Wednesday, November 2, 2022

தொள்ளாயிரமா...ஆயிரமா ?

 முன்பெல்லாம்

யார் பேசுகிறார்கள் என்பதை விட

என்ன பேசுகிறார்கள் என்பதில்

"அவர்கள் " கவனம் இருந்ததால்...


அவர்களும்

கவனமுடன் கவனித்தார்கள்

பேசுவோரும்

கவனமாய்ப் பேசினார்கள்


அதனால் பேச்சிற்கான

எதிர்வினையாற்றலும்

சரியாகவே இருந்தது...


இப்பொதெல்லாம்

என்ன பேசுகிறார்கள் என்பதை விட

யார் பேசுகிறார்கள் என்பதில்தான்

அவர்களின் முழுக்கவனமும் இருப்பதால்..


அவர்களும்

ஒழுங்காகக் கவனிப்பதில்லை

பேசுவோரும்

கவனமாய்ப் பேசுவதில்லை


அதன் காரணமாகவோ என்னவோ

அவர்களுக்கு "அதை " விட

"இதுவே " 

கூடுதல் அசிங்கமாய்ப் படுகிறது...


ஒருவகையில்

பின் இருக்கை மாணவனுக்கு

ஆயிரத்தை விட

தொள்ளாயிரம் பெரிதாய்ப் படுவதைப் போலவே

6 comments:

  1. பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்.பேசு பொருளை அறிந்தவர் பேசினால் கேட்க தோன்றும். 

    தோன்றுவதை பேசினால் பேசுபவர் யார் என்றே நோக்கத் தோன்றும். 

    அந்த "அது",  "இது" எது? புரியவில்லை.  

    ReplyDelete
  2. அது விபச்சார ஊடகம்...இது குரங்கு போல

    ReplyDelete