இன்றோடு.......
தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
நாளைமுதல்
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே
இருளோடு
நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
ஒளியோடு
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே
அடியோடு
உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
அழகோடு
நிறையட்டும் நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே
நிலையாக
கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
விளைவாக
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வணக்கம் சகோதரரே
ReplyDeleteபதிவு அருமை.
/இருளோடு
நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
ஒளியோடு
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே/
கவிதையின் வரிகள் அருமையாக உள்ளது. இப்புத்தாண்டில் எல்லோருக்கும் எல்லாமே நல்லதாக நடக்கட்டும்.
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் மனங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனை நன்றாக இருக்கிறது.
ReplyDeleteசட்டென ஏதாவது ஒரு தேவன் இதற்கு செவி சாய்த்து, ததாஸ்து சொல்லி, அதுவும் நடந்து விட்டால் ஆனந்தம்தான்.
இனிய 2025 புத்தாண்டு வாழ்த்துகள்...
ReplyDelete