Monday, March 6, 2017

பெண்ணெனும் ஆணெனும் சொல்லிரண்டும் எதிர்ச்சொல் இல்லை இணைச்சொல்லே

இராகம் என்பது ஆணினமே
தாளம் என்பது பெண்இனமே
இராகமும் தாளமும் இணைந்திருந்தால்
வாழ்வில் என்றும் இன்னிசையே

மேகம் என்பது ஆணினமே
குளிந்தக் காற்றுப் பெண்இனமே
மேகமும் காற்றும் இதையுணர்ந்தால்-
வாழ்வில் என்றும் சுகமழையே

வலிமை என்பதுஆணினமே
மென்மை என்பது பெண்இனமே
வலிமையும் மென்மையும் ஒருங்கிணைந்தால்
வாழ்வில் என்றும் சுகலயமே

பெண்ணெனும் ஆணெனும் சொல்லிரண்டும்
எதிர்ச்சொல் இல்லை இணைச்சொல்லே
திண்ணமாய் மனமிதை ஏற்றாலே
சொர்க்கமாய் மாறும் இவ்வுலகே

10 comments:

  1. //வலிமை என்பது ஆணினமே
    மென்மை என்பது பெண்இனமே
    வலிமையும் மென்மையும் ஒருங்கிணைந்தால்
    வாழ்வில் என்றும் சுகலயமே//

    ஆஹா .... இதனைக் கேட்கவே இனிமையாகவும் சுகமாகவும் சூப்பராகவும் உள்ளது.

    சில ஆண்கள் மிக மென்மையாகவும், சில பெண்கள் மிக வலிமையாகவும் அமைந்து விடுவதும் உண்டு. :)

    இருவரும் வலிமையாகவோ, இருவரும் மென்மையாகவோகூட அமைந்து விடுவதும் உண்டு.

    இதைத் தான் அவரவர்களின் ’ப்ராப்தம்’ என்று சொல்லுகிறார்களோ என்னவோ ! :)

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    நல்ல உவமைகள் விளக்கம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. இனிமையாக சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
  4. சொற்கள் இணையும் போது பிறப்பது இசை மழை போல் இருக்கிறது ஆனால் ஆணும் பெண்ணும் இணந்தால் விபத்தின் விளைவும் ஏற்படலாம் (சும்மா ஒரு மாறுதலுக்காக_)

    ReplyDelete
  5. தனிமையிலே இனிமை காண முடியுமா? இணைந்தால்தான் எதுவுமே நடக்கும்!
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  6. பெண்ணெனும் ஆணெனும் சொல்லிரண்டும்
    எதிர்ச்சொல் இல்லை இணைச்சொல்லே
    ஏற்றுக்கொள்வோம்

    ReplyDelete