Monday, June 15, 2015

பெரும்பான்மை என்பதே.....

பெரும்பான்மை என்பதே
தரம் தாழ்ந்ததென்பதில்லை

பொதுவாக தேர்தலில்வெற்றியோ
அல்லது சினிமாவின் வெற்றியோ
பெரும்பான்மையோரின் முடிவுப்படிதான் உள்ளது

ஆனால் பெரும்பான்மை எப்போதும்
தரமற்றதையே தேர்ந்தெடுக்கிறது என்கிற
கருத்து பரவலாக்கப்பட்டு அதுதான் உண்மை
என்பதுபோல் ஒரு கருத்து உலகில்
உருவாகப்பட்டுள்ளது

இது உண்மையில்லை என்பது சில
தேர்தல்களில் நிருபிக்கப் பட்டிருக்கிறது

சில சினிமாக்களும் இதை நிரூபித்திருக்கின்றன

தேர்தல் குறித்துத் தனியாக பரிசீலிப்போம்

இந்தப் பதிவில் சினிமா குறித்து மட்டும்
அலசுவோம்

ஒரு சினிமா வெற்றி பெற வேண்டுமானால்
ஸ்டார் வேல்யூ இருக்கவேண்டும்

பிரமாண்டம் இருக்கவேண்டும்

அதிகம் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கவேண்டும்

பிரபலமான தொழில் நுட்பக் கலைஞர்கள்
(இயக்குநர் உட்பட ) இருக்கவேண்டும்

ஒரு கவர்ச்சி நடனம், அரங்குக்கு
இழுத்துவரும்படியான கிட் பாடல்கள் வேண்டும்

இப்படி எத்தனையோ  "வேண்டும்கள் "
வேண்டும் என நாம் மூளைச் சலவைச்
செய்யப்பட்டு,

அதன் காரணமாகவே அதைப் போலப்
படங்களாகவே கொடுத்து நம்மை
கேவலப்படுத்திக் கொண்டிருந்த திரையுலகில்

இவை அனைத்தும் பொய் என நீரூபித்து
வெகு ஜனத்தின் ரசனையும் உயர்வானதே
என ஒரு படம் நிரூபித்திருக்கிறதென்றால்
நிச்சயம் அது காக்கா முட்டைத்
திரைப்படம்தான்

உலகத் தரமான படங்கள் தமிழில் இல்லை
அது வருவதற்கும் சாத்தியமில்லை என்று
பினாத்திக் கொண்டு கட்டுரைகள்
எழுதிக் கொண்டிருக்கும் அறிவு ஜீவிகள்
எல்லாம் அவசியம் பணம் கொடுத்து அரங்கில்
இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும்

எப்படி கோடம்பாக்க ஸ்டுடியோக்களில்
அடைபட்டுக் கிடந்து மூச்சுத்
திணறிக் கொண்டிருந்தசினிமாவை
வெளி உலகுக்குக் கொண்டு வந்து
நிஜமான கிராமத்தையும் கிராம மக்களையும்
அவர்களது உணர்வுகளையும் பரிபூரணமாய்
காண்பித்து இயக்குர்நர் பாரதி ராஜா அவர்கள்
தமிழ் சினிமா உலகுக்குப் பெருமை சேர்த்தாரோ

அதைப்போலவே

இத்தனை ஆண்டு காலமும் இவையெல்லாம்
இருந்தால்தால் மக்கள் ரசிப்பார்கள் என்று
வியாபார வல்லூறுகள் ஏற்படுத்தி இருந்த
பிம்பத்தை சிதற அடித்த படம் எனில்
நிச்சயம் அது காக்கா முட்டைப் படம்தான்

இந்தப் படம் பெரும் பொருளாதார வெற்றீயே
தமிழ் திரை உலகின் வருங்காலப் போக்கை
முடிவு செய்யும் என்பதால்..

நல்ல சினிமா குறித்த எதிர்பார்ப்பு உள்ள
அனைவரும் அவசியம் இந்தத் திரைப்படத்தை
அரங்கில் கண்டு களிப்பதோடு

அதன் சிறப்புக் குறித்துப் பகிர்வோம்

மாறுதலுக்காக பல்வேறு தளங்களில்
பல்வேறு வகையில் முயன்று கொண்டிருக்கும்
சமூகத்தின்பால் ஆழமான பற்றுக்
கொண்டவர்களைப் போல

பதிவர்களாகிய நாமும் நல்ல விஷயங்களை
இதுபோல் உரக்கச் சொல்வதன் மூலம்
நமது சமூகக்கடமையை நிறைவேற்றி
 நாமும் மன மகிழ்வு கொள்வோம்

7 comments:

  1. இந்தப் படத்தைப் பாராட்டாதவர்களே இல்லை.

    ReplyDelete
  2. தங்கமான தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி. பலராலும் பாராட்டப்படும் இந்தப்படத்தினைப் பார்க்க நானும் நிச்சயமாக முயற்சிப்பேன்.

    ReplyDelete
  3. //பதிவர்களாகிய நாமும் நல்ல விஷயங்களை
    இதுபோல் உரக்கச் சொல்வதன் மூலம்
    நமது சமூகக்கடமையை நிறைவேற்றி
    நாமும் மன மகிழ்வு கொள்வோம்//

    மிகவும் நல்லதொரு வழிகாட்டல். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. சிறப்பாகச் சொன்னீர்கள்...

    ReplyDelete
  5. அனைவரும் பாராட்டும் படம்! அனைவரும் பார்க்கவேண்டிய படம்! நன்றி!

    ReplyDelete
  6. இப்போதெல்லாம் திரைப் படங்களின் தன்மையை பிறர் சொல்லிக் கேட்கத்தான் முடிகிறது. இருந்தாலும் சந்தர்ப்பம் வாய்ப்பின் இப்படம் காண வேண்டும் என்று பட்சி சொல்கிறது

    ReplyDelete