Tuesday, September 1, 2020

புலிக் கூண்டுவிட்டு...சிங்கத்தின் குகையில்..

 *குழுவிலிருப்போர் அனைவரின் அன்பான  கவனத்திற்கு:*

********************


1) *நோய்த்தொற்றுப் பரவல் அதிகமாகிறது /  குறையவில்லை என்பதை மனதில் கொள்ளவும்*    *அரசு வேறு வழியில்லாமல் அதிக தயக்கத்துடன் இந்தத் தளர்வுகளை அறிவித்துள்ளது*.


2) *தடுப்பு மருந்து இன்னும் வெளிவரவில்லை*


3) *நோயை குணப்படுத்த நேரடியான மருந்து, மாத்திரை, ஊசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை*.


4) *பாடகர் திரு SPB அவர்கள்  50 நாட்கள் வீட்டிலிருந்தவர்*

   *ஒருநாள் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கு*   *பெற்றதனால்  சுமார் 25 நாட்களாக மருத்துவமனையில் இருக்கிறார்*


5) *பல மருத்துவமனைகள்  சாதாரண பிரச்னைக்கு போனாலே Covid19 Test எடுத்தபின் தான் வைத்தியம் தொடங்குகிறார்கள்*

*எனவே*....


*A) மிக மிக அவசியமான காரணத்திற்கு மட்டும் வெளியில் செல்லுங்கள்*.


*B) முகம்/வாய் இரண்டையும் முழுவதுமாக மூடக்கூடிய முகக்கவசத்துடன் செல்லுங்கள்.*


*C) யாருடனும் பேசும்போது முகக்கவசத்தை அகற்றாமல் பேசுங்கள்*.


*D) கடையிலோ வங்கியிலோ பேருந்து ஆட்டோ பயணத்திலோ அந்நியர்களிடம் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்*.


*E) கோவில்களில் கூட்டமிருந்தால் தூரத்தில் இருந்து வணங்கி விட்டு வந்து விடுங்கள்.*


*F) கிட்டத்தட்ட 150 நாட்கள் பாதுகாப்பாய் வீட்டிற்குள் இருந்தோம், அரசு அறிவித்துள்ள தளர்வு காரணமாக நண்பர்கள் இல்லம் / உறவினர் இல்லம் என்று குடும்பத்துடன் பொதுப் போக்குவரத்து பயணத்தில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே கைப்பேசியிலேயே Video Callல் பேசி மகிழுங்கள் உங்களுக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது.*


*இந்தக் கருத்துகளை மனதில் கொண்டு நாம் அனைவரும் நலமுடன் வாழ்வோம்*💐💐💐💐💐


(லாக்-டவுன் தளர்த்தப்பட்டதால் புலிக் கூண்டில் இருந்து தப்பிய மனநிலை கொள்ளவேண்டாம்...இப்போது நாம் நிற்பது பசித்த சிங்கக் கூண்டில் ...முன்பை விட கூடுதல் ஆபத்துள்ள இடம்...)

 🙏🙏🙏🙏🙏

6 comments:

  1. நல்ல இடுகை. ஊரடங்கு தளர்வின் தாக்கம் என்னவாகப்போகிறதோ என்று கவலையும் வருகிறது.

    ReplyDelete
  2. மக்கள் இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கான சூழலில் இல்லை..

    கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் ..
    கிழவனைத் தூக்கி மனையில் வை...
    - என்ற கதை தான்...

    ஊரடங்கின் போதே
    வீடடங்கிக் கிடக்காத ஜென்மங்கள்...

    இதுகளால் இன்னும் எத்தனை ஆயிரம் பேர் பாதிக்கப்படப் போகின்றார்களோ!...

    தெய்வம் இனிமேல் தான் கொடுமையிலிருந்து காக்க வேணும்..

    ReplyDelete
  3. எதற்கும் இருக்கவே இருக்கிறார் கடவுள்

    ReplyDelete
  4. உண்மைதான் ஐயா
    முன்னிலும் அதிக கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது
    நன்றி ஐயா

    ReplyDelete

  5. மிக மிக நிஜமான கவலை.
    சென்னை பேருந்து படம் ஒன்று வந்தது.
    விட்ட இடத்திலிருந்து எல்லோரும் தொடங்குகிறார்கள்.
    தொங்கிக் கொண்டு போகிறார்கள்.
    யார் காதில் எந்த அறிவுரை இறங்கப் போகிறதோ.

    வேலைக்குப் போகாவிட்டால் வீட்டில் சோறு இல்லை என்ற நிலைமை
    பலருக்கு.
    கடவுளே வந்து தீர்க்க வேண்டிய பிரச்சினையாகத் தான் தெரிகிறது.
    மிக நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. முன்னிலும் அதி ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய காலகட்டம். மக்கள் உணர்ந்து கொண்டால் நல்லது.

    ReplyDelete