Saturday, July 18, 2020

கொ .முன் ..கொ .பின்

அறிமுகமானவர்கள்
பழக்கமானவர்கள்
நண்பர்கள்

இப்படியொரு  நீண்ட பட்டியல்
வெகு நாட்களாய்  என்னிடமிருந்தது .

உங்களிடமும் இருக்கக்கூடும்

கொரோனாவுக்கு முன்
இப்பட்டியல்  முரணின்றி
வரிசைக்கிரமமாகவே
இப்படித்தான் இருந்தது ..

கொரோனாவுக்குப் பின்
ஏனோ இதில் பெரும் வரிசைக்  குழப்படி ..

புதிய அறிமுகம்  ஏதுமில்லை
அது ஒரு பிரச்சனையில்லை

பழக்கமானவர்கள் பலர்
அறிமுகமானவர்கள்  போலவும்
இது கூட  ஏற்றுக் கொள்ளக் கூடியதே

அறிமுகமானவர்கள் சிலர்
நண்பர்கள் போலவும்
இது இந்தச் சூழலில்  பாராட்டப்படக் கூடியதே

ஆயினும்
மிக நெருங்கிய  நண்பர்கள்
அல்லது
அப்படி நம்பிக் கொண்டிருந்த  நண்பர்கள்
பழக்கமானவர்கள் ஆகிப்  போனதைத்தான்
ஜீரணிக்கமுடியவில்லை

ஆயினும்  என்ன
பட்டியலை மிகச் சரியாக
வரிசைப்படுத்தியமைக்காக
கொரோனாவுக்கு நன்றி சொல்லிப் போகிறேன்

பட்டியலை  நீங்களும் சரிபாருங்கள்
நீங்களும் ஒருவேளை
நன்றி சொல்ல வேண்டியதாக இருந்தாலும்  இருக்கும்   


4 comments:

  1. உண்மை தான்... வியாபார ரீதியிலும், நட்பு ரீதியிலும், பலரை உணர்ந்து கொண்டே இருக்கின்றேன்...

    ReplyDelete
  2. எல்லோருக்கும் வரும் அனுபவம்...

    ReplyDelete
  3. மிக நெருங்கிய நண்பர்கள்
    அல்லது
    அப்படி நம்பிக் கொண்டிருந்த நண்பர்கள்
    பழக்கமானவர்கள் ஆகிப் போனதைத்தான்
    ஜீரணிக்கமுடியவில்லை

    இதனையும் ஒரு வாழ்வியல் அனுபவமாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்

    ReplyDelete