Friday, December 11, 2015

மதிப்பிற்குரிய ரஜினி அவர்களே....

உலகில் சரித்திரம் சிலரை தலைவராக்கி
தன் தேவையைப்பூர்த்தி செய்துகொண்டிருக்கிறது.

சில தலைவர்கள் தங்கள் அபரீதமான உழைப்பால்,
கடவுளின் அருட்பார்வையால்,மக்களின்
பூரண ஒத்துழைப்பால்சரித்திரத்தை தலைகீழாய்ப்
புரட்டிப் போட்டிருக்கிறார்கள்

இதில் இரண்டாம் வகையைச் சார்ந்தவராக
விளங்க வேண்டியவர் நீங்கள்

தங்களை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி என்பது கூட
ஒரு யானையை பானைக்குள் திணிக்க எடுக்கும்
அற்ப முயற்சியே.

தமிழகத்தின் அனைத்து பிரிவினரும்
ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள தங்களை
ஒரு சிறு வட்டத்திற்குள் அடைக்க முயலும் முயற்சி
அற்பத்தனமானதே. அது வேண்டாம்

பெரும்பாலான மக்களுக்கும் இதில் உடன்பாடில்லை

ஆயினும் தங்கள் பாஷையில் சொன்னால்
ஒரு துளி வியர்வைக்கு நூறு கோடி தங்கக் காசை
அள்ளித் தந்த தமிழகத்திற்கு ஏதாவது
செய்ய வேண்டும் என்கிற தீவிர எண்ணம்
தங்களுக்கு இருப்பதால்...

தங்களின் பிறந்த நாள் பரிசாக தமிழக மக்களுக்கு
இந்தப் பேருதவியை செய்து தந்தால் தமிழகம்
 இன்றுபோல்உங்களை என்றும் கொண்டாடும்

தமிழகத்தைச் சார்ந்த மதிப்பிற்குரிய
 சி.சுப்ரமணியம் அவர்கள்நிதியமைச்சராக
இருந்த காலத்தில் இந்தியாவில் ஏற்பட்டிருந்த
கடுமையான பஞ்சத்தை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட
பல்வேறு நடவடிக்கைகளில் விஷமாக
ஒட்டிக் கொண்டு வந்ததுதான் இந்த
நாசகாரச் சீமைக் கருவேலை

இதனுடைய  அபரீதமான பெருக்கம்
மண்வளம் கெடுத்துநீர்வளம் கெடுத்து
காற்றிலுள்ள ஈரப்பதத்தையும்
உறிஞ்சுவதன் மூலம் சுற்றுச் சூழலையும் கெடுத்து

இப்போது தமிழகத்தை நாசகாடாக்கிக் கொண்டிருக்கிறது

அண்டை மாநிலமான கேரளத்தில் அரசின்
உதவியோடுசீமைக் கருவேல முள்ளை முற்றிலும்
அழித்து தங்கள் மண்ணைச் சொர்க்க
பூமியாக்கிவிட்டார்கள்

நாம்தான் நரகத்தின் இடையில் நிற்கிறோம்

இதன் தீமைகளை முற்றாக அறிந்து
நான் சார்ந்திருக்கிறஅரிமா சங்கத்தின் 324 பி3
 கடந்த ஆண்டுக்குரிய சேவைத் திட்டமாக
சீமைக் கருவேல முள்ளை அகற்றுதலைச்
செய்யமுனைய அனைவரின் ஒத்துழைப்போடு
இதுவரைமதுரை தேனி சிவகங்கை திண்டுக்கல்
முதலானமாவட்டங்களில் 10000 ஏக்கருக்கு
மேற்பட்ட நிலப் பரப்பில் இதனை அகற்றிவிட்டோம்.
இன்னும் அகற்றிக் கொண்டிருக்கிறோம்

ஆயினும் இதனை விழிப்புணர்வு இயக்கமாகத்தான்
செய்ய முடிகிறதே ஒழிய முற்றாக ஒழிக்க இயலவில்லை

எங்கள் முயற்சி வானளவு வளர்ந்து நிற்கும் ஒரு
கொடிய அரக்கனை  சிறுகம்பு கொண்டு வெல்ல
முயல்வது போலத்தான் உள்ளது

தாங்கள் மனது வைத்தால் தங்கள் பிறந்த நாள்
கோரிக்கையாக மக்களிடன் இந்த கருத்தை மட்டும்
வலியுறுத்தினால் ,.......

தமிழகத்தில் ஏதேனும் ஓரிடத்தில்
நீங்கள் ஒரு முள்ளை வெட்டினால்போதும்

நிச்சயம் தமிழகத்திலிருந்து இந்த கருவேல முள்
அடியோடுஒழிக்கப் பட்டுவிடும்

இதற்கான சேடலைட் மூலம் தமிழகத்தில் உள்ள
ஒட்டு மொத்தகருவேல முள் பரப்பையும்

அதனைவிஞ்ஞானப் பூர்வமாக ஒழிப்பதற்கான
செயல் திட்ட முறைகளையும் தருவதோடு

உடன் இணைந்து பணியாற்றவும்
பல இயக்கங்கள் எங்களைப் போல தயாராக உள்ளன

தங்கள் பிறந்த நாள் பரிசாக தமிழக மக்களுக்கு
தமிழ் மண்ணின் வளத்தை மட்டும் மீட்டுத் தாருங்கள்

இதை அரசு  மட்டும் செய்ய முடியாது.

தாங்கள் நினைத்தால்
நிச்சயம் இதைஒரு மக்கள் இயக்கமாக்கி
சாதித்துக் காட்டமுடியும்

அதைத் தொடர்ந்து தமிழக மக்களின்
வாழ்வில் வளமும் நலமும் மாண்பும்
நிச்சயம் பல்கிப் பெருகும்

நிச்சயம் இது தமிழக மக்களுக்குச் செய்த வாழ்நாள்
பேருதவியாகவும் இருக்கும்

உங்கள் வாழ் நாள் சாதனையாகவும் இருக்கும்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

16 comments:

  1. கருவேல முட்செடிகளை நீக்கும் உங்களுக்கும் உங்கள் சங்கத்திற்கும் மிக்க நன்றி ஐயா..
    சீமைக் கருவேலம் முழுவதும் அழிந்தால் தமிழ்நாடு செழிக்கும்..
    த.ம.+1

    ReplyDelete
  2. சீமைக் கருவேலம் அழிக்க சிறப்பான ஒரு யோசனை. அவரும் இதில் ஈடுபட்டால் நிச்சயம் இதைச் செய்ய முடியும். யோசிக்கட்டும்.

    ReplyDelete
  3. சிறப்பான இயக்கம்..

    வெட்டிய சீமைக்கருவேல மரங்களை வீணாக்காமல் இயந்திரங்களில் அரைத்து செங்கல்போல் கட்டியாக்கி தொழிற்சாலைகளுக்கு வெப்ப மூலப்பொருளாக்கினால் சுற்றுசூழல் மாசு குறையும்.. லாபகரமாகவும் அமையும்..!

    ReplyDelete
  4. செவிடன் காதில் சங்கு ஊதிக் கொண்டு இருக்கிறீர்கள்........

    ReplyDelete
  5. அருமை நண்பருக்கு, உங்கள் வேண்டுகோள்களும், நீங்கள் கொண்ட கோரிக்கைகளும் நல்ல மனிதர்களெனில் செவிசாய்ப்பதோடு தோளும் கொடுப்பார்கள்...மன்னிக்கவும் நண்பரே..செவிடன் காதில் சங்கு ஊதி உங்கள் சக்தியை வீணாக்கி இருக்கின்றீர்கள்...ரஜினி ஒன்றும் கடவுள் இல்லை...அந்த மாயையிலிருந்து வெளிவரவேண்டி இருப்பதே கருவேலம் கொடுமையிலும் மிகக்கொடுமை....

    ReplyDelete
  6. மிகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது...சத்தமின்றி ஒரு யுத்தம் உங்களைப் போன்ற சான்றோர்களால் நடந்துக் கொண்டிருக்கிறது என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது...பாராட்டுகிறேன்.

    நீங்கள் முன் வைத்திருக்கும் யோசனையும் அருமை...செயல் முறைக்கு வந்தால் நாடு வளம் பெரும் .

    என் அன்பு வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  7. நான் ஒன்று சொல்வேன்.....said...

    நண்பரே..செவிடன் காதில் சங்கு ஊதி உங்கள் சக்தியை வீணாக்கி இருக்கின்றீர்கள்...ரஜினி ஒன்றும் கடவுள் இல்லை...அந்த மாயையிலிருந்து வெளிவரவேண்டி இருப்பதே கருவேலம் கொடுமையிலும் மிகக்கொடுமை...//


    . திருத்தணி
    தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்
    பள்ளிகளில் சீருடை
    சத்துணவு
    சைக்கிளில் டபிள்ஸ்
    இன்னும் இது போன்ற பல விஷயங்களுக்கு
    ஒவ்வொரு தனி நபரே முன் நின்று
    முயன்றிருக்கிறார்கள்
    இதற்கெல்லாம் கடவுளாக இருக்க வேண்டிய
    அவசியமில்லை.நல்ல மனம் போதும் என்பது
    என் அபிப்பிராயம்

    ReplyDelete
  8. தங்களின் இந்த முயற்சிக்கு என் பாராட்டுகள். யார் மூலமாவது நாட்டுக்கு நல்லது நடந்தால் சரியே.

    நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கட்டும்.
    விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. Sincerely appreciate your noble efforts... God will support you, don't depend on Rajini...

    ReplyDelete
  10. ரஜினிக்கு சமூக அக்கறை இருப்பதாக அவர் எங்கேயும் தவறிக்கூட வெளியிடவில்லையே. அவரை எப்படி இந்த மாபெரும் பணிக்கு தேர்ந்தெடுத்தீர்கள். நோக்கம் நல்ல நோக்கம், அதற்கு தேர்ந்தெடுத்த மனிதர்தான் தவறானவர்.

    ReplyDelete
  11. நோக்கம் நல்ல நோக்கம்தான் ஐயா
    ஆனாலும்.................
    தம +1

    ReplyDelete
  12. இருந்தாலும் உங்களுக்கு எத்தனை பேராசை.?

    ReplyDelete
  13. தங்கள் பணி சிறக்க
    வாழ்த்துகள்

    ReplyDelete
  14. மிக நல்ல செயல் தங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் சுப்பர் ஸ்டார் இதனைச் செய்தால் என்றும் அவரே சுப்பர் ஸ்டார்

    ReplyDelete
  15. வணக்கம்
    ஐயா
    தாங்கள் வைத்த வேண்டுதல் நன்று நடைமுறைக்கு வந்தால் சிறப்பு.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete