Wednesday, February 23, 2022

உறவின் நெருக்கமறிய சுருக்கு வழி..

 இடத்தின் தூரத்தை

அளக்க இருக்கும் கருவிபோல்

உறவின் தூரத்தை அளக்கும்

கருவிகளும் உண்டு..


சில நல்ல நாள் போதில்

உன்னை நேரடியாகச் சந்தித்து

வாழ்த்துச் சொல்லும் உறவு

நெருங்கிய உறவு..


தூரத்தின் காரணமாக

நேரடியாக முடியவில்லையாயினும்

தொலைபேசியில் தொடர்பு கொண்டு

வாழ்த்துச் சொல்லும் உறவும்

நெருங்கிய உறவே...


அருகிலிருந்தோ தூரத்திலிருந்தோ

தொடர்புகொள்ள வாய்ப்பிருந்தும்

வாட்ஸப்பில் முக நூலில்

வாழ்த்துச் சொல்லும் உறவு

கணக்கில் இருக்கும் உறவு


வாழ்த்துச் செய்தி சொல்லவில்லைஆயினும்

வாழ்த்துக்கு முக நூலில் வாட்ஸப்பில்

லைக் போடும் உறவு

நிச்சயமாக உன்னை 

அறிந்திருக்கும் உறவு

எதற்கும் உதவா உறவு அவ்வளவே..

4 comments:

  1. உறவுக்கணக்கு சரி.

    ReplyDelete
  2. ஆமாம் சரிதான்.

    சிலர் வாழ்த்துச் சொல்லவில்லை என்றாலும் ஃபார்மலாக இல்லாமல் வெளியில் தன் அன்பைக் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் வேண்டிய நேரங்களில் உறுதுணையாக இருக்கும் உறவும் இருக்கிறார்கள்தான். வாழ்த்துச் சொல்லிவிட்டு வேண்டிய நேரத்தில் ஒதுங்கி நிற்பதை விட இது நல்ல உறவுதானே

    கீதா

    ReplyDelete
  3. உறவுக்கணக்கு சரி தான். பலர் கடைசி பட்டியலில் தான் என்பது இன்றைய நிதர்சனம்.

    ReplyDelete