Sunday, September 22, 2019

மனச்சாட்சியும் அரசியல் தெளிவும்

"மன்னராட்சியின் நீட்சியாய்
வாரீசுக்கு பட்டம் சூட்டிய
மேடையிலேயே
ஜனநாயகத்தின் சிறப்புக் குறித்து
எப்படிப் ,பேசுவது "

கடைசிச் சொட்டு இரத்தம் போல
கடைசி முயற்சியாய்
மெல்ல முனகியது மனச்சாட்சி..

"குவாட்டருக்கும்
நூறு ரூபாய் பணத்திற்கும்
காத்திருக்கும் கூட்டத்தில்
இதை மட்டுமல்ல
 எதையும் பேசலாம்
 எப்படியும் பேசலாம் "
என எக்காளமிட்டது
அரசியல் தெளிவு

4 comments:

  1. //என எக்காளமிட்டது
    அரசியல் அறிவு..

    என எக்காளமிட்டது 'களவாணி பயல்களின்' அரசியல் அறிவு

    ReplyDelete
  2. சவுக்கடி வார்த்தைகள் கவிஞரே...

    ReplyDelete