Sunday, June 14, 2015

காக்கா முட்டை- ஒரு தாமதமான விமர்சனம்

நாமிருக்கும் இடத்தில் அல்லது
நாம் புழங்கிக் கொண்டிருக்கும் இடத்தில்
நம் சூழலுக்கு
நம் பண்புக்கு
கலாச்சாரத்திற்குத்
தேவையில்லாத பொருள் ஒன்று
வியாபாரம் என்கிற பெயரில்
நம்மைக் கவரும்படியாக விரித்துவைக்கப் படுகிறது

அதன் விளம்பரக் கவர்ச்சியில்
அது இருக்கும் எட்டாத உயரத்தில் மயங்கி
நம் சக்திக்கு மீறி முயற்சியை மேற்கொண்டு
அதை அடைய  முயலுகையில்
நேரும் உதாசீனங்களையும் மீறி
நாம் அதனை அடைகிறோம்

அதை அடைந்ததும் தான்
எந்தச் சிறப்பும் இல்லாத
இதற்கா நாம் இவ்வளவு முயன்றோம்
என்னும் எண்ணம் நம்முள் தோன்ற
நாம் ஏமாற்றம் கொள்கிறோம்

படத்தை பீட்ஸாவுடன்  மட்டும் ஒப்பிடாமல்
இன்றைய சூழலில் நாம் சந்திக்கும் அனைத்துடனும்
ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தப் படத்தின் அருமை புரியும்

படத்தைத் தயாரித்துக் கொடுத்த
 இயக்குநர் வெற்றிமாறன்
மற்றும் நடிகர் சிம்பு மற்றும்
படத்தின் இயக்குநர் மணிகண்டன்
ஆகியோர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்  

12 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம் ரமணி ஐயா.. இன்னும் நாம் எட்டாத பொருளுக்கு தான் ஆசை பட்டு கொண்டிருக்கிறோம். ..

    ReplyDelete
  3. எட்டாத மட்டுமல்ல
    நமக்குத் தேவையில்லாத
    மோசமான பொருளுக்கும் /
    வாழ்வுக்கும் எனக் கூடச் சொல்லலாம்

    ReplyDelete
  4. உங்கள் பாணியில் மிக அழகான 'சுருக்'கமான விமர்சனம். கிட்டாதாயின் வெட்டென மற என்று பெரியவர்கள் அதற்காகத்தான் அப்போதே சொல்லிவைத்திருக்கிறார்கள் போலும்.

    ReplyDelete
  5. அழகான விமர்சனம்! நாம் இன்னும் இல்லாததை நினைத்து வருந்தி, எட்டாத கனிக்கு விழைந்து அவதிப்படுகின்றோம். படம் அருமை என்று எல்லோராலும் விமர்சிக்கப்படுகின்றது. பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  6. இப்போதெல்லாம் திரைப் படங்கள் காண்பதில்லை. ஆனால் இப்படம் நல்ல விமரிசனங்களைப்பெற்று வருகிறது/ வாய்ப்பு கிடைத்தால் பார்க்க வேண்டும். நல்லசுருக் விமரிசனம் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா
    விமர்சனத்தை படித்த போது படத்தை பார்க்க தூண்டுகிறது அருஐமயாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. சுருக்கமாய் ஆனாலும் படத்தின் மையக்கருத்தைச் சொல்லும் விமர்சனம்.

    பார்க்க நினைத்திருக்கும் படம்....

    ReplyDelete
  9. தாமதமாக இருந்தாலும் நடுநிலையான விமர்சனம்.

    ReplyDelete
  10. இரத்தின சுருக்கமாக விமர்சனம். படத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிய வைத்தது. நன்றி!
    த ம 7

    ReplyDelete