Thursday, December 6, 2018

நம்மவரின் நூல் வெளியீட்டு விழா


நேரடிப் பரிட்சியமின்றி பண்புநலனையும்  புகழையும் கேள்விப்பட்டு நட்பு கொண்ட கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் போல தாய்மையின் கனிவுடன் இன்றைய இளைஞர்பால் கொண்ட அதீத அக்கறையுடனும் தொடர்ந்து மிகச் சிறப்பானப் படைப்புகளை வழங்கிவரும் திருமிகு கௌசிசிவபாலன்  அவர்களின் அதி தீவிர இரசிகன் நான்.நல்லவர்கள் வல்லவர்களாகவும் ஆனால் நாடு எத்தனை நலம் பெறுமோ அதனினும் சிறந்ததை பயனுள்ளதை  மட்டுமே எழுதுபவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும் பாண்டித்தியம் மிக்கவர்களாகவும் இருப்பின் இலக்கிய உலகம் இன்னும் பல உன்னத பொக்கிஷங்கள் பெறும் என்பதற்கு எழுத்தில் பன்முகத் திறன் கொண்ட கௌசி சிவபாலன் அவர்களே நல்ல உதாரணம். அவரது மூன்றாவது வெளியீடான
நாளை (8/12/2018)நடைபெற இருக்கும்       "வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் " நூல் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக அமைய தமிழ்ப்பதிவர்கள் சார்பாக என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

9 comments:

  1. திருமிகு கௌசி சிவபாலன் அவர்களுக்கு வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. கௌசிஅவர்கள் என் வாழ்த்துச் செய்தி கண்டு அலைபேசியில் தொடர்பு கொண்டுமகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.பதிவர்சந்திப்பு குறித்தும் விசாரித்தார்.

      Delete
  2. ஆஹா..... நாளை 08.12.2018 என் ஆங்கிலப் பிறந்த நாளை முன்னிட்டு, புதிய நூல் வெளியிட உள்ளார்களா? வெரிகுட். மிக்க மகிழ்ச்சி. நூல் வெளியீட்டு விழா வெற்றிகரமாக அமைய என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    தங்கள் வாயிலாக இதுபோன்ற அறிமுகம் கிடைக்கப்பட்டுள்ளது மேலும் சிறப்பாக உள்ளது. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ரமணி, ஸார்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. ஆஹா மகிழ்ச்சி .உங்கள்ஆங்கிலப் பிறந்த நாளுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.(இது அவர்களின் நூல் வெளியீட்டு விழாவிற்கு நான் நேரடியாக அனுப்பி இருந்த வாழ்த்துச் செய்தி பதிவர்களுக்கும் இச்செய்தி தெரியட்டும் என்று அப்படியே பதிவாக்கி விட்டேன் )

      Delete
  3. நூலாசிரியருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்து அவருக்கு இன்னும் அதிக ஊக்கம் தரும் நன்றி சார்

      Delete
  4. நூலாசிரியருக்கு வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  5. அன்பின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள்! அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete