Saturday, June 20, 2020

தொடர் முயற்சி

எப்போதேனும்
கூடுதல் எடை கொண்ட
யானைக் கூட்டம்
பாறையினைக் கடக்கப்
பதியாதத் தடம்...

தொடர்ந்து
எடையே இல்லா
எறும்புக் கூட்டம் கடக்கப்
பதிவதனைக் கண்டு
முன்பு  நான் ஆச்சரியப்பட்டதுண்டு..

பலவானும் பண்டிதனும்
அலட்சிய மனோபாவத்தால்
வெற்றி எல்லையைத்
தொடத் தடுமாறுகையில்....

பலவீனனும் பாமரனும்
தொடர்முயற்சியால்
மிக எளிதாய்த் தொடுதல் இப்போது
எனக்கு அதிசயமாகப் படவில்லை..

ஆம் அதன் காரணமாகவே
முயல் ஆமைக் கதையின்
முக்கியத்துவமும்
தொடர்ந்து முயலாமையின்
பேரிழப்பும் இப்போது
மிக எளிதாய்ப் புரிகிறது எனக்கு..

(சொல்லிக் கொள்ளும்படியான
மொழிப் பாண்டித்தியமோ
பண்டை இலக்கியப் பின்புலமோ
இல்லையெனினும் தொடர்ந்து
பத்தாண்டு காலமாக  எழுதுவதாலேயே
  131 நாடுகளை சார்ந்த சுமார் 6.25 இலட்சம்
பக்கப் பார்வையாளர்களை பெறமுடிந்தது
ஏறக்குறைய  50 ஆயிரம் பேர்களின்
மறுமொழியினையும்....அனைவருக்கும்
எனது மனமார்ந்த நன்றியினையும்
நல்வாழ்த்துக்களையும் இந்தப்  பதிவின் மூலம்
சமர்ப்பித்துக் கொள்கிறேன்.. அன்புடன் .
yaathoramani.blogspot.com 

6 comments:

  1. அருமை மிகவும் இரசித்தேன்

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே

    அருமையாக எழுதியுள்ளீர்கள். பத்தாண்டு காலமாக தொடர்ந்து எழுதி, உலகின் நிறைய பேர்களுக்கு பிடித்தமான பதிவராக திகழ்வதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    இன்னமும் நீங்கள் நிறைய சாதனைகளை தொடர்வதற்கு இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. அருமை

    வலைப்பூ தகவல்களுக்கு வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  4. சொல்லிக் கொள்ளும்படியான
    மொழிப் பாண்டித்தியமோ
    பண்டை இலக்கியப் பின்புலமோ
    இல்லை........என்ற வகையில் நினைக்கவேண்டாமே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நடை.
    மென்மேலும் சாதிக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. ஆஹா.... மகிழ்ச்சி ஐயா. தொடரட்டும் உங்கள் வலைப்பயணம்.

    ReplyDelete
  6. தொடர்ந்து எழுதுங்கள். மிக்க மகிழ்ச்சியான விஷயம். மேலும் மேலும் எழுத வாழ்த்துகள்

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete