Tuesday, May 1, 2018

பகைவரை முற்றாய் வெல்லப்போகிறோம் ?

நம் பகைவர்கள் நம்மை வெல்ல
முன்புபோல்
தம் படைப்பலம் பெருக்குவதில்லை
முன்புபோல்
தம் ஒற்றர்களையும் நம்புவதில்லை

மாறாக நம்முள்
நன்கு பேசத் தெரிந்த சிலரைத்
தங்கள் துணையாக்கிக் கொள்கிறார்கள்
அவர்கள் மூலம் நம்மை எப்போதும்
பதட்டத்திலேயே வைத்திருக்கச் செய்கிறார்கள்

பதட்டத்தில் எப்போதும் இருக்கும் நாம்
இயல்பாக நம் சுயம் இழக்கிறோம்
அதன் காரணமாகவே நம்
கடமைகளையும் மறக்கிறோம்

எங்கோ சில கயவர்கள்
செய்யும் அட்டூழிங்களை அவர்கள்
ஜாதிக்குள்ளும் மதத்திற்குளும்  அடக்கி
நம்மை கொந்தளிக்கச் செய்கிறார்கள்

போராட்டப் போதையில் நம்மை
எப்போதும் இருக்கவைத்து
நேர்மறையான பல விஷயங்களை
நம்மை பார்க்காதே செய்துவிடுகிறார்கள்

உடனிருந்து கொல்லும் நோயாய்
நம்முடனிருந்து நம்மை
நாளும் வீழ்த்தும் இவர்களை
என்று அடையாளம் காணப்போகிறோம் ?

நாம், நம் குடும்பம்,நம் நாடு எனும்
நமக்கான விஷயங்களில்
கவனம் கொள்ளப்போகிறோம் ?
பகைவரை முற்றாய் வெல்லப்போகிறோம் ? 

3 comments:

  1. இவர்களுக்கு பகைவர்கள் யார் என்ற புரிதலே இல்லாத போது யாரை வெல்லப் போகிறார்கள்

    ReplyDelete
  2. நமக்குள்ளேயே தெளிவு தேவை...

    ReplyDelete