Wednesday, August 12, 2020

காரணம் தெரியவில்லை..

 கூடிய வயதால்

வந்த முதிர்ச்சியா..


கொரோனாக் கொடுமைகளைக் 

காண வந்த தளர்ச்சியா...


உடன் பயணித்தோரை

தொடர்ந்து இழக்கும் அதிர்ச்சியா...


காரணம் எதுவெனத் தெரியவில்லை..


ஆனால்

இப்போதெல்லாம்

சந்திக்க நேர்பவர்களையெல்லாம்...


முன் அபிப்பிராயம் ஏதுமின்றி

முதல் சந்திப்பாகவே எண்ணி

உறவாடத் துவங்குகிறேன்


கடைசிச் சந்திப்பாகவும் இருக்கலாம் எனும்

பயத்துடனும் அதீத அக்கறையுடனும்..

தொடர்பு கொள்கிறேன்


சந்திப்பு மிக இனியதாகவே

பயனுள்ளதாகவே தொடர்கிறது


இப்போது வந்து தொலைத்த

இந்தப் பட்டறிவு

இளமையிலேயே                                                        கற்ற அறிவாய்                                                  வந்து தொலைத்திருக்கலாமே

எனத் தோன்றும்  எண்ணத்தை மட்டும்

ஏனோ புறக்கணிக்க முடியவில்லை...

9 comments:

  1. // இப்போது வந்து தொலைத்த
    இந்தப் பட்டறிவு //

    பல எண்ணங்கள் எழுகிறது ஐயா...

    ReplyDelete
  2. மாறிவரும் வாழ்க்கை பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது.

    ReplyDelete
  3. உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் மாற்றமே... இந்த கொரோனாவால்...

    ReplyDelete
  4. நாம் என்னதான் கற்றாலும் ஏட்டறிவை விட அனுபவ அறிவுதானே பட்டால்தானே தெரியும் என்பது போலதான்.

    கீதா

    ReplyDelete
  5. ஏற்கனவே தெரிந்ததை வழக்கப்படுத்திக்கொள்ள ஒரு காரணி தேவைப்படுகிறது

    ReplyDelete
  6. மிக அருமை.
    இது நிதர்சனமான உணர்வு. நேயம் அதிகரிக்கிறது.
    அன்பு வளர்கிறது.
    நுண்கிருமி போய் நல்லறிவு தேங்கட்டும். நன்றி ஐயா.

    ReplyDelete
  7. நல்லதொரு சிந்தனை. நலமே விளையட்டும்.

    ReplyDelete