Tuesday, September 15, 2020

எம்.ஜி.ஆரின் கதையும் நம் பதிவர் கதையும் ( 2 )

 தலைப்பில் சொன்னது போல்

எம்.ஜி.ஆரின் கதைக்கும் நம் பதிவர் கதைக்கும்

என்ன தொடர்பு ? அந்தப் பதிவர் யார் ? என

சென்ற பதிவை முடித்திருந்தேன்...


நல்ல சுவையான தண்ணீர் ஆயினும்

நெல்லிக்கனியை உண்டபின்  குடித்தால் கொஞ்சம்

கூடுதல் சுவை கிடைக்கச் சாத்தியம் உண்டு

அதைப் போல் முன் பதிவைப் படித்தபின் இதைப் படிக்க

கூடுதலாய் இரசிக்கவும் சாத்தியம்..உண்டு.


சரித்திரத்தை கி.மு. கி.பி என

பிரித்துக் கொள்வது எப்படி புரிந்து கொள்ள

வசதிப்படுகிறதோ அதைப் போலவே

தமிழகத்தைப் பொருத்தவரை இலக்கியமோ

அரசியலோ சினிமாவோ சமூகச் சூழலோ

மக்களின் மனோ பாவமோ எதுவாயினும்

அறுபத்து ஏழுக்கு முன் அதற்குப் பின்

என பிரித்துப் பார்க்கப் பழகிக் கொண்டோமேயானால்

எதையும் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும்


ஏனெனில் அறுபத்தி ஏழுக்குப் பின்

தமிழகத்தைப் பொருத்தவரை அனைத்து துறையிலும்

மிகப் பெரிய மாற்றமிருந்தது.


மிகப் பெரிய மாற்றம்

என்பதை விட இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும்

என்றால் தலைகீழ் மாற்றமிருந்தது 

எனக் கூடச் சொல்லலாம்..


குறிப்பாக சினிமாத் துறையில்.....

அதன் கதைப் போக்கில்..கதை சொல்லும் விதத்தில்..


சமூகப் படங்கள் எடுக்கத் துவங்கியபின்

ஏறக்குறைய எல்லாத் திரைப்படங்களின்

கதையமைப்பும் நல்லதாக இருக்கிற சூழல்

யாரோ ஒருவரின் தலையீட்டால்,

அல்லது எதோ ஒன்றின் காரணமாக

மிக மோசமான நிலையடைதலும் பின்

அது படிப்படியாய் சீரடைந்து முடிவில்

பழைய நிலையை அதாவது பழைய 

நல்ல நிலையை அடைவது போலவும் இருக்கும்


யாரோ ஒருவரின் தலையீட்டால் என்பது

அதிகமாக வில்லனின் தலையீட்டால் பெரும்பாலாக

எம்.ஆர். இராதா அவர்களின் தலையீட்டால் இருக்கும்


ஏதோ ஒன்றின் தலையீட்டால் என்பது

புதிய நாகரீகமாக இருக்கும்/ ஆணவமாக இருக்கும்

பேராசையாக இருக்கும்...


(பிரச்சனையை மையமாக ஒரு வரிக் கதையாக

வைத்து பின் விரிவு படுத்திய கதைகள் எல்லாம்

எண்பதுக்குப் பின்தான். )


அந்த வகையில் அமைந்த கதைகளுக்கு

சிறுகதையைப் போல பிரச்சனையை முன் சொல்லி

பின் அந்தப் பிரச்சனையை விளக்கி முடிவாக

தீர்வைச் சொல்கிற பாணி சரிப்பட்டு வராது

என்பதால்..


நாவல் போல்  முதலில் விஸ்தாரமாக 

சூழலை விவரித்துப் பின் அந்தச் சூழலில் ஏற்படும் 

பிரச்சனையைக் காட்டி பின் படிப்படியாய்

சுவாரஸ்யமாய் அதை விடுவிக்கும் பாணியே

அதிகம் கையாளப்பட்டது...


அந்தச் சூழலில் அதாவது அறுபத்து எட்டாம்

ஆண்டில் எம்.ஜி.ஆர் அவர்களின் கதை என்கிற

அடையாளத்தோடு வந்த கணவன் என்கிற படமே

சிறுகதை பாணியில் இருந்தது


 ஆம் சிறுகதை பாணியில் படத் துவக்கத்திலேயே

செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனை பெற்ற

ஒருவரைக் காட்டி...... 


அவரைத் திருமணத்தில் ஆர்வமே இல்லாத/

ஆண்கள் மீது வெறுப்புக் கொண்ட/ 


திருமணம் செய்து கொண்டால்தான் தான்

பயன் பெற முடியும் என்பதற்காக/


தன் தாலி அறுந்தாலும் பரவாயில்லை

என ஒரு யுவதி திருமணம் செய்து கொள்வதும்

பின் ஆண் வெறுப்பும் ஆணவமும்

எப்படிப் படிப்படியாய் சரிசெய்யப்படுகிறது

அல்லது அடக்கப்படுகிறது எனத் தொடரும்...


இந்த வித்தியாசமான பாணியை துவக்கி

வைக்கிறோம் என்பதாலேயே எந்தப் படத்திற்கும்

பெரும்பாலாக திரைக்கதை விஷயத்தில்

முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிற

புரட்சித் தலைவர் அவர்கள் முந்தைய

படங்களில் தன்னை கதை விஷயத்தில்

முன் நிறுத்தாத எம்.ஜி.ஆர் அவர்கள்

இதில் தன்னை கதாசிரியராக முன் நிலைப்

படுத்திக் கொண்டார் என்பது என் எண்ணம்


அந்த வகையில் சிறப்புப் பெற்ற 

வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்ட

படம் கணவன் என்பதைச் சொல்லவே

எம்.ஜி.ஆரின் கதை எனத் தலைப்பிட்டிருந்தேன்


அதன்படி தலைப்பில் முதல் பாதி சரி...

பின் பாதி....


யார் அந்தப் பதிவர்...அவருக்கும் கணவன்

படக் கதைக்கும் என்ன சம்பந்தம்....


நீளம் கருதி அடுத்தப் பதிவில்...  

18 comments:

  1. ஆவல் எழுந்(த்)தாலும், விடுவிக்கும் பாணி மிகவும் சுவாரஸ்யமாய் உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. முதல் வரவுக்கும் வாழ்த்துக்கு மிக்க நல்வாழ்த்துகள்..

      Delete
  2. Replies
    1. எனக்கு அந்தப் பதிவரின் கதை அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது..அதே ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்படவே இத்தனைபீடிகை...

      Delete
  3. சுவாரஸ்யமாக தொடர் செல்கிறது... நானும் யோசித்து பார்க்கிறேன் அந்தப்பதிவர் யாரென்று ?

    நிச்சயமாக அந்ததப்பதிவர் கில்லர்ஜி அல்ல!

    ReplyDelete
  4. கொஞ்சம் முயன்றால் உங்களால் சரியாக அனுமானிக்க முடியும் என நினைக்கிறேன்..நிச்சயமாக நீங்களில்லை என்பது ரொம்பச் சரி..

    ReplyDelete
  5. ஆவலோடு காத்திருக்கிறேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவில்....வாழ்த்துகளுடன்...

      Delete
  6. வணக்கம் சகோதரரே

    தாங்கள் படங்களை பற்றி சொன்ன கருத்துக்கள் ஸ்வாரஸ்யமாக இருந்தது. மிகவும் அழகாக விளக்கியுள்ளீர்கள். நீங்கள் படக்கதையை விளக்கியதால், எனக்கும் அந்தப் திரைப்படம் குறித்து லேசாக நினைவு வருகிற மாதிரி உள்ளது. ஆனால் பதிவர் பற்றி நீங்கள்தான் சொல்ல வேண்டும். அடுத்த பகுதியில் தெரிந்து விடுமென நினைக்கிறேன். அதனால் அடுத்ததை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. பதிவரை மிக எளிதாய் கண்டுபிடித்து விடமுடியும்.... யாரும் இதுவரை சொல்லாதது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது...இதைப்படிக்கிற அந்தப் பதிவருக்குமே நிச்சயம் ஆச்சரியமாகத்தான் இருக்கும்...

      Delete
  7. இல்லை...பதிவராக மட்டுமே யோசிக்காமல் அவர் எழுதிய பதிவின் மூலம் யோசித்தால் சட்டெனப் பெயரைச் சொல்லிவிடலாம்....

    ReplyDelete
  8. கணவன் படம் ரசிக்கக்கூடிய வகையில் எடுக்கப் பட்டிருக்கும்.  

    ReplyDelete
    Replies
    1. நான் மேலே குறிப்பிட்டுள்ளபடி முதன் முதலாக கொஞ்சம் மாறுதலாகச் சொல்லப்பட்ட கதை...

      Delete
  9. நீங்கள் சொல்லிச் செல்லும் விதமே பெரிய
    கதைக்கு அஸ்திவாரமாகிறது:)

    கணவன் படப் பாடல்கள் நினைவில்.
    பெண் பதிவரா.
    அடுத்த பதிவு எப்போது?
    ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  10. வரவுக்கும் பதிலுரைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

    ReplyDelete