Sunday, January 13, 2019

பதிவர்களுக்கு....

படுத்தபடி விழிமூடி
யோசித்துக்கொண்டிருப்பவன்
தான் தூங்கவில்லை என
நிரூபணம் செய்வதற்காக
காலையாட்டிக் கொண்டிருப்பதைப் போலவேனும்

பதிவுகள் எழுத
நேரமில்லையாயினும்
தொடர்பில் இருக்கிறோம் என்பதை
நிரூபணம் செய்வதற்காகவேணும்
பின்னூட்டமிட்டுக் கொண்டாவது இருப்போம் வாரீர்
( எனக்கும் சேர்த்துத்தான் )

பசுஞ்சோலை மாலையாய்
திருவிழாவின் கோலாகலமாய்
இணைப்புக்கும் மனமகிழ்வுக்கும்
ஆதாரமாய் இருந்த பதிவுலகு...

இன்று இருண்டு
திருவிழா முடிந்த
மறு நாள் மைதானமாய்
வெறிச்சோடிக் கிடப்பது
உங்களைப்போல்
எனக்கும் உடன்பாடில்லை

பேரெழுச்சியின் துவக்கமாய்
இத்தைத் திருநாள் முதலேனும்
பின்னூட்டமிடுதல் மூலமோ
பதிவுகள் மூலமோ
பண்டைச் செழிப்பை
மீண்டும் நிலை நிறுத்துவோம் வாரீர்

எழுத்தின் மூலம்
அகம் கண்டுத் தொடர்ந்து
சந்திப்பின் மூலம்
முகம் கண்டு மகிழ்ந்த
அந்த வஸந்த நாட்களை
இன்று முதல்
மீட்டுருவாக்கம் செய்வோம் வாரீர்

(எம் மதிப்பிற்குரிய கரந்தையாரின்
பதிவின் தாக்கத்தில் எழுதியது
அவருக்கு என் மனப்பூர்வமான
நல்வாழ்த்துக்கள்

பதிவர்கள் அனைவருக்கும் இனிய
பொங்கல் திரு நாள் நல்வாழ்துக்கள் )

14 comments:

  1. இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்துக்கள்

    ReplyDelete
  2. நான் இன்றுவரை பதிவு எழுதுவதிலும், பிறருக்கு பின்னூட்டமிடுவதிலும் முன்னோக்கியே செல்கிறேன்...

    இறுதிவரை வேண்டும் இப்பாக்கியம் எமக்கு.

    உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. KILLERGEE Devakottai //

    ஆம் இதில் மாற்றுக் கருத்து
    யாருக்கும் இருக்கச் சாத்தியம் இல்லை
    தங்களைப் போல் தொடர்ந்து எழுதும்
    சிலரைப்பற்றி எழுத உத்தேசமிருக்கிறது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Avargal Unmaigal //பதிவர்கள் இல்லம் போய் இதுவரை
    பலரைச் சந்தித்திருக்கிறேன்
    ஆயினும் தங்கள் இல்லம் வந்து
    தங்களையும் தங்கள் குடும்பத்தாருடன்
    இருந்த அந்த சில மணி நேரங்களே
    முதன்மையானதாய் பசுமையானதாய்
    என நெஞ்சில் நிறைந்திருக்கிறது என்றால்
    அது மிகையில்லை
    தங்கள் வாழ்த்து மிக்க மகிழ்வளிக்கிறது
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. உங்கள் கருத்தை வழிமொழிகிறேன். பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. பதிவுலகு உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம் தங்களைப் போன்றவர்களின் தொடர்ந்த பங்களிப்பே காரணம் எனப் பதிவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்

    ReplyDelete
  7. தங்கள் கருத்து வரவேற்கிறேன்

    ReplyDelete
  8. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  9. அப்படியே தொடர்கிறேன் ஐயா...

    ReplyDelete
  10. நிச்சயம் தொடர்ந்து செய்வோம் அண்ணா ..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. சகோதரர் ஜெயக்குமார் சொன்னதை செயல்படுத்த ஆரம்பித்ததுடன் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கும் உற்சாகம் எல்லோரையும் காட்டிலும் இளைஞராக உங்களை காண்பிக்கிறது! இந்த உற்சாகம் அனைவரையும் பற்றிக்கொள்ளட்டும்!

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. Hi there, just became aware of your blog through Google, and
    found that it is truly informative. I am gonna watch out for brussels.
    I will appreciate if you continue this in future. A lot of people will be
    benefited from your writing. Cheers!

    ReplyDelete
  13. //பதிவுகள் எழுத நேரமில்லையாயினும், தொடர்பில் இருக்கிறோம் என்பதை நிரூபணம் செய்வதற்காகவேணும், பின்னூட்டமிட்டுக் கொண்டாவது இருப்போம் வாரீர் ( எனக்கும் சேர்த்துத்தான் )//

    நல்லதொரு ஆலோசனை. அனைவரும் முடிந்தவரை முயற்சிக்கலாம். ‘தை’ பிறந்துவிட்டது. வழி பிறக்கட்டும்.

    ReplyDelete
  14. வாழ்த்துகள் தோழர்
    நட்பின் வழியில்
    சோலச்சி

    ReplyDelete