Wednesday, July 5, 2017

வாடித் தவிக்குது பதிவர் உலகு

வாடித் தவிக்குது பதிவர் உலகு -நீங்கள்
வாரா திருப்பதாலே-இருள்
மூடத் துடிக்குது பதிவர் உலகு -நீங்கள்
எழுதா திருப்பதாலே

தேரின்றி நடக்கும்
திருவிழா போலவும்
நீரின்றித் தவிக்கும்
காவிரி போலவும்

கண்ணனைக் காணாத
கோகுலம் போலவும்
வெண்நிலவைத் தேடும்
வானமதைப் போலவும்

வண்ணமதைப் பூணாத
ஓவியத்தைப் போலவும்
வண்ணமலர் இல்லாத
பூங்காவைப் போலவும்

கோலமது வரையாத
வெளிவாசல் போலவும்
தாளமது சேராத
சுகராகம் போலவும்

வாடித் தவிக்குது பதிவர உலகு -நீங்கள்
வாரா திருப்பதாலே-இருள்
மூடத் துடிக்குது பதிவர் உலகு -நீங்கள்
எழுதா திருப்பதாலே

பதிவர் மனமதில் உள்ளதனை-இங்கே
பதிவாய்  நானும் தந்து விட்டேன்
இனியும் தாமதம் செய்யாது-பதிவினைத்
தந்தெமை மகிழ்ந்திடச் செய்வீரே

(எழுதாது இருக்கும் நம்  மனம் கவர்ந்த
பதிவர்கள் அனைவருக்கும்
பதிவர்கள் சார்பில் ஒரு வேண்டுகோளாய்  )

16 comments:

  1. தலைப்பைப் பார்த்ததும்

    ’வாடி என் கப்பக்கிழங்கே’ என்று ஆரம்பிக்கும்
    சினிமா பாடல் வரிகள் நினைவுக்கு வந்து ஹிம்சித்து விட்டது. :)

    ReplyDelete
  2. பதிவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து, வலைப்பதிவினில் எழுத வரவேற்கும் அற்புதமாக ஆக்கம். பாராட்டுகள்.

    ReplyDelete
  3. ஒவ்வொரு வரியினிலும் உள்ள உதாரணங்கள் மிகவும் அருமையாக வந்து அவைகளாகவே விழுந்துள்ளன.

    அதுதான் தங்களின் தனிச்சிறப்பு.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அனைவர் மனதில் உள்ளதை சொல்லி விட்டீர்கள்

    ReplyDelete
  5. வரனும், எல்லாரும் வரனும்... பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரனும்

    ReplyDelete
  6. அருமை.....எங்கள்/ நம் எல்லோர் மனதிலும் இருப்பதை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.....வரணும் எல்லோரும்....

    ReplyDelete
  7. வரப் போறீங்களா இல்லையா ?தூங்கும் போதும் காலாட்டிகிட்டே இருந்தால்தான் ,உங்களின் இருப்பை இந்த உலகம் நம்பும் :)

    ReplyDelete
  8. வந்திட்டேன்ல திரும்பி வந்துடேன்ல......

    ReplyDelete
  9. வரவேண்டும் எல்லோரும் என்பதே என் ஆசையும் . அருமையான அழைப்புக்கவிதை ஐயா!

    ReplyDelete
  10. பதிவுலகுக்கு எல்லோரையும் வரவேற்கும் கவிதை அருமை.

    ReplyDelete
  11. அருமை என் ஏக்கமும் அதுவே!

    ReplyDelete
  12. சில நேரங்களில் இந்த மாதிரியான உயர்வு நவிற்சி அணியுள்ள எழுத்தும் தேவைதானோ என்னவோ

    ReplyDelete
  13. அனைவரையும் எழுத தூண்டும் ஆவல் மிகு வரிகள்...

    ReplyDelete
  14. அருமை... நல்லதொரு மாற்றம் வரட்டும்...

    ReplyDelete
  15. அய்யா, நானும் ஒருமாத இடைவெளிக்குப் பிறகு இன்று எழுதிவிட்டேன்! நன்றி

    ReplyDelete
  16. பதிவுலகத்திலிருந்து பலரும் விலகி இருப்பது வருத்தம் தருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நானும் பதிவுலகம் வருவதில் சிக்கல்கள்.....

    நல்லதொரு மாற்றம் வரட்டும்.

    ReplyDelete