Friday, May 3, 2024

அறிந்து வைப்போமா..

 கணியன் பூங்குன்றனார் எழுதிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பழமையான பாடல் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது…


ஆனால் அந்தப் பாடலின் முதல் வரியை மட்டுமே பலர் அறிவார்கள்.

முழு பாடலும் வாழ்வின் முழுத் தத்துவத்தை விளக்குகிறது....


"யாதும் ஊரே; யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே;...

வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;*_

முனிவின் இன்னாது என்றலும் இலமே;

மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்...

ஆதலின் மாட்சியின்

பெயோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”


_*கணியன் பூங்குன்றனார்*_


இதன் பொருள் ….

_*"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."*_

*எல்லா ஊரும் எனது ஊரே....எல்லா மக்களும் எனக்கு உறவினர்களே என்று எண்ணுக 


*"தீதும் நன்றும் பிறர் தர வாரா...."*_

உனக்கு வரும் தீமையானாலும்  நன்மையானாலும், அது அடுத்தவரால் வருவதில்லை.

 அவற்றின் அடிப்படை காரணம் நீதான் என்பதை உணர்க ..


*"நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன...."*_

*மனக் கவலையும்  ஆறுதலும்கூட மற்றவரால்  கிடைப்பது இல்லை,  மனம் பக்குவப்பட்டால், கவலைகள் உன்னை அண்டாது என்க ..


_*"சாதலும் புதுவது அன்றே.."*_

இறப்பு புதியதல்ல, அது இயற்கையானது எல்லோருக்கும் பொதுவானது....


_*"வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே 

முனிவின் இன்னாது என்றலும் இலமே."*_

வாழ்க்கையில் ஏற்படும் இனிய நிகழ்வுகளைக் குறித்து பெருமகிழ்ச்சி கொள்ளவும்  வேண்டாம் ..

அதுபோலவே, துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம். 

இன்பமும் துன்பமும் இணைந்தே வாழ்க்கை என்பதை உணர்க… 


*"மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ....."*


*இந்த வானம் வெப்பமான  மின்னலையும் தருகிறது குளிர்ந்த மழையையும் தருகிறது. 

கற்களைப் புறட்டிச் செல்லும் காட்டாற்று வெள்ளத்தில், முட்டிமோதிச் செல்லும் படகு போல, , துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும்  ஊடே  வாழ்க்கையும்  போய்கொண்டே இருக்கும். 

இதுவே இயல்பு என மனத்தெளிவு கொள்க....*_


*"ஆதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."*_

*இந்த தெளிவு வரப் பெற்றால், உயர்ந்த நிலையில் உள்ளவர்களைப்  பார்த்து  வியந்து நிற்கவும் வேண்டாம். சிறிய நிலையில் உள்ளவர்களைப் பார்த்து   இகழ்வதும் வேண்டாம். 

அவரவர் வாழ்வில்  அவரவர்  பெரியவர் என்பது அடிப்படை ..

1 comment: