிரமாய்
உயர்ந்திருக்கிறார்கள்  .சும்மா ஒரு .  தகவலுக்காக  )

15 comments:

  1. எமது வாழ்த்துகளும்...

    த.ம.4

    ReplyDelete
  2. ஓர் விளம்பரம் போல எல்லோருக்கும் எல்லாமுமே தேவையாகத்தான் உள்ளது.

    பல முகங்களுடன் அழகாக அமைதியாக எரிந்து
    எங்குமே ஒளியூட்டிடும் தீபம் போன்ற தங்களுக்கு என் நல்வாழ்த்துகள்.

    தாங்கள் இங்கு சொல்லியுள்ள பாட்டுக் கச்சேரி உதாரணங்கள் சூப்பராக உள்ளன. :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. வயிற்றுக்காக ஒரு கச்சேரி ,ரசனைக்காக ஒரு கச்சேரி :)

    ReplyDelete
  4. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் உணர்ந்து உண்மையாக ரசிப்போர் இருந்தால் எந்தக் கலைஞனுமே மகிழ்வான் ஐயா..!

    பேஸ்புக்கில் 4K தொட்டமைக்கு வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  5. சங்கீத சபாக்களில் பாடும் வாய்ப்பு அனைவருக்கும் எல்லா நாட்களிலும் கிடைப்பதில்லை. கல்யாணக் கச்சேரிகளில் பாடுவதன்மூலம் அதை ஓரளவு ஈடுகட்ட முடிகிறது என்று ஒரு பாடகர் கூறினார். மேலும் தனக்கு அது ஓர் விளம்பரமும் ஆகும் என்றார்.

    ReplyDelete
  6. முக நூலில் தொடர்பு கொள்பவரை நாம் தானே தேர்வு செய்கிறோம்

    ReplyDelete
  7. முகநூலில் நான்காயிரம் மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அட! பேஸ்புக்கில் அதிக நட்புக்களை இணைக்காமல் இருப்பது நிம்மதி ஐயா. நட்பெண்ணிக்கை அதிகமாகும் போது நம் பிரைவசியும் பாதிக்கப்படுகின்றது அங்கே!

    ReplyDelete
  9. 4000
    விரைவில் மேலும்மேலும் உயரட்டும்
    வாழ்த்துக்கள் ஐயா
    தம +1

    ReplyDelete
  10. எண்ணிக்கை என்பதை விடவும் கொள்கையே பல நேரங்களில் முடிவை எட்டுகிறது....

    ReplyDelete
  11. தொடர்பவர்கள் அதிகரித்தமைக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete