Wednesday, May 20, 2020

வாழ்வை இரசித்து வாழ்வோம்

நிழலைத் தொடர்பவனோ
அது குறித்த நினைவிலேயோ
பயணத்தைத் தொடர்பவனோ
நிச்சயம் இலக்கினை அடைவதில்லை

நிழல் தொடரத்தான் வேண்டும்
அது விதி என்றுணர்ந்தவனே
எல்லையினைக் கடக்கிறான்

கூலி குறித்தோ
பயன் குறித்த கற்பனையிலோ
கடமையினைச் செய்கின்றவன்
நிச்சயம் உயர்வடையச் சாத்தியமில்லை

உழைப்பின் மதிப்பின் கீழ்
கூலியிருக்க விரும்புபவனே
அடையாததையெல்லாம்  அடைகிறான்

நேற்றைய சுகங்களில்
நாளைய கற்பனையில்
இன்றினைத் தொலைப்பவன்
நிச்சயம் வெற்றிகாண வாய்ப்பேயில்லை

நேற்றும் நாளையும்
இன்றின் விளைவெனத் தெளிந்தவே
என்றும் எப்போதும் வெல்கிறான்

அந்த அந்த நொடியில்
விழித்து உயிர்த்து இருத்தலே
ஞானம் எனத் தெளிவோம்

என்றும் எங்கும் எப்போதும்
உடலிருக்குமிடத்தில் மனம் வைத்து
தொடர்ந்து வாழ்வை ரசிப்போம்

7 comments:

  1. வேறு வழியில்லையென்றாலும் அவ்வாறே...

    ReplyDelete
  2. அருமை
    வாழ்வை ரசிப்போம்

    ReplyDelete
  3. நேற்றைய நிகழ்வு இன்றைய பாடம். இன்றைய பாடம் நாளைய அனுபவம்.

    ReplyDelete
  4. அதாவது : " Live the present " ,என்ற தத்துவத்தைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஓஷோ வும் இதையே சொன்னதாக கேள்வி.
     Jayakumar

    ReplyDelete
  5. இன்றின் விளைவெனத் தெரிந்தவே - தெரிந்தவனே?

    நல்ல கவிதை. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு பாடம். உணர்ந்தால் உயர்வு.

    ReplyDelete
  6. மனிதனாய்
    மகிழ்வதற்கான
    சிந்தனை!

    ReplyDelete
  7. மனிதனாய்
    மகிழ்வதற்கான
    சிந்தனை!

    ReplyDelete