Wednesday, January 9, 2013

ஊழினை உட்பக்கம் காணல்


காலச் சுற்றினுள்
அடங்காது தனித்து நிற்கும்
ஒரு தினத்தில் வாழ்ந்து பார்க்கவும்
அதன் காரணமாய் காலம் கடக்கவும்

உடல் கூட்டை
உடைத்து வெளியேறும் உயிர்பறவையை
ஒரு நொடியேனும் விழியால் காணவும்
அதன் மூலம் அழிவினை அழிக்கவும்

அண்ட சராசரங்களை
இம்மி பிசகாது இயக்கும் அந்த மாயக் காரனை
கை குலுக்கிப் பாராட்டி மகிழவும்
அவன் மூலமாகவே அவனை அறியவும்

பல காலம்
முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருப்பினும்
நாம் நம்பிக்கையை இழந்தா நிற்கிறோம் ?

வர்ணங்களையே
நீர்த்துப் போகச் செய்யும்
அழகிய ஓவியம் படைக்கத் தெரிந்த
ஓவியர்களாகிய நமக்கு

வார்த்தைகளையே
அர்த்தமற்றதாக்கிப் போகும்
வண்ணக் கவிதைகள் படைக்கத் தெரிந்த
கவிஞர்களாகிய நமக்கு

கற்பனைகளையே
அதிஅற்புத  படைப்புகளாக
உரு கொடுத்து அனுபவிக்கத் தெரிந்த
மனிதர்களாகிய நமக்கு

புரியாத புதிர்கள் எல்லாம்
என்றுமேயொரு   பொருட்டா என்ன ?
இன்னும் கொஞ்சம் முயன்றால்
ஊழினையும் உட்பக்கம் காணல்
அத்தனை கடினமா என்ன ?


37 comments:

  1. ஊழினையும் உட்பக்கம் காணல்
    அத்தனை கடினமா என்ன ?//
    அருமை அத்தனை வார்த்தைகளும் சுடுகின்றது

    ReplyDelete
  2. என்றும் என்றென்றும்
    புரிந்துகொள்ள விழையும்
    புரியாத புதிர்கள் தான் இங்கே குறிப்பிட்டவை...
    சிந்திக்கவேண்டிய செய்தி நீங்கள்
    இறுதியில் குறிப்பிட்டது...
    முயற்சி உண்டென்றால்
    முயலும் புலியாகும்

    ReplyDelete
  3. கவிஞர்கள் முயன்றால் ஊழினை உட்பக்கம் காணலாம்தான். கடின முயற்சி தேவை அதற்கு. வேறென்ன... அருமையான கருத்தை அழகாக உரைத்திருக்கிறீர்கள். வியப்பில் ஆழ்த்தியிருக்கிறீர்கள் எங்களை.

    ReplyDelete
  4. கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  5. நம்பிக்கையும் கடின உழைப்பும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். அருமையான கருத்தை மிக அழகான கவிதையில் கொடுத்திருக்கீங்க.சிறப்பாக இருக்கு.

    ReplyDelete
  6. அந்த நாளும் வந்திடாதோ ..என நினைக்கத் தூண்டும் வரிகள் !

    நன்று..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அருமையான வரிகள் ஐயா, மனதில் பதிந்தது.

    ReplyDelete
  8. /அவன் மூலமாகவே அவனை அறிதல் ..../

    ஆம் , அது தான் சரியான , சிறந்த வழி !

    ReplyDelete
  9. //உடல் கூட்டை
    உடைத்து வெளியேறும் உயிர்பறவையை
    ஒரு நொடியேனும் விழியால் காணவும்
    அதன் மூலம் அழிவினை அழிக்கவும்//

    மிகப்பிரமாதமான வரிகள்.. ஆழமான கருத்து ...!!
    இதுதான் கவிஞர்களின் சிந்தனை வரம் என்பது.

    ReplyDelete
  10. //ஊழினையும் உட்பக்கம் காணல்
    அத்தனை கடினமா என்ன ?//

    விதியை மதி வெல்லவும் விதி வேண்டும். ஆனால் கவிஞர்கள் விதி வெல்ல பிறந்தவர்கள். இதற்கு விதிவிலக்கானவர்கள்.

    ReplyDelete
  11. கண்டிப்பாக அந்தக் கால கவிஞர்கள் கண்ட கனவெல்லாம் இன்று நிஜமாகியிருக்கிறது. அதே போன்ற விதியை வெல்லும் சக்தி கவிஞர்க்கு உண்டு

    ReplyDelete
  12. இன்னும் கொஞ்சம் முயன்றால்
    ஊழினையும் உட்பக்கம் காணல்
    அத்தனை கடினமா என்ன ?

    நம்பிக்கை விதைக்கும் கவிதைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  13. நல்லதொரு கருத்தை அழகான கவிதையாய் வடித்துள்ளீர்கள்.
    இன்னும் கொஞ்சம் முயன்று பார்ப்போம் என்று நம்பிக்கை ஊட்டியுள்ளீர்கள் .

    நன்றி பகிர்வுக்கு.
    ராஜி

    ReplyDelete
  14. இருட்டுக்குள் நின்று கொண்டு நம் நிழலை தேட முடியாது இரமணி ஐயா.
    த.ம. 7

    ReplyDelete
  15. வழக்கம் போல் நல்ல கவிதை செதுக்கல்.

    ReplyDelete
  16. // இன்னும் கொஞ்சம் முயன்றால்
    ஊழினையும் உட்பக்கம் காணல்
    அத்தனை கடினமா என்ன ?//

    தன்னம்பிக்கை ஊட்டுகின்ற வரிகள்

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete

  17. கொஞ்சம் புரிய முயன்றிருக்கிறேன் என் பதிவில்.சிறுகதையில் . ஏதோ கற்பனையில்.....!

    ReplyDelete
  18. G.M Balasubramaniam//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சகமூடிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. சேக்கனா M. நிஜாம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சகமூடிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. T.N.MURALIDHARAN //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சகமூடிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. அருணா செல்வம் said.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையானபின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. rajalakshmi paramasivam //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூடிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. இராஜராஜேஸ்வரி//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. ezhil //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. Advocate P.R.Jayarajan //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. ஸ்ரவாணி //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. semmalai akash //



    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. ரமேஷ் வெங்கடபதி //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி //

    ReplyDelete
  29. RAMVI //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. பூந்தளிர்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete

  31. பால கணேஷ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. பால கணேஷ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. மகேந்திரன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. Seeni //
    .
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. .கவியாழி கண்ணதாசன்//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான
    பின்னூடத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete