Thursday, December 1, 2011

போதைக்காரனின் புலம்பல் (நிச்சயமாக நானில்லை )


மாலை நேரம் ஆனாப் போதும்
மனசு குளிருதே-இந்த
பாழாய்ப் போன உடம்பு மட்டும்
அனலாய் காந்துதே
கால்கள் இரண்டும் கடையைப் பார்த்து
தானாய் நடக்குதே-இந்த
பாழாய்ப் போன போதைப் பழக்கம்
பாடாய்ப் படுத்துதே

வேட்டி துண்டு விலகி கிடக்க
விழுந்து கிடந்ததும்-நடு
ரோட்டில் விழுந்து வாந்தி எடுத்து
நாறிக் கிடந்ததும்
வீடு போகும் வழியை  மறந்து
தெருவில் திரிந்ததும்-நினைவில்
கூடி வந்தும் என்ன செய்ய
உடம்பு கொதிக்குதே

வ்லியைப் போக்க நல்ல மருந்து
என்று சொல்லியே -ஒரு நாள்
வலிய எனக்கு ஓசி தந்து
உசுப்பு ஏத்தியே
குழியில் என்னைத் தள்ளிப் போனான்
சகுனி நண்பனே-இன்று
குழிக்குள் கிடக்கேன் குப்பை போல
நாறி அழுகியே

காசு கொடுத்து யாரும் முதலில்
குடிப்பதே இல்லை-பின்னே
தாலி வித்து கூடக் குடிக்க
தயங்குவ தில்லை
கேடு கெட்ட இந்தப் பழக்கம்
எவர்க்குமே வேண்டாம்-பின்னே
கூறு கெட்டு என்னைப் போல
புலம்பவும் வேண்டாம்
             

118 comments:

  1. //கேடு கெட்ட இந்தப் பழக்கம்
    எவர்க்குமே வேண்டாம்-பின்னே
    கூறு கெட்டு என்னைப் போல
    புலம்பவும் வேண்டாம்


    ///

    அதானே ? நல்லா முடிச்சிருக்கீங்க....

    ReplyDelete
  2. -பின்னே
    கூறு கெட்டு என்னைப் போல
    புலம்பவும் வேண்டாம்// இன்று பல வீடுகளை பலர் இப்படித்தான் புலம்புகிறார்கள்..

    பகிர்வுக்கு நன்றி ..

    ReplyDelete
  3. அர்த்தம் பொதிந்த கவிதை....

    நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. தினசரி சம்பளம் பெறுவோரே, இந்நிலையில் அதிகம்! தானாகத் திருந்தினால்தான் விமோச்சனம்!

    ReplyDelete
  5. கவிதை உங்களுக்கு கை வந்த கலையாய் இருக்கிறது ரமணி சார்

    ReplyDelete
  6. காசு கொடுத்து யாரும் முதலில்
    குடிப்பதே இல்லை-பின்னே
    தாலி வித்து கூடக் குடிக்க
    தயங்குவ தில்லை

    //

    பல இடங்களில் நடக்கிறது.
    //

    கவிதையில் சந்தம்
    திரும்ப திரும்ப
    வாசிக்க வைக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. உண்மை ரமணி சார்...
    ஓசியில் ஆரம்பித்து ....தாலி அடமானம் வரை...குடி உண்மையில் குடியை கெடுப்பதே...

    ReplyDelete
  8. காசு கொடுத்து யாரும் முதலில்
    குடிப்பதே இல்லை-பின்னே
    தாலி வித்து கூடக் குடிக்க
    தயங்குவ தில்லை
    >>>
    நெற்றி பொட்டில் அடித்தாற் போன்ற நிஜம் சுடும் வரிகள். ரசித்தேன். இதை படித்து சிலராவது திருந்துவார்களா?

    ReplyDelete
  9. ஷைலஜா //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. நண்டு @நொரண்டு -ஈரோடு //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. ரமேஷ் வெங்கடபதி //

    நீங்கள் சொல்வது மிகச் சரி
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. rufina rajkumar //

    தங்கள் வாழ்த்து மிக்க மகிழ்ச்சியளிக்கிறது
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. கோகுல் said... //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. ரெவெரி //

    நீங்கள் சொல்வது மிகச் சரி தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. ராஜி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. கேடு கெட்ட இந்தப் பழக்கம்
    எவர்க்குமே வேண்டாம்

    குடி குடியைக்கெடுக்குமே
    குலத்தையும் அழிக்கும்...

    ReplyDelete
  18. தமிழ்மணத்தில் 10 out of 10 கொடுக்கும் வாய்ப்பு பெற்றேன்.

    மிகவும் நல்ல கவிதை.

    படிக்கும் போதே எனக்குக்‘கிக்’ ஏறிடும் படியான
    போதையைக் கொடுத்தது கவிதையின் வரிகள்.

    பயனுள்ள விழிப்புணர்வுக் கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  19. காசு கொடுத்து யாரும் முதலில்
    குடிப்பதே இல்லை-பின்னே
    தாலி வித்து கூடக் குடிக்க
    தயங்குவ தில்லை//
    ஆரம்பத்தில் இலவசம் நாளடைவில் எல்லாமே அதன் வசம் .
    நல்ல விழிப்புணர்வு கவிதை

    ReplyDelete
  20. மிகவும் நல்ல கவிதை!!!

    ReplyDelete
  21. கவிதை செம அசத்தல்.... சூப்பர் பாஸ்

    ReplyDelete
  22. குடிகாரர்கள் எல்லாரும் இப்படி தம் நிலை பற்றித் தெளிவாக உணர்ந்திருந்தால் திரும்பவும் குடியை நாடுவாரா என்று தோன்றுகிறது. எந்தக் குடிகாரரைக் கேட்டாலும் தான் குடிப்பதற்கு ஒரு நியாயம் சொல்வார். முதலில் நாகரிகம் கருதி என்பார், பின் நட்புக்காக என்பார், பின் அளவோடுதான் என்பார். அப்படியே படிப்படியாய் அதற்கு அடிமையாகிவிடுவார். பின் என்ன? தன்னிலை மறந்து தெருவில் கிடக்கவேண்டியதுதான்.

    குடிகாரனின் நிலையிலிருந்து படைத்த சந்தக் கவிதையின் போதையில் நாங்களும் இப்போது கிறங்கிக் கிடக்கிறோம். பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  23. கீதா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. வை.கோபாலகிருஷ்ணன் said... //

    தங்கள் வாழ்த்து மிக்க மகிழ்ச்சியளிக்கிறது
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. angelin said... //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. இராஜராஜேஸ்வரி //

    நீங்கள் சொல்வது மிகச் சரி தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. துரைடேனியல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. Priya said... //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. துஷ்யந்தன் said... //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. குடிகாரன் ஒருவனையேப் படம்பிடித்துக் காட்டி
    கொஞ்சுதமிழ் கவிமரபில் சந்தமுடன் தீட்டி
    விடிவெள்ளி கவிஞரென விளங்குகின்றீர் நன்றே
    விளக்கமுற குடிக்கொடுமை விளகினீரே இன்றே
    அடிதோறும் அர்த்தமுள்ள‍ அருமைமிகு வரிகள்
    அமைந்திடவே யாத்துள்ளீர் அறியநல் நெறிகள்
    வடிகாலாம் குடிகாரர் துயர்நீக்கும் மருந்தே
    வழங்கிவிட்டீர் என்தம்பி கவிதையென விருந்தே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. பல இடங்களில் நடக்கும் குடிகாரர்களின் கூத்தை கவிதையாக தந்திருக்கீங்க அருமை

    ReplyDelete
  32. கேடுகெட்ட, குடும்பத்தை அழிக்கும் இந்தப் பழக்கத்தை அரசாங்கமே ஊக்குவித்து நடத்துகிறதே என்பதுதான் என் வருத்தம். ஒரு வயதான ஆசிரியர் ஷுகர் காரணமாக, சாலையின் ஓரத்தில் மயங்கி விழ, அவர் கிடந்த இடத்தின் அருகில் ஒரு டாஸ்மாக் கடை இருந்ததால் குடிகாரன் என்று நினைத்து யாரும் கவனிக்காமல் சென்றதும், அவரது ஒழுக்கத்தை நன்கறிந்த ஒருவர் கவனித்து பதறி அவரை மீட்டதும் ஆன ஒரு சம்பவம் என் நண்பர் சொல்லியிருக்கிறார். இத்தகைய கடைகள் தெருவுக்குத் தெரு இருக்கின்றன. உங்களின் இந்தக் கவிதையை நான் மிகவும் ரசித்தேன் ரமணி சார்! மனதைத் தொட்டது... இல்லையில்லை, மனதில் சென்று அமர்ந்தது!

    ReplyDelete
  33. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    கவிதையாலான அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. K.s.s.Rajh //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. கணேஷ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவானஅழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. கவிதை படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. உங்களுக்கு நான் ஒரு உண்மையை சொல்லுகிறேன். நான் குடிப்பதுண்டு ஆனால் ஒரு நாளும் உங்கள் கவிதையில் வந்தபடி என் வாழ்க்கையில் ஏதும் நடந்தது இல்லை. எப்படி, எவ்வளவு, எந்த நேரத்தில் குடிப்பது என்று நன்கு அறிந்து தங்களின் உடல் நலத்திற்கு ஏற்றவாறு குடித்தால் உங்கள் கவிதையில் கூறியபடி ஏதும் நடக்காது என்பதற்கு நானே ஒரு உதாரணம். இதை சொல்லுவதால் நான் வெட்கம் ஏதும்படுவதில்லை. நான் தினக் குடிகாரன் அல்ல.

    குடியால் அழிந்தவர்களைவிட நல்ல உணவு பழக்க வழக்கமின்மையும் முறையான உடற்பயிற்சியின்மையாலும்(உடல் உழைப்பு இல்லாமலும் முறையான மனப்பயிற்சி இல்லாமலும் உடல் நலகுறைவால் சிறியவயதில் இறந்து குடும்பங்களை சீரழிப்பவர்கள் மிக அதிகம். வேண்டுமானல் சிறிய ரிசர்ச் பண்ணி பாருங்கள் இப்போது எவ்வளவு இளைஞர்கள் நிரிழிவு மற்றும் மாரடைப்பால் பாதிக்கபட்டுள்ளனர் என்று உங்களுக்கு தெரியும்.

    இந்த மாற்று கருத்தை நான் உங்களிடம் கூறுவதால் என்னை தவறாக எடுத்து கொள்ளமாட்டீர்கள் என கருதுகிறேன்.

    ReplyDelete
  37. அருமையான விளக்கம்
    வெளி நாட்டில் குடிப்பவர்கள் எல்லாம்
    எப்படி குடிப்பது ஏன் குடிப்பது என அறிந்து குடிக்கிறார்கள்
    அதனால்தான் அவர்களால் மனைவி மக்களுடன் அமர்ந்து
    வீட்டில் குடிக்க முடிகிறது.இங்கிருப்பவர்களுக்கு அது இல்லை
    குடிப்பவர்கள் எல்லாம் தீயவர்கள் என்கிற மோசமான அபிப்பிராயம்
    நிச்சயமாக எனக்கில்லை
    குடிக்கத் தெரியாமல் குடித்து சீரழிபவர்கள் இங்கு அதிகம்
    அவர்கள் குறித்தே இந்தப் பதிவு
    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. போதை - வாழ்க்கைப் பாதையையே - மாற்றும்

    என்பதை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

    அருமை.

    ReplyDelete
  39. ;;;;வேட்டி துண்டு விலகி கிடக்க
    விழுந்து கிடந்ததும்-நடு
    ரோட்டில் விழுந்து வாந்தி எடுத்து
    நாறிக் கிடந்ததும்
    வீடு போகும் வழியை மறந்து
    தெருவில் திரிந்ததும்-நினைவில்
    கூடி வந்தும் என்ன செய்ய
    உடம்பு கொதிக்குதே;;;

    நெத்தியடி வரிகள் சார்
    குடிகாரர்களின் குழப்பத்தையும்
    அவர்கள் தேடும்
    அற்ப காரணங்களையும்
    அருமையாக தந்து இருக்கிறிர்கள்

    ReplyDelete
  40. காசு கொடுத்து யாரும் முதலில்
    குடிப்பதே இல்லை-பின்னே
    தாலி வித்து கூடக் குடிக்க
    தயங்குவ தில்லை
    கேடு கெட்ட இந்தப் பழக்கம்
    எவர்க்குமே வேண்டாம்-பின்னே
    கூறு கெட்டு என்னைப் போல
    புலம்பவும் வேண்டாம்

    அருமையாகச் சொன்னீர்கள் ஐயா .
    மிக்க நன்றி பகிர்வுக்கு .....

    ReplyDelete
  41. மிக அருமையான விழிப்புணர்வு கவிதை... அருமை சகோ!

    ReplyDelete
  42. குடி -- ம்ம்ம்ம் கோடானு கோடி அணுகுண்டைவிட கொடியது..

    Good point sir.

    ReplyDelete
  43. A.R.ராஜகோபாலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவானஅழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. அம்பாளடியாள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவானஅழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. Madhavan Srinivasagopalan said... //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. முனைவர்.இரா.குணசீலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. மாய உலகம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. அண்ணே நிதர்சன உண்மை சொல்லிபுட்டீங்க!

    ReplyDelete
  49. குடிமகன்களுக்கு சாட்டையடி பதிவு குரு...!!!

    ReplyDelete
  50. அளவா குடிச்சிட்டு சத்தமில்லாமல் சாப்பிட்டு உறங்குரவங்களையும் பார்த்து இருக்கேன்...!!!

    ReplyDelete
  51. விக்கியுலகம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. MANO நாஞ்சில் மனோ //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    குடிக்கத் தெரியாமல் குடித்து சீரழிபவர்கள் இங்கு அதிகம்அவர்கள் குறித்தே இந்தப் பதிவு

    ReplyDelete
  53. //கேடு கெட்ட இந்தப் பழக்கம்
    எவர்க்குமே வேண்டாம்-பின்னே
    கூறு கெட்டு என்னைப் போல
    புலம்பவும் வேண்டாம்//

    அருமை.. இதெல்லாம் நிறையப் பேருக்கு பட்ட பிறகுதானே தெரிய வருது.

    ReplyDelete
  54. அமைதிச்சாரல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. முதல் குடியும் முதல் புகைப்பும் பிறர் கொடுத்து வருவதே என்று நன்றாய் தெரிந்துமதை பழக்கமாக்கிக் கொண்டு பிறரை குறை கூறல் சரியோ. குடிப்பதும் புகைப்பதும் ஆண்மைத்தனம் என்று எண்ணுவோர் பலருண்டு. அப்படி நினைத்தால் அவர்கள் அறிவில்லாதவரே. எழுபதுகளுக்கு முந்தி மதுவிலக்கு அமலில் இருந்தபோது இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. அரசாங்க கஜானாவை நிரப்ப என்று கூறிக் கொண்டே, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நாசக் காரர்கள் இருக்கும் வரை புலம்பல் தான் இருக்கும் வழி.

    ReplyDelete
  56. G.M Balasubramaniam //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவானஅழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. டாஸ்மாக்கை ஒழித்துக் கட்ட வேண்டிய தேவை, உங்கள் கவிதைகளில் தெரிகிறது

    ReplyDelete
  58. போதைப் புலம்பலாக இருந்தாலும் நல்ல விசயம் தான் சொல்கிறான் . விளையாட்டாக ஆரம்பிப்பது அவனையே ஆக்ரமித்துக் கொள்கிறது என்பது அருமை

    த.ம 20

    ReplyDelete
  59. தினசரி நடப்பை அருமையான கவிதையாக்கி விட்டீர்கள்.நன்று.

    ReplyDelete
  60. குடி குடியை கெடுக்கும் குடிப்பவரையும் கெடுக்கும் என்பதை கவிதை போக்கில் சொல்லியுள்ளீர்கள் சார்

    ReplyDelete
  61. அழகிய அறவுரை சார்.அருமையாக உள்ளது.

    ReplyDelete
  62. இனிமை. மிக வித்தியாசமாக சொற் சுவையுடன் கவிதை அமைந்துள்ளது. வாழ்த்துகள் சகோதரா. தொடரட்டும் பணி மீண்டும் சந்திப்பேன்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  63. சூப்பர் சார் ..
    இப்போ சரக்கு ரேட் வேற ஏத்த போறாங்களாம்
    நம்ம குடிமக்கள் தான் பாவம்..

    இந்த மாதிரி சிலத படிச்சு திருந்தினா சரி

    ReplyDelete
  64. நல்ல அறிவுரை.இதை வாசிப்பவர்கள் கொஞ்சமாவது யோசிப்பார்கள் !

    ReplyDelete
  65. 'குடி'மக்களின் குடித்தனம் பாழ்படுமென்பதை உணர்த்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  66. "காசு குடித்து யாரும் முதலில் குடிப்பது இல்லை"//

    நண்பர்களின் சேவை!

    ReplyDelete
  67. suryajeeva //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. M.R //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  69. சென்னை பித்தன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  70. r.v.saravanan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  71. Lakshmi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  72. ஸாதிகா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  73. kovaikkavi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. jayaram thinagarapandian //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  75. ஹேமா //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  76. விச்சு //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  77. ஸ்ரீராம். //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  78. பெண்களின் கழுத்தில் தொங்குகிற தாலிக்கொடிகளை விற்கிற கேடு நடக்கிற சமூகத்தில் இன்றொன்றும் நடக்கப்போகிறதாய் சொல்லிச்செல்கிறது தகவல் ஒன்று/
    சகல் வசதிகளுடனும்,வெளிநாட்டு மதுபான வகையறாக்களுடனும் அனுமதிக்கப்பட்ட பார்கள் வரஇருக்கிறதாமே?

    ReplyDelete
  79. காசு கொடுத்து யாரும் முதலில்
    குடிப்பதே இல்லை-பின்னே
    தாலி வித்து கூடக் குடிக்க
    தயங்குவ தில்லை

    மிகச் சரியான உண்மை வரிகள்...
    இதனை படித்தும் திருந்தாதோர், ...... ஒன்றும் சொல்வற்கில்லை...

    அருமையான படைப்பு...

    ReplyDelete
  80. மிக அருமை சார்... TM 24

    ReplyDelete
  81. குளிர்காலதுக்கேற்ற...உண்மையான படைப்பு...

    ReplyDelete
  82. "பாழாய் போன" பழக்கம் உடல் நலத்தையும் பாடாய் படுத்தும் என புரிந்து கொள்ளல் வேண்டும்.

    ReplyDelete
  83. நல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .

    ReplyDelete
  84. நல்ல சந்தம்.

    அரசாங்கம் ஊக்குவிக்கிறது என்றா நினைக்கிறீர்கள், கணேஷ்? நம்முடைய தீர்மானங்களுக்கும் செயல்களுக்கும் அரசாங்கம் எப்படிப் பொறுப்பாகும்? திருடினால் சிறை என்று கூடச் சொல்கிறது அரசாங்கம். திருட்டு ஒழிகிறதா? :)

    ReplyDelete
  85. நல்ல பகிர்வு ... எனது பதிவில் போராளி - புதிய போர் பழைய களம் ...http://pesalamblogalam.blogspot.com/2011/12/blog-post.html

    ReplyDelete
  86. காசு கொடுத்து யாரும் முதலில்
    குடிப்பதே இல்லை-பின்னே
    தாலி வித்து கூடக் குடிக்க
    தயங்குவ தில்லை

    உண்மையான வார்த்தைகள். இப்படித்தான் பழக்கிவிட்டு ‘ஒரு அடிமை சிக்கிட்டான்னு’ கடை வாசல்ல விட்டுடறாங்க. மாட்டிகிட்டவங்க பாடு மீளவே முடியாத நரகம்.

    ReplyDelete
  87. ரமணி சார்..

    முதல் மூன்று பத்திகளும் இசையோடு கேட்கத் தோணுகிறது. எளிமையும் பளிச்சென்று பதியும் சொற்களுமாக அசத்துகிறது.

    ReplyDelete
  88. சரக்கு செமை போதை தலைவரே. கலக்குறீங்க போங்க.

    ReplyDelete
  89. கேடு கெட்ட பழக்கம் தான்:(((

    நல்ல அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் சார்.

    ReplyDelete
  90. வணக்கம் நண்பரே

    இன்று நமது தளத்தில்


    நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள கலோரி மற்றும் சத்துக்கள் அளவு

    http://thulithuliyaai.blogspot.com/2011/12/blog-post_06.html

    ReplyDelete
  91. காசு கொடுத்து யாரும் முதலில்
    குடிப்பதே இல்லை-பின்னே
    தாலி வித்து கூடக் குடிக்க
    தயங்குவ தில்லை......நல்ல அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்

    www.rishvan.com

    ReplyDelete
  92. //காசு கொடுத்து யாரும் முதலில்
    குடிப்பதே இல்லை-பின்னே
    தாலி வித்து கூடக் குடிக்க
    தயங்குவ தில்லை
    கேடு கெட்ட இந்தப் பழக்கம்
    எவர்க்குமே வேண்டாம்-பின்னே
    கூறு கெட்டு என்னைப் போல
    புலம்பவும் வேண்டாம்//

    ஆமாம் காசு கொடுத்து கெட்ட பழக்கத்தை யாரும் ஆரம்பிப்பது இல்லை.ஆனால் பழகி விட்டாலோ அவ்வளவுதான்.

    அருமையாக எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  93. விமலன் said...

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  94. Thamizh //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  95. சசிகுமார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  96. தென்காசித் தமிழ்ப் பைங்கிளி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  97. மாதேவி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  98. அம்பாளடியாள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  99. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவானஅழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  100. ananthu //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  101. ரிஷபன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  102. sivakumaran //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  103. ஹ ர ணி .

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  104. ananthu .. //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  105. கோவை2தில்லி /..

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  106. M.R //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  107. rishvan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  108. RAMVI .said. //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  109. adathumurai sanga koothathil padikkapokiren

    ReplyDelete
  110. balachandran //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  111. அனுபவமில்லா ஒன்றையும் மிக அழகாக சொல்ல உங்களால் மட்டுமே முடியும் .

    ReplyDelete
  112. sasikala //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  113. ''காசு கொடுத்து முதலில் யாரும் குடிப்பதேயில்லை''
    பொடி, சிகரட், ஆகியவற்றின் கதையும் இதுதான்.
    என்ன அருமையான நண்பர்கள்? வாழ்க நட்பு!
    இனிய அறிவுரைக்கு நன்றி சார்

    ReplyDelete
  114. radhakrishnan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete