Thursday, December 27, 2018

கண்காணும் தெய்வங்கள்

கையில் சூலம் கொண்டோ
தோளில் சிலுவை சுமந்தோ

ஒளியாய் திருவாய் மலர்ந்தோ
கடவுள் நம்மிடம் வருவதில்லை.

விழும் போது தூக்கி விடுவோரும்
தாழ்ந்த போது தோள் கொடுப்பவரும்

புன்னகையை பரிசாக கொடுப்பவரும்
பசியறிந்து உணவிடுவோரும்

பிற உயிரை தன்னுயிராய் நேசிப்போரும்
மழலையின் மொழியில் மயங்குவோரும்

புண்ணியம் செய்து வாழ்பவர்களும்
எல்லோரும் கடவுளின் வடிவங்களே

புரிந்தவன் கடவுளை காண்கிறான்
புரியாதவன் கடவுளை தேடுகிறான்.           இது புரியாது                                     
கடவுளை ஏசுபவன் மட்டுமல்ல.         பூஜை செய்வோனும் அடிமுட்டாளே           (படித்தது பகிரப் பிடித்தது )

3 comments:

  1. பிறரிடம் தன்னை காண்பவன் தெய்வமனம் கொண்டவன்...

    ReplyDelete
  2. சொல்லப்பட்ட செய்திகள் எனக்கும் பிடித்தது

    ReplyDelete