Sunday, March 1, 2020

இது உணவுக்காக மட்டும் சொல்லப்பட்டதில்லை..

முன்பு போல..                                        உறவினர்களையோ நண்பர்களையோ        சௌகரியமாக அமரவைத்து  நீங்கள் பார்த்துப் பார்த்துச்  சமைத்த உணவைப் பறிமாறி அவர்கள் மகிழ்வதைக் கண்டு          மகிழ எண்ணாதீர்கள்                                                                                                                  காரணம் முன்பு போல. சாவகாசமாய் அமர்ந்து இரசித்து உண்ணும் மனநிலையில்  அவர்கள் இப்போது இல்லை                                                                                                                    மேலும் முன்பு போல எந்த உணவையும்   உட்கொண்டு செரிக்கும்  உடல் நலமும்   இப்போது அவர்களுக்கில்லை                                                                                                  எப்போதும் அவர்களிடம் எந்த எந்த உணவினை ஏற்க வேண்டும் எவை எவைகளை தவிர்க்க வேண்டும்  என்ற "அவரவர்களின் மருத்துவர்கள் ' அளித்த பட்டியல்கள்   கைவசம் உள்ளது         அதன்படித்தான் அவர்கள் உண்கிறார்கள்                                                                              ஆகவே....                                                              எத்தனை ருசியாகச்  சமைத்த. உணவாயினும்  அதற்கான இடத்தில்   வைப்பதோடு  அப்படி வைத்த தகவலைப் பறிமாறுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்                                                                          பசித்தவர்கள் உண்ணட்டும்                        கொறிப்பவர்கள் கொறிக்கட்டும்                தவிர்ப்பவர்கள் தவிர்க்கட்டும்..                      

11 comments:

  1. சிந்திக்க வேண்டிய தவைப்பும் அருமை...

    ReplyDelete

  2. இப்படி செய்வது எனக்கு பிரச்சனை ஆச்சே...... நான் சமைப்பதை வீட்டிற்கு வருபவர்களிடம் திணிக்காவிட்டால் எனக்கு தூக்கம் வராதே....


    நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் எனது உணவை மிகவும் ருசித்து சாப்பிடுபவர் இப்போது அவரின் உடல் நிலை காரணமாக இப்போது ஃபேமிலி கள் சந்திப்பின் போது வருவது இல்லை... அவர் மணைவியும் குழந்தையும் மட்டுமே வருகிறார்கள் வந்தால் ஆசையாக உண்டுவிட்டு அதன் பின் அவதிப்பட வேண்டாம் என்பதால்...அதற்காவே அந்த குருப்பை என் வீட்டிற்கு கூப்பிடுவதை சற்று தவிர்த்தே வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. உணவைச் சொல்லுகிற சாக்கில் நம் கருத்தினை பகிர்வதைச் சொல்ல முயன்றிருக்கிறேன்

      Delete
    2. தங்கள் லீட்டில் சாப்பிட்ட கத்தறிக்காய் காரக்கறி சாம்பார் சப்பாத்தியின் சுவை இப்போதுவரை நினைவில் சுவையாய்...அதற்காகவேணும் இன்னொரு முறை அமெரிக்கா வர நினைத்துள்ளோம்..அந்தவகையில் உங்கள் வீட்டு உணவு குறித்தக் கருத்தை ஆணித்தரமாக மறுக்கிறேன்..

      Delete
  3. உண்மைதான். தங்கள் வலைப்பதிவின் பெயரைப் போலத்தான்.... தீதும் நன்றும் பிறர் தர வாரா......

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக எட்டு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது இது உணவுக்காக மட்டும் சொல்லப்பட்டதில்லை… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  4. ஆனாலும், ரசிப்பவர்களும் இருக்கிறார்கள்.  நான் உணவைச் சொல்கிறேன்!

    ReplyDelete
  5. உணவைச் சொல்லும் சாக்கில்... நல்ல யுக்தி.

    இருப்பதைச் சொல்லுவோம். எடுத்துக் கொள்வதும், விடுப்பதும் அவரவர் விருப்பம்.

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. முன்பு போல் வயிறார சாப்பிடுகிறவர்களும் இல்லை. நிறைய விதவிதமாக சமைத்து போடும் பொறுமையும் இப்போது யாருக்கும் இல்லை.

    அதே மாதிரி வருகிறவர்களிடம் உங்களுக்கு இந்த உணவு ஒத்துக்குமா என கேட்க வேண்டியுள்ளது அப்படி கேட்பதையும் இப்போதெல்லாம் (இருசாராரும்) யாரும் விரும்புவதுமில்லை. எனவே தாங்கள் கூறுவது முற்றிலும் சரி..

    /பசித்தவர்கள் உண்ணட்டும் கொறிப்பவர்கள் கொறிக்கட்டும் தவிர்ப்பவர்கள் தவிர்க்கட்டும்../

    நிறைய வெரட்டிகள் செய்து முன்பு மாதிரி எதிர்பார்த்து தவிக்க வேண்டாம். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. உணவு பரிமாறும் போது செய்ய வேண்டியபயிற்சி உணவு பரிமாறும்போது தலைய பக்கவாட்டில் திருப்பி அசைக்க வேண்டும்

    ReplyDelete
  8. வேகமாக அசைத்தல் நல்லது

    ReplyDelete