Friday, January 11, 2013

மறை பொருள்

புரிகிறபடி மிகத் தெளிவாகச்
சொல்லப்படுபவையெல்லாம் கவனமின்மையால்
மிகச் சரியாகப் புரிந்து கொள்ளப்படாதுபோக
புதிராக  துளியும் புரியாதபடி
சொல்லப்படுபவைகள்தான்
கூடுதல் கவனத்தால்
அதிகமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றனவோ ?

பட்டப் பகலில் வெட்ட வெளியில்
தெளிவாகத் தெரிபவையெல்லாம்
நம் கவனத்தைக் கவராது போக
நடுஇரவில்  கரிய இருளில்
மின்னித் தொலைக்கும் ஏதோ ஒன்று
கூடுதல் ஆர்வத்தால் தான்
நம் கற்பனையை அதிகம் தூண்டிப் போகிறதோ ?

அண்டசராசரங்களாயினும்
அதைப் படைத்ததாக நம்பப்படும் பேரறிவும்
நம் புரிதலுக்கும் கொஞ்சம் தள்ளியே நின்று
முழுமையாய் வெளிக்காட்டாது இருப்பது கூட
அவரவர்கள் தகுதிக்கேற்பவும் முயற்சிக்கேற்பவும்
தன்னைப் புரிந்து கொள்ளட்டும்
அதுவே சரியான புரிதலாய் இருக்கும் எனும்
முடிவான எண்ணத்தில் தானோ ?

31 comments:

  1. // அண்டசராசரங்களாயினும்
    அதைப் படைத்ததாக நம்பப்படும் பேரறிவும்
    நம் புரிதலுக்கும் கொஞ்சம் தள்ளியே நின்று
    முழுமையாய் வெளிக்காட்டாது இருப்பது கூட
    அவரவர்கள் தகுதிக்கேற்பவும் முயற்சிக்கேற்பவும்
    தன்னைப் புரிந்து கொள்ளட்டும்
    அதுவே சரியான புரிதலாய் இருக்கும் எனும்
    முடிவான எண்ணத்தில் தானோ ?//

    ஆமாம் ஐயா. அற்புதமான தேடல்!

    ReplyDelete
  2. நம் எல்லையை, எண்ணத்தை தாண்டிய கருத்துக்களை தெரிந்து கொள்வதில் எப்போதுமே ஆர்வம் உண்டு அனைவர்க்கும்...

    ReplyDelete
  3. //துளியும் புரியாதபடி
    சொல்லப்படுபவைகள்தான்
    கூடுதல் கவனத்தால்
    அதிகமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றனவோ?//

    தனித்துத் தெரிபவை கவனத்தை ஈர்ப்பது இயற்கைதானே :-))

    அருமையாயிருக்கு.

    ReplyDelete
  4. புரிந்து கொள்ளல் என்பது அந்தந்த விஷயங்களில் அவரவர் ஈடுபாட்டையும் பொறுத்தது. :))

    ReplyDelete
  5. நம் மனது எதையோ தேடும்போது எதிரில் கிடைப்பது அபூர்வமான செய்தியாகிறது

    ReplyDelete
  6. உஷா அன்பரசு //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ezhil //

    நம் எல்லையை, எண்ணத்தை தாண்டிய கருத்துக்களை தெரிந்து கொள்வதில் எப்போதுமே ஆர்வம் உண்டு அனைவர்க்கும்.//.தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நண்டு @நொரண்டு -ஈரோடு //

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. முற்றிலும் உண்மை.சில நேரங்களில் சொல்வது புரிந்துகொள்ளப் படுவதில்லை. சொல்லப் பாடாதது புரிந்து கொள்ளப் படுகிறது.

    ReplyDelete
  10. அமைதிச்சாரல் //

    தனித்துத் தெரிபவை கவனத்தை ஈர்ப்பதுஇயற்கைதானே :-))
    அருமையாயிருக்கு. .//.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. ஸ்ரீராம். //

    புரிந்து கொள்ளல் என்பது அந்தந்த விஷயங்களில் அவரவர் ஈடுபாட்டையும் பொறுத்தது. ://)

    சுருக்கமாக ஆயினும்
    அருமையான கருத்து

    தங்கள் உடன் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. கோவி //

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாக்கிற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. கவியாழி கண்ணதாசன் //

    நம் மனது எதையோ தேடும்போது எதிரில் கிடைப்பது அபூர்வமான செய்தியாகிறது//

    புத்தக வெளியீடு தொடர்பான அதிகப் பணிக்கிடையிலும்பதிவினுக்கு வந்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தியமைக்கு
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. T.N.MURALIDHARAN //

    முற்றிலும் உண்மை.சில நேரங்களில் சொல்வது புரிந்துகொள்ளப் படுவதில்லை. சொல்லப் பாடாதது புரிந்து கொள்ளப் படுகிறது.//.//

    .தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. புரிகிறபடி மிகத் தெளிவாகச்
    சொல்லப்படுபவையெல்லாம் கவனமின்மையால்
    மிகச் சரியாகப் புரிந்து கொள்ளப்படாதுபோக
    புதிராக துளியும் புரியாதபடி
    சொல்லப்படுபவைகள்தான்
    கூடுதல் கவனத்தால்
    அதிகமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றனவோ ?

    ஆமாங்க அப்படித்தான் தோன்றுகிறது. கவிதை நன்றாக இருக்கிறது. அனைவருக்கும் பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  16. மறை (ந்த ) பொருளா.. மறை ( வேதங்கள்.?) பொருளா. கவிதை பல விஷயங்களை சொல்லிப் போகிறது. புரிந்ததும் புரியாததும், இருப்பதும் இல்லாததும்.....முயற்சிக்கேற்ப புரியலாம் எனும் நம்பிக்கை விதைக்கிறது. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. புரிதல் பற்றிய உங்களின் கவிதை வரிக்கு வரி உண்மை. ரசிக்க வைத்தது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. “மறை“ பொருள் அருமை இரமணி ஐயா.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. //அவரவர்கள் தகுதிக்கேற்பவும் முயற்சிக்கேற்பவும்
    தன்னைப் புரிந்து கொள்ளட்டும்//

    புரிந்து கொள்ளல்.. புரிய வைத்தல் -
    இவை இரண்டுக்கும் பயிற்சி தேவை...
    சரியாக புரிந்து கொள்ளல்.. சரியாக புரிய வைத்தல் -
    இவை இரண்டுக்கும் கடும் பயிற்சி தேவை...

    புதிய கோணத்தில் ஒரு புரிதல் பதிவு... வாழ்த்துகள்...

    ReplyDelete

  20. பூந்தளிர் //

    ஆமாங்க அப்படித்தான் தோன்றுகிறது. கவிதை நன்றாக இருக்கிறது. அனைவருக்கும் பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்.//.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. G.M Balasubramaniam //

    மறை (ந்த ) பொருளா.. மறை ( வேதங்கள்.?) பொருளா. கவிதை பல விஷயங்களை சொல்லிப் போகிறது. புரிந்ததும் புரியாததும், இருப்பதும் இல்லாததும்.....முயற்சிக்கேற்ப புரியலாம் எனும் நம்பிக்கை விதைக்கிறது. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. பால கணேஷ் //

    புரிதல் பற்றிய உங்களின் கவிதை வரிக்கு வரி உண்மை. ரசிக்க வைத்தது.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. அருணா செல்வம் ..//

    “மறை“ பொருள் அருமை இரமணி ஐயா./

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. Advocate P.R.Jayarajan //

    புரிந்து கொள்ளல்.. புரிய வைத்தல் -
    இவை இரண்டுக்கும் பயிற்சி தேவை...
    சரியாக புரிந்து கொள்ளல்.. சரியாக புரிய வைத்தல் -
    இவை இரண்டுக்கும் கடும் பயிற்சி தேவை...
    புதிய கோணத்தில் ஒரு புரிதல் பதிவு... வாழ்த்துகள்..//./

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. உண்மை உண்மை ஐயா
    தேடல் என்பது மறை பொருளாய்
    இருக்கும் வரைதான் .....

    ReplyDelete
  26. மகேந்திரன் //

    உண்மை உண்மை ஐயா
    தேடல் என்பது மறை பொருளாய்
    இருக்கும் வரைதான் ..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. நல்லா இருக்கு...

    ReplyDelete
  28. கோவை2தில்லி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete