Wednesday, March 11, 2020

அது இது இருந்தாலும்..

உப்பும் உரப்பும்
சரியா இருந்தாலும்
சத்தும் இருக்கணும் தம்பி-உடம்புக்கு
அதுதான் உரம் சேர்க்கும் தம்பி

நிறமும் அழகும்
நிறைஞ்சு இருந்தாலும்
மணமும் அவசியம் தம்பி-பூவை
அதுதான் சிறப்பாக்கும் தம்பி

தாளமும் இராகமும்
ஒத்து இருந்தாலும்
பாவமும் சேரணும் தம்பி-பாட்டை
அதுதான் அமுதாக்கும் தம்பி

எடுப்பும் தொடுப்பும்
இதமா இருந்தாலும்
முடிப்பதும்  அமையணும்  தம்பி-எதையும்
அதுதான்  நிறைவாக்கும் தம்பி 

எதுகையும் மோனையும்
அழகா இணைஞ்சாலும்
கருவும் அவசியம் தம்பி-கவிக்கு
அதுதான் உயிர்ச்சேர்க்கும் தம்பி

7 comments:

  1. அது இருந்தாலும், இது இருந்தாலும் அதில் எது முக்கியமா இருக்கணும் என்று தெளிவாகி சொல்லிட்டீங்க!

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே

    அழகான கவிதை.

    /எதுகையும் மோனையும்
    அழகா இணைஞ்சாலும்
    கருவும் அவசியம் தம்பி-கவிக்கு
    அதுதான் உயிர்ச்சேர்க்கும் தம்பி/

    உண்மைதான்.. இது போல் தாங்கள் கூறிய எல்லாவற்றிலும் இறுதியில் பொருத்தமான வாக்கியங்கள் பொருத்தமாக பொருந்தியபடி இருப்பதை ரசித்தேன். நல்ல சிந்தனை அருமை..! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. அருமை. சிறப்பான பதிவு.

    ReplyDelete
  4. தங்கள் பதிவின் குறிப்பிட்ட பகுதியில் Page Break தெரிவை பயன்படுத்தவும்.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது அது இது இருந்தாலும்.. பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  5. கவிக்கு கருவும் அவசியம் - சிறப்பான உதாரணங்களோடு சொன்ன விதம் நன்று. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete