Sunday, December 13, 2015

சின்னச் சின்னக் குறிப்புகள்..

மார்பினை மீறித்
துருத்தாத வயிறு
அவன் ஆரோக்கியத்தை
பறைசாற்றிப் போனது

வரவினை மீறாத
அவன் செலவு
அவன் செல்வந்தனாவதை
உறுதி செய்துப் போனது

எல்லை மீறாத
அவனது பரிச்சியங்கள்
அவனது வளர்ச்சியை
நிச்சயித்துப் போனது

அறிவினை மீறாத
அவனது மனது
அவனது நடத்தைக்கு
வழி சமைத்துப் போனது

சமூக நல்லிணக்கம்  மீறாத
தனிமனித செயல்பாடுகள்
அவன் தரம் சொல்லிப் போனது

தகுதி மீறாது
அவனடையும் பதவிகள்
அவன் வெற்றிகள் தொடருமென
பறைசாற்றிப் போனது

பொது நலம் மறக்காத
அவனது சிந்தனைகள்
அவன் சராசரி இல்லையென்பதை
நிரூபித்துப் போனது

இலக்கினை மீறாத
அவன் படைப்புகள்
 காலத்தைஎளிதாய் கடக்கும் என்பதை
சூசகமாய்ச் சொல்லிப் போனது

18 comments:

  1. //மார்பினை மீறித்
    துருத்தாத வயிறு
    அவன் ஆரோக்கியத்தை
    பறைசாற்றிப் போனது//

    இந்த முதல் நான்கு வரிகள் என்னை அப்படியே அடித்து வீழ்த்தி விட்டன. இது சம்பந்தமாக என் புலம்பல்கள் இதோ இந்தப்பதிவினில்:

    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html

    >>>>>

    ReplyDelete
  2. குறளின் இலக்கணம் இல்லாமல் இருந்தால்தான் என்ன...

    குறுகத் தறித்த குரல் ...

    அனைத்தும் வெகு சிறப்பு ஐயா.

    தொடர்கிறேன்.

    த ம

    ReplyDelete
  3. //இலக்கினை மீறாத
    அவன் படைப்புகள்
    காலத்தை எளிதாய் கடக்கும் என்பதை
    சூசகமாய்ச் சொல்லிப் போனது//

    இந்த இறுதி வரிகளைப் படித்ததும், இதற்கு உதாரணம் நம் யாதோ ரமணி சார் அவர்கள் மட்டுமே என என் மனது நினைத்துக்கொண்டது.

    அருமையான ஆக்கம். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    இரசிக்கவைக்கும் அருமையானவரிகள் வாழ்த்துக்கள் த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அத்தனையும் வாழ்க்கைக்கு அவசியமான சிந்தனைகள் ஐயா அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தம +1

    ReplyDelete
  6. அருமையான கவிதை!
    த ம 4

    ReplyDelete
  7. இலக்கினை மீறும் படைப்புகள்தான் அய்யா விளம்பரமாகுது....

    ReplyDelete
  8. அருமையான கவிதை

    ReplyDelete
  9. அருமையான கவிதை

    ReplyDelete
  10. அழகாக வரிசைப் படுத்தி சிறப்பாக முடிக்கப் பட்ட குறிப்புகள்

    ReplyDelete
  11. Very good Theni kavingar.

    ReplyDelete
  12. அத்தனையும் வாழ்க்கைக்கு அவசியமான சிந்தனைகள் ஐயா அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  13. அற்புதம் ரமணி. மிக நன்றாக உள்ளது.

    ReplyDelete