சிலிர்க்கச் செய்து
மனச் சொடெக்கெடுத்துப் போகும்
ஒரு அற்புதப் படைப்பு...
நம் பின்னடைவுத் தூரத்தை
மிகத் தெளிவாய்ச் சுட்டிக்காட்டி
நம்முள் ஒரு வெறுமையை
விதைத்துப் போக...
நாம் இனியும்
எழுதத்தான் வேண்டுமா எனும்
எதிர்மறை எண்ணத்தை
விளைவித்துப் போக...
படித்ததும் சட்டென
முகம் சுழிக்கச் செய்வதோடு
மனக் கசப்பையும் கூட்டிப் போகும்
ஒரு மோசமான படைப்போ
நம் கருத்தேர்வை
நம் மொழிப் பாண்டித்தியத்தை
நாம் உணரும்படியாய்
நமக்கே விளக்கிப் போக
நாம் இனிதான்
அவசியம் எழுதுதல் வேண்டுமெனும்
நேர்மறை உணர்வினை
உசுப்பேற்றிப் போகிறது
அதற்காக வேணும் இனி
மோசமான படைப்புகளும்
நிச்சயம் வேண்டியதே...
மனித்த பிறவியும்
வேண்டுவதே இந்த மாநிலத்தே
என்பதைப் போலவே...
மனச் சொடெக்கெடுத்துப் போகும்
ஒரு அற்புதப் படைப்பு...
நம் பின்னடைவுத் தூரத்தை
மிகத் தெளிவாய்ச் சுட்டிக்காட்டி
நம்முள் ஒரு வெறுமையை
விதைத்துப் போக...
நாம் இனியும்
எழுதத்தான் வேண்டுமா எனும்
எதிர்மறை எண்ணத்தை
விளைவித்துப் போக...
படித்ததும் சட்டென
முகம் சுழிக்கச் செய்வதோடு
மனக் கசப்பையும் கூட்டிப் போகும்
ஒரு மோசமான படைப்போ
நம் கருத்தேர்வை
நம் மொழிப் பாண்டித்தியத்தை
நாம் உணரும்படியாய்
நமக்கே விளக்கிப் போக
நாம் இனிதான்
அவசியம் எழுதுதல் வேண்டுமெனும்
நேர்மறை உணர்வினை
உசுப்பேற்றிப் போகிறது
அதற்காக வேணும் இனி
மோசமான படைப்புகளும்
நிச்சயம் வேண்டியதே...
மனித்த பிறவியும்
வேண்டுவதே இந்த மாநிலத்தே
என்பதைப் போலவே...
தாங்கள் இனிதான்
ReplyDeleteஅவசியம் எழுதுதல் வேண்டும்
சரிதான்...
ReplyDeleteமனித்த பிறவி அவ்வளவு மோசமானதா? உள்ளதிலேயே உயர்ந்த பிறவி மனிதனாய் பிறப்பது என்றல்லவா இருந்தேன்.
ReplyDeleteJayakumar
இருப்பதும் இல்லாததும் நம்கையிலா
ReplyDeleteஆம் எழுதுங்கள்
ReplyDeleteசில நாள் வாழ பல தவறு செய்வதே மனித பிறவி .. ..
ReplyDeleteநாம் இனியும்
ReplyDeleteஎழுதத்தான் வேண்டுமா .. ஆம் நீவீர் இனியும் எழுதத்தான் வேண்டும்.