Tuesday, November 24, 2015

சராசரி என்பதே விதி

அனைவரும் பார்ப்பதையே
கொஞ்சம் வித்தியாசமாகப் பார்க்கவும்

அனைவரும் உணர்வதையே
கொஞ்சம் வித்தியாசமாய் உணரவும்

அனைவரும் சொல்வதையே
கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்லவும்

தெரிந்திருப்பதால்
அவர் படைப்பாளி

" விளக்கம் " கொடுத்தால் மட்டுமே
விளங்கித் தொலைக்கும்படி
ஒரு குழப்பம்  கொள்ளும்படி

"இவைகள் "  சொல்லப்பட்டால் மட்டுமே
என வரையரை செய்துள்ளோர்
வரையரைக்குள் அடங்கும்படி

"இப்படிச் " சொல்லப்பட்டால் மட்டுமே
அது தரப்பட்டியலில் சேரும் என்போர்
மனமது குளிரும்படி...

சொல்லத்தெரிந்திருந்தால்
அவரும் படைப்பாளி

ஆயினும் .....

பின்னதே  சரியெனில்
படைப்புலகில்
மறுப்பேதுமின்றி
அவரே பிரபலப்  படைப்பாளி

 முன்னதே சரி எனில்
சந்தேகத்திற்கு இடமின்றி
அவரைச்  சராசரி என்பதே
படைப்புலகின் விதி 

19 comments:

  1. "இப்படிச் " சொல்லப்பட்டால் மட்டுமே
    அது தரப்பட்டியலில் சேரும் என்போர்
    மனமது குளிரும்படி.

    ஹாஹா! மனது குளிரவுமெழுதத்தெரியணும் என்கின்றீர்கள். அது எப்படி எனவும் சொல்லி விடுங்களேன் ஐயா!

    ReplyDelete

  2. நான் ஒன்று சொல்வேன்..... said...
    நீங்கள் நல்ல படைப்பாளி..//

    போச்சு குழப்பிட்டேனா ?

    ReplyDelete

  3. நிஷா said..//

    நிஷா said...//
    ஹாஹா! மனது குளிரவுமெழுதத்தெரியணும் என்கின்றீர்கள். அது எப்படி எனவும் சொல்லி விடுங்களேன் ஐயா! //


    அவர்களைக் குளிர்விக்க எழுத வேண்டாம்
    இயல்பாய் நீங்கள் எழுதுவதைப் போலவே எழுதுங்கள்
    அதுவே ஆல்ப்ஸ் மலைத் தென்றைலைப் போலத்தான்
    உள்ளது. கூடுதல் குளிர் சங்கடமே
    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
  4. மேம்போக்காக இல்லாமல், சற்றே ஊன்றிப்படித்து, உண்மையாகவும், உறுப்படியாகவும், பின்னூட்டக் கருத்தளிப்பவர்கள் ஒரு பத்துப்பேர்களாவது இருந்தால் அதுவே நல்ல படைப்பு .... அவரே நல்ல பிரபல படைப்பாளி .... (உதாரணமாகத் தங்களைப்போல) என்பது என் அளவுகோளாகும்.

    ReplyDelete
  5. எழுத்துக்களில் குழப்புபவனும், அவனின் எழுத்துக்களால் மிகவும் குழம்புபவனும், தலைகீழாக நின்று, குட்டிக்கரணமே போட்டாலும்கூட, எழுத்துலகில் தொடர்ந்து நீடிப்பதோ, பிரபலமாவதோ என்றுமே நடக்காத காரியங்களாகும்.

    நாளடைவில் துண்டைக்காணும், துணியைக்காணும் என்று சொல்லி ஓட்டமெடுத்து எங்கோ காணாமல் போய் விடுவார்கள் என்பது சர்வ நிச்சயமாகும்.

    ReplyDelete
  6. சரியான காலத்தில் மழை பெய்யாமல், உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய வல்லமை படைத்த மழையே... சரியாக பெய்வதன் காரணமாக உயிர்களுக்கு வாழ்வைக் கொடுத்து, காக்கும் வல்லமை படைத்ததும் நீயே...

    இணைப்பு : →அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...!

    ReplyDelete
  7. சராசரியோ, பிரபலமோ மனசுக்கு சரியென்று படுவதை சரியானமுறையில் சொல்ல முடிந்தால் சரி :)

    ReplyDelete
  8. நீங்கள் குறிப்பிட்டதுபோல 'அலம்பல்' இப்போது இல்லை. மாற்றிவிட்டேன் :)

    http://kurinjimalargal.blogspot.ae/2015/11/blog-post_24.html

    உங்கள் அறிவுறுத்தலுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  9. வை.கோபாலகிருஷ்ணன் said...
    மேம்போக்காக இல்லாமல், சற்றே ஊன்றிப்படித்து, உண்மையாகவும், உறுப்படியாகவும், பின்னூட்டக் கருத்தளிப்பவர்கள் ஒரு பத்துப்பேர்களாவது இருந்தால் அதுவே நல்ல படைப்பு

    ..எழுத்துக்களில் குழப்புபவனும், அவனின் எழுத்துக்களால் மிகவும் குழம்புபவனும், தலைகீழாக நின்று, குட்டிக்கரணமே போட்டாலும்கூட, எழுத்துலகில் தொடர்ந்து நீடிப்பதோ, பிரபலமாவதோ என்றுமே நடக்காத காரியங்களாகும். //

    தங்கள் பின்னூட்டம் அதிக உற்சாகமளிக்கிறது
    மிக்க நன்றி

    ReplyDelete
  10. திண்டுக்கல் தனபாலன் //

    வள்ளுவன் கவியில் தங்கள்
    அற்புதமான மொழிபெயர்ப்பில்
    நனைந்து மகிழ்ந்தோம்

    ReplyDelete
  11. சுந்தரா said...//
    சராசரியோ, பிரபலமோ மனசுக்கு சரியென்று படுவதை சரியானமுறையில் சொல்ல முடிந்தால் சரி :)

    ஆம் அது போதும்
    பிற பலங்கள் நமக்குத் தேவையில்லைதான்

    ReplyDelete
  12. சுந்தரா said...//
    நீங்கள் குறிப்பிட்டதுபோல 'அலம்பல்' இப்போது இல்லை. மாற்றிவிட்டேன் //

    அற்புதமாக மாறுதல் செய்துள்ளீர்கள்
    மாறுதல் கவிதைக்கு கூடுதல் அழகைச் சேர்க்கிறது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. கவிதை வரிகள் சரிதான் கவிஞரே
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  14. பல சமயங்களில் சராசரியாகவும், சில ச்மயங்களில் சராசரிக்கு மேலாகவும் சில சமயங்களில் சராசரிக்கும் கீழாகவும் இருக்க நேர்கிறது

    ReplyDelete
  15. வணக்கம்
    ஐயா

    சரியாக சொல்லியுள்ளீர்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. எந்தக் குழுவிலும் 20 சதவீதத்தினர் புத்திசாலிகள் 20 சதவீதத்தினர் மக்குகள் மீதி 60 சதவீதத்தினர் சராசரிகள். இது எங்கும் பொருந்தும்

    ReplyDelete
  17. அழகான மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள் நண்பரே!

    ReplyDelete