Tuesday, April 14, 2020

நம் நாடே வழிகாட்டி ஆகும்

நித்தம்
உடல்தேடி அலையுதுங்க கொரோனா..நம்ம
ஊரெல்லாம் உலகெல்லாம கொரோனா..அதுக்கு
உடலேதும் கிடைக்காது போனா...அதுவா
உடனழிஞ்சு போகுமுங்க நெஜமா..

அதுக்கு
பணக்காரன் ஏழையென்ற கணக்கோ..பெரும்
முதலாளி தொழிலாளி நெனைப்போ..உசந்த
இனமென்ற  மதமென்ற பிரிப்போ....எதுவும்
இல்லாததே கொரோனாவின் சிறப்பே
                                                                     
நோயாளி
மூனடிக்குள் இருந்தாலே போதும்...முகத்தை
மறைக்காது தும்மினாலே போதும்..தொத்து
நேரடியா நம்மேலே தொத்தும்...பின்னே
நம்மைவச்சு ஊரெல்லாம் சுத்தும்..
                                                                     
தொடர்ந்து
எரிவதற்கு ஏதுமின்றிப்  போனா..எந்த
நெருப்பதுவும் அணைஞ்சுபோகும் தானா..அதுபோல்
பிடிப்பதற்கு உடலின்றிப் போனா...தானே
அடங்கிவிடும் ஒழிந்துவிடும் கொரோனா

அதுக்கு
ஊரடங்கை மதித்திருந்தா போதும்..நாம
வீதிக்கு வராதிருந்தா போதும்...கொரோனா 
வேரற்ற மரம் போல வீழும்...உலகுக்கு நம்நாடே வழிகாட்டி ஆகும்...

4 comments:

  1. உலகுக்கு நம் நாடே வழிகாட்டி ஆகும்...

    சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள். வீட்டிலே இருப்போம். கிருமியை விரட்டி அடிப்போம்.

    நலமே விளையட்டும்.

    ReplyDelete
  2. ஊரடங்கு மேலும் தொடர்வதும் அனைவரின் கையில்...

    தொடர்ந்தால் அனைவருக்கும் சிரமம்...

    ReplyDelete
  3. ஊரடங்கை மதிப்போம். வீட்டுக்குள் இருப்போம்.

    ReplyDelete
  4. கொரோனா கொடுமையானது தான்
    எல்லோரும் பாதுகாப்பாக இருப்போம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    ReplyDelete