Sunday, July 2, 2017

வாயிற்காப்போர்கள்..

குளிரூட்டப்பட்ட
தன் அலுவலக அறையில்
இடையூறுகள் ஏதுமின்றி
இயல்பாகவும் , மகிழ்வாகவும்
பணியாற்றிக் கொண்டிருந்தான் என் நண்பன்

"எப்படி  இது சாத்தியமாகிறது
என்னால் இப்படி முடியவில்லையே ஏன் ?"
என்றேன்

"இது பெரிய விஷயமில்லை
வாயிற்காப்போர்கள் விஷயத்தில்
மிகக் கவனமாய் இருந்தால் போதும் "
என்றான் சிரித்தபடி

"நான் அலுவலகத்தைக் கேட்கவில்லை
உன்னைக் கேட்கிறேன்
எப்படி உன்னால் இயல்பாகவும்
மகிழ்வாகவும் எப்போதும்.."

நான் சொல்லி முடிக்கும் முன்
"நானும் அலுவலகத்தை மட்டும்
சொல்லவில்லை
என்னையும் சேர்த்துத்தான் "என்றவன்
தன் காதுகள் இரண்டையும்
வாயையும் தொட்டுக் காட்டி
இரு கண்களையும் மெல்லச் சிமிட்டினான்

மூலச் சூத்திரம் மெல்லப் புரிந்தது



17 comments:

  1. காதையும் ,வாயையும் அடைத்து ,கருமமே'கண் 'ணாய் இருந்தால் நிம்மதியோ :)

    ReplyDelete
  2. Bagawanjee KA //

    அடைக்க வேண்டியதில்லை
    உண்பதிலும் பேசுவதிலும்
    பார்ப்பதிலும் படிப்பதிலும்
    கேட்பதிலும் கொஞ்சம் கூடுதல்
    கவனமாய் இருந்தால் போதும்
    ஆரோக்கியமும், உறவும்,அறிவில் தெளிவும்
    வரச் சாத்தியம் அதிகம் இல்லையா ?

    ReplyDelete
  3. ஸார்.. தமிழ்மணம் லிங்க் கீழே தந்திருப்பதை எங்கள் தளத்திலிருந்து அப்படியே எடுத்துக் கொடுத்திருப்பதால் அது எங்கள் தளத்துக்குத்தான் வருகிறது! லிங்க்கில் இந்தப் பதிவின் லிங்க்கைத் தரவும்.

    ReplyDelete
  4. நல்லதொரு கருத்து அருமை
    த.ம.4

    ReplyDelete
  5. ஸ்ரீராம். //

    உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. KILLERGEE Devakottai //.

    உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. முதல் பத்தியையும், கடைசி பத்தியையும் (அவசரத்தில் முதல் முறைப் படித்ததும்), தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்கு ஒன்றும் சரிவர விளங்காமல், அந்த நண்பருக்கு ஒருவேளை ’மூல வியாதி’ ஏதும் இருக்குமோ என நினைத்துவிட்டேன்.

    -=-=-=-

    உண்பதிலும், பேசுவதிலும், பார்ப்பதிலும், படிப்பதிலும், கேட்பதிலும் கொஞ்சம் கூடுதல் கவனமாய் இருந்தால் போதும். ஆரோக்கியமும், உறவும், அறிவில் தெளிவும் வரச் சாத்தியம் அதிகம்தான் என்பதை தங்களின் பதில்கள் மூலமும், பதிவினை மீண்டும் ஊன்றிப் படித்த பிறகும், நானும் இப்போது தெரிந்துகொண்டேன்.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  8. புலவர் இராமாநுசம் said...
    நன்று//

    உடல் நலமுற்று வலைத்தளத்துள்
    வந்ததும் பாராட்டி பின்னூட்டம்
    அளித்ததும் மனம் கவர்ந்தது
    மிக்க நன்றி.வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  9. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் பின்னூட்டத்தை மிகவும்
    இரசித்தேன்.வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஹாஹா அருமையான கருத்து ஐயா... எனக்கு சட்டென்று புரியவில்லை. பின்னர் யோசித்துக் கண்டுபிடித்தேன் :)

    ReplyDelete
  11. வாயிற்காப்போர்கள்... எவ்வளவு அழகான அர்த்தமுள்ள வார்த்தை... மூலச்சூத்திரம் பிடிபட்டாலும் செயற்படுத்துவதில்தானே பலருக்கும் சிக்கல்..

    ReplyDelete
  12. அட! அருமையான கருத்து

    துளசி, கீதா

    ReplyDelete
  13. சில நேரங்களில் பழம்பாடல்களுக்கு பதவுரை பொருளுரை தேவைப்படுதல் போல் சிலசமயங்களில் நீங்கள் சொல்ல வருவதற்கும் தேவைப்படுகிறது பின்னூட்டங்கள் மூலமறிந்தேன்

    ReplyDelete
  14. அருமையான கருத்து.

    ReplyDelete
  15. உண்மைதான் வாயும் ,கண்ணையும் மூடினால் நிம்மதி தான் ஐயா!

    ReplyDelete