Monday, April 24, 2023

கவியாகிப் போகும் உணர்வு..

 குவளை நீரில்

பால் கலக்க
மெல்ல மெல்ல
நிறம் மாறிப் போகிறது நீர்
பாலாகிப் போகிறது நீர்

இருளில்
ஒளிகலக்க
மெல்ல மெல்ல
ஒளியாகிப் போகிறது இருள்
பகலாகிப் போகிறது இரவு

மண்ணுக்குள்
விதை கலக்க
மெல்ல மெல்ல
நிலை மாறிப் போகிறது விதை
பயிராகிப் போகிறது விதை

உணர்வுக்குள்
சிந்தனை கலக்க
மெல்ல மெல்ல
கனமாகிப் போகிறது உணர்வு
கவியாகிப் போகிறது உணர்வு

3 comments:

  1. படித்ததன் பொருள் உள்ளுக்குள் ஏற ஏற கைகளின் வழியே வார்தைகளாகின்றன பாராட்டுகள்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே

    அருமையான கவிதை. கவிதையின் பிறப்பிடம் பற்றி உவமானங்களுடன் கூறியிருப்பது சிறப்பு. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete