Friday, January 28, 2022

எறும்பூற...

 கூகுள் மேப்பில் என் பக்கப் பார்வை ஒரு கோடியைத் தாண்டி...


"முயலாமைக் கதையில் "

ஆமை ஜெயித்தல்தான் சிறப்பு
முயல் ஜெயித்தால்
அது நிச்சயம் அதிசயமே
யானை நடந்து
மண் தரையில் தடம் பதிவதுண்டு
கற்களில் பதிந்ததாக பழமொழியில்லை
எறும்பு ஊறத்தான் கற்கள் தேயும்

பணி நாட்களில் யுத்தத்தை
ஒரு நாளும் சந்திக்காது
ஓய்வுபெற்று வந்த
இராணுவ வீரர்கள்   கூட
தினமும் பயிற்சி செய்யாது
பணியில் நிலைத்திருக்க
சத்தியமாய் சாத்தியமே இல்லை

பறந்துபோய்
சிகரம் இறங்கினால்
அது சமதளம் போலத்தானே 

முட்டி தேய பகலிரவாய்
நடந்தேறிப் பார்த்தால்தான்
சிகரமே சிகரமாய்த் தெரியும்
நமக்கும் அதன் அருமை புரியும்

தொடர் முயற்சியில் வென்ற
பல முட்டாள்கள் கூட
உலகினில் உண்டு
மெத்தனத்தில் ஜெயித்த
பேரறிஞர்  எவரும் நிச்சயம் இல்லை

தெளிவாய்  இதை அறிவோம்
தொடர்ந்து நாளும் முயல்வோம்
அரியவை எதையும்
முயன்றே  அடைந்து உயர்வோம்

3 comments:

  1. வணக்கம் சகோதரரே

    முயற்சியை பற்றிய விளக்கங்கள் அருமை. தங்களின் விடாமுயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. சமீப நாட்களாக நானும் பதிவிட ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் பதிவுகள் தொடரட்டும். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    தொடர்ந்து முயன்றால்தான் எதையும் அறிந்துகொள்ள முடியும்

    கீதா

    ReplyDelete