Friday, September 25, 2020

YES.B.B......யே.

 தனிமையில்

ஏகாந்த சுகத்தை

சுவைக்க நிலைக்க

முயன்ற போதெல்லாம்

உன் குரலே எமக்குப்

பற்றுக்கோடாய்ப் பிரணவமாய் ....


வெறுமைப் பாலையில்

வெம்பிக் கிடந்து

சோர்ந்த வேளையில்

திசைதெரியாது தவித்தச் சூழலில்

உன் பாடலே எமக்குச் 

சாமரமாய் பெரும் சாரலாய்....


களிப்பு மிகக்

கூட்டமாய்

கொண்டாடிய தருணங்களில்

சுப வேளைகளில்

உன் தீந்தமிழே எமக்குள்

சுக ஊற்றாய்..தென்றல் காற்றாய்..


பேரிழப்புச் சுழலில்

சிக்கித் திணறிச்

செய்வதறியாது

சின்னாபின்னமாகித் தவிக்கையில்

உன் மென்ராகமே எமக்கு

மயிலறகாய்..தாயின் அரவணைப்பாய்.


இன்னும்.......


வெகு தூரப் பயணத்தில்.

உற்ற தோழனாய்


தூக்கம் வரா

பின் இரவுகளில்

அன்புத் தாதியாய்...


நகராப் பொழுதுகளை

நகர்த்தி எறியும்

நெம்பு கோலாய்...


இப்படி

உன்னோடு நாங்கள் கொண்ட

உறவுகளை

உளப் பாங்கான

உணர்வுகளை

எண்ண எண்ண...


இதயம் கிழிபடுவதை

கண்களில்

குருதி பெருகுவதைத்

தவிர்க்க இயலவில்லை...


அடிமைப்பெண்ணில்

துவங்கி

அண்ணாத்தை வரை என

தரவினை வேண்டுமானால்

காலன் முடித்து வைக்கலாம்


தேனூறிய குரலால் 

செவி வழி

அன்பு தோய்ந்த சிரிப்பால் 

விழிவழி

நுழைந்து...

இதயத்தில் நிலைத்திட்ட 

உன்னை காலனால்

உலகிலிருந்து எப்படிப் பிரித்துவிட முடியும்


எண்ணத்தால்

பேச்சால்

செயலால்

எப்போதும்

நேர்மறையாகவே வாழ்ந்த

Y.ES.பி,பியே


காற்றில்

பிராணவாயு இருக்கும் வரை

நீயும் இருப்பாய்.....


ஆம்

தமிழாய்

இசையாய்

எஸ்.பி.பி யாய்

என்றென்றும்....


ஆம்

இன்று போல் என்றென்றும்

6 comments:

  1. என்றும் வாழ்வார் நம்முடன் தன் இனிய பாடல்கள் வழியாக.

    ReplyDelete
  2. போகும் பாதை தூரமே... வாழும் காலம் கொஞ்சமே...
    ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா...
    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
    கேளாய் பூமனமே...

    ReplyDelete
  3. நல்லதொரு அஞ்சலி.

    அவரது ஆன்மா நற்கதியடைய எனது பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  4. தன் இனிய பாடல்கள் வழி என்றென்றும் வாழ்வார்

    ReplyDelete
  5. நல்லதொரு கவித்துவமான அஞ்சலி. அவர் என்றும் நம் நினைவிலிருந்து பிரிக்கப்பட முடியாதவர். இன்னமும் நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை. அவர் ஆன்மா இறைவனுடன் கலந்து இன்புற வேண்டும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  6. மௌனமாக வெளியேறி விட்டாரே.
    ஆறாத சோகம்.
    எங்கள் மனங்களில் ஓடும் எண்ணங்கள் உங்கள் கவிதையில்
    முகிழ்க்கிறது.
    ஒன்றாக அவரை சிந்தித்து ஏற்றுவோம்.

    ReplyDelete