Saturday, May 6, 2017

சுகமாகவே சிகரம் தொடுவோம்...

பயணத்தின் இலக்கே
பயணத்தை அர்த்தப்படுத்தும்

பயணத்தின் அர்த்தமே
தூரம் குறித்துச் சிந்திக்கும்

பயணத்தின் தூரமே
வாகனத்தை முடிவு செய்யும்

வாகனமே பயண
வேகத்தை முடிவு செய்யும்

வாகன வேகமே
காலத்தை முடிவு செய்யும்

இத்தனையும்  பொருத்தே
இலக்கடைதலும் இருக்கும்

இதை புரியாதவன்
நல்ல பயணியும் இல்லை
சுகமாய் இலக்கடைதலும் இல்லை

எழுத்தின் நோக்கமே
கருவை முடிவு செய்யும்

கருவின் தாக்கமே
வடிவத்தை முடிவு செய்யும்

கொள்ளும் வடிவதுவே
வார்த்தைகளை முடிவு செய்யும்

வார்த்தைகளைப் பொருத்தே
உணர்வும் உள்ளடங்கும்

உணர்வின் உள்ளடக்கமே
படைப்பினைச் சிறப்பிக்கும்

இதைப் புரியாதவன்
நல்ல படைப்பாளியும் இல்லை
அவன் படைப்பு
சிறப்படைதலும் இல்லை

எச் செயலுக்கும்
முதலில்
மூலம் அறியும்
ஞானம் பெறுவோம்

பின்எச்செயலையும்
நிறைவாய்ச்   செய்து
சுகமாகவே
சிகரம் தொடுவோம்

11 comments:

  1. முதலில் மூலம் அறியும்
    ஞானம் பெறுவோம்
    அருமை கவிஞரே

    த.ம. 1

    ReplyDelete
  2. மூல முதற்பொருளைக் கண்டடையுங்கள் என்று கட்டளையிடுகிறீர்கள். ஏற்றுக்கொள்கிறோம்.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  3. //எச் செயலுக்கும் முதலில் மூலம் அறியும் ஞானம் பெறுவோம்//

    உங்கள் மூலம், மூலம் பற்றிய மூலம் அறிந்து
    ஞானம் கொண்டோம்.

    மூலம் அறியாமல் வெளியிடப்படும் படைப்புகள் படைப்பாளிக்கு மட்டுமல்லாமல் வாசிப்போருக்கும் ’மூல’க்கடுப்பினை உண்டாக்கக்கூடும்.

    ’ஆண் மூலம்’ அரசாளும் என்று ’பெண் மூலம்’ நிர்மூலம் எனவும் ஏதேதோ இந்த ஜோஸ்யர்கள் வேறு சொல்லி பயமுறுத்தி வருகிறார்கள்.

    இது மூல நக்ஷத்திரத்தைப் பற்றிய செய்திகள் தானே தவிர மூல வியாதி பற்றியதல்ல என நினைக்கிறேன்.

    படிக்கும் பலர் மூலமும் இதற்கு பல கருத்துகள் வரலாம் என நினைக்கிறேன்.

    ’மூலம்’ பற்றி மூளை மூலம் யோசிக்க வைத்த
    இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. மிக அருமை.. நம் மனதில் இருக்கும் எண்ணங்கள்தானே எழுத்தாக வெளிப்படுகின்றன... பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும்.

    ReplyDelete
  5. நதி மூலம் ,ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்பார்கள் ...ஆனாலும் மூலம் அறியும் ஞானம் அவசியம்தான் :)

    ReplyDelete
  6. சிகரம் தொட்டவர் ஐயா தாங்கள்

    ReplyDelete
  7. பகவான்ஜீ கருத்தும் சரிதான், அருமையான வரிகள்

    ReplyDelete
  8. அருமையான எண்ணங்கள்
    சிறந்த வழிகாட்டல்

    ReplyDelete
  9. You have touched the Horizon with these lines

    ReplyDelete