Thursday, December 2, 2021

அரசு சொல்லுது அதில் அர்த்தம் உள்ளது...

 சீன நகரில் இருந்து வந்த

வைரஸ் கேட்டது

மனிதா சௌக்கியமா..


யாரும் இருக்கும் விதத்தில்

இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே


இது அரசு சொல்வது

இதில் அர்த்தம் உள்ளது...


கூட்டம் தவிர்த்து விலகி இருந்தால்

கொரோனா கிருமி அடங்கும்

இதனை மறந்து மக்கள் கூடித் திரிந்தால்

அதுவே விரைந்து பெருகும்


முகக்கவசம் அணிந்திருந்தால் பரவாது என்று

நாட்டிலுள்ள மக்களுக்கு

அரசு சொல்லுது


அரசு சொல்வது

அதில் அர்த்தம் உள்ளது...


சோப்புப் போட்டு கைகள் கழுவும்

பழக்கம் என்றும் வேண்டும்

அந்தப் பழக்கம் மட்டும் இருந்தால் போதும்

கொரோனா அலறி ஓடும்


உடல்தூய்மை காத்தாலே நோய்த்தொற்று இல்லை

நாமறிய நாளெல்லாம்

அரசு சொல்லுது


அரசு சொல்வது

அதில் அர்த்தம் உள்ளது


பெயரை மாற்றி குணத்தை மாற்றி

கொரோனா வந்த  போதும்

நமது தூய்மைப் பேணும் குணத்தை நாளும்

தொடர்ந்து வந்தால் போதும்


வாராது நமக்கெந்த தொற்றுநோயும் என்று

அழகாக நம்பிக்கையாய்

அரசு சொல்லுது


அரசு சொல்வது

அதில் அர்த்தம் உள்ளது


(பிரச்சாரப் பாடலாகப் பயன்படுத்த

நம் தமிழக அரசுக்கு அனுப்புவதற்காக எழுதியது )

6 comments: