Saturday, February 27, 2021

............................................

 என்னை" அது "

தொடர்ந்து கவனிப்பதும் குரைப்பதும்

முதலில்

எரிச்சலூட்டுவதாகவும்

பின் அச்சமூட்டுவதாகவும் தெரிய...


அதன் கவனத்தைத் திசைதிருப்ப.

அதன் முன்  ஒரு

எலும்புத் துண்டை எறிகிறேன்..


கவ்விய வேகத்தில்

என்னை மறந்து 

அதனை "அது "

ஆக்ரோசமாய்க் கடிக்க...


வாய் கிழிந்து இரத்தம் கசிய...


எலும்பிலிருந்து வரும்

இரத்தமென மகிழ்ந்து

இன்னும் ஆக்ரோசமாய் அது கடிக்க...


இன்னும் அதிக இரத்தம் கசிகிறது..


"அது " குறித்து இப்போது

எனக்கேதும் கவலையில்லை

 "அதற்கும் " என்னை குறித்து

எந்த விசாரமும் இல்லை..


எதற்கும் இருக்கட்டும் என

இன்னொரு எலும்புத் துண்டையும்

அதன் அருகில் வீசி விட்டு

அது காவல் காத்த வீட்டைப் பார்க்கிறேன்..


வசதியான வீடு

என் தொழிலுக்கு

வாகாகவே இருக்கிறது...


(இதற்கு தலைப்பு இருந்தால்தான் புரியுமா என்ன ? )

5 comments:

  1. ஹா.. ஹா.. தொழில் சிறப்புறட்டும்...

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சொல்ல வேண்டிய விதத்தில் நீங்கள் சொல்லி விட்டதால், தலைப்பில்லாமலேயே புரிகிறது."அது"வும் இனி"தலை"காணும் பொழுதெல்லாம் "வால்"ஆட்டும்.:)) கவலையில்லை... ஹா ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. வசதியான வீடு = தமிழ்நாடு...

    மற்றவை சொன்னால் தான் புரியுமா என்ன ? ஹா... ஹா...

    ReplyDelete