Thursday, December 8, 2011

அனுபவமே விலை


ஒரு மலை வாசகஸ்தலத்திற்கு ஒரு செல்வந்தர்
தன் மனைவி மக்களுடன் சென்று கொண்டிருந்தார்
இருள் சூழத் தொடங்குகிற பொழுது திடுமென்று
பாதி வழியில் கார் பழுதாகி நின்று போனது
கார் டிரைவர் என்ன முயன்றும் என்ன காரணம் எனக்
கண்டுபிடிக்க முடியவில்லை

அந்த இடம் வனாந்திரம் போல் இருந்ததாலும்
காட்டு விலங்குகள் அதிகம் திரியும் பகுதி எனவும்
திருடர்கள் பயம் அதிகம் உண்டு எனக்
கேள்விப் பட்டிருந்ததாலும் செல்வந்தர்
மிகவும் கலங்கிப் போனார்

வயதுக்கு வந்த இரண்டு பெண்களும் மனைவியும்
அணிந்திருந்த அதிகப் படியான நகைகளும்
அவர் அடி வயிற்றைக் கலக்கத் தொடங்கியது

அந்த வழியில் தெய்வாதீனமாக ஒருகார் வர
அதை நிறுத்தி ஏதும் உதவ முடியுமா எனக் கேட்க
அந்தக் கார் டிரைவரும் சிறிது நேரம் எஞ்சினை
செக் செய்துவிட்டு தான் சரிசெய்து தருவதாகவும்
ஆனால் அதற்கு கூலி ஆயிரம் ரூபாய் ஆகும்
 எனத் தெரிவித்தார்

செல்வந்தர் இருந்த நிலைக்கு அது மிக
அதிகமாகப் படவில்லைஉடன் சரி செய்யச்
 சொல்லி ஆயிரம் ரூபாயைக் கொடுக்க
கார் டிரைவரை காரில் ஏறி அமரச் சொல்லி காரை
ஸ்டார்ட் செய்யச் சொல்லிவிட்டு எஞ்சினில் ஒரு
குறிப்பிட்ட இடத்தில் ஒரு சிறு கல்லைவைத்துத் தட்ட
கார் ஸ்டார்ட் ஆகிப் போனது

செல்வந்தர் மிகவும் சங்கடப்பட்டுப் போனார்
வெறுமனே ஒரு கல்லைவைத்து தட்டியதற்கு
ஆயிரம் ரூபாய் கூலி என்றால் அது மிகவும்
அநியாயமாகப் பட்டது பொறுக்காமல் கேட்டும் விட்டார்
"ஏனப்பா வெறும் கல்லைவைத்து தட்டியதற்கு
ஆயிரம் ரூபாய் என்றால் அநியாயம் இல்லையா ?"

வந்தவன் அமைதியாகச் சொன்னான்
"சார் நான் கல்லை வைத்து தட்டியதற்கு
உங்களிடம் பணம் வாங்கவே இல்லை அது ஓ.சி
ஆனால் இங்கு தட்டினால் கார் ஸ்டார்ட்
ஆகும் என்பதைத்தெரிந்து கொள்ள பதினைந்து
ஆண்டுகள் செலவிட்டு இருக்கிறேன்
அந்த அனுபவத்திற்குத்தான் இந்தக் காசு "என்றான்

செல்வந்தரால் பதில் ஏதும் பேச முடியவில்லை


103 comments:

  1. பணம் மட்டும் எதையும் தீர்மானிக்காது என்பதற்கு நல்ல உதாரணம்..

    நன்றி..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record

    ReplyDelete
  2. ரொம்ப சரிதான் அனுபவம் தான் சிறந்தபடிப்பு.

    ReplyDelete
  3. :)
    நல்ல கதை! மிகசிறந்த அனுபவப்பாடம்!

    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  4. உண்மையே...

    நல்லதொரு பதிவு...

    ReplyDelete
  5. ♔ம.தி.சுதா♔ //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. Lakshmi //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  7. Lali //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. கவிதை வீதி... // சௌந்தர் // //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. Education free யா கொடுக்க கூடாது-ன்னு ஒரு argument இருக்கு. அது ரொம்பவே சரி தான். (அதுக்குன்னு இந்த காலத்து school போல- pre KG கு term கு 60,000 வாங்கறது கொஞ்சம் அதிகம் தான்). Free யா கொடுத்தா அதோட மதிப்ப புரிஞ்சுக்க மாட்டாங்க! நல்ல கதை...

    ReplyDelete
  10. அனுபவத்தை தவிர வேறேது பெரிதில்லை.
    சிறந்த பதிவு ..

    ReplyDelete
  11. எங்கே தட்ட வேண்டும் என்ற பட்டறிவுக்குத்தானே விலை... நிச்சயம் நியாயமான விலை தான்... நல்ல பகிர்வு...

    ReplyDelete
  12. நல் அனுபவத்துககு விலை ஏது.அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  13. துரைடேனியல் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. Matangi Mawley //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. வேடந்தாங்கல் - கருன் *! //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. அனுபவ கதை அழகாக. வாழ்க்கைக்கு மிக உபயோகமாக.

    ReplyDelete
  18. ஸாதிகா //.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. நண்டு @நொரண்டு -ஈரோடு

    தங்கள் வரவுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. தமிழ் உதயம் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. வேலையாகும் வரை இருக்கும் உணர்வு நடந்த பிறகு இருப்பதில்லை என்பதற்கு இந்த நிகழ்வு,ஓர் உதாரணம்! தம7!

    ReplyDelete
  22. நல்ல கருத்து..
    உங்களிடம் கவிதை வடிவில் எதிர்பார்த்தேன்..

    ReplyDelete
  23. ரமேஷ் வெங்கடபதி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. சிறு விதையில் வரும் பெரிய விருட்சம்போல சிறுகதையில் பெரிய நல்ல கருத்து..வாழ்த்துகள் திரு ரமணி.

    ReplyDelete
  25. அனுபவத்தின்
    அழகை சொன்ன
    அசத்தலான
    க(வி)தை

    ReplyDelete
  26. விலைமதிப்பில்லா அனுபவத்தின் மகத்துவத்தை அழகாக சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  27. அந்த இறுதி வார்த்தைகளுக்கு பலமான கைத்தட்டல்கள் நண்பரே..
    இதைத்தான் அனுபவம் பேசுகிறது என்பார்கள்..
    எவ்வளவோ படித்து தேற்றங்களில் கைதேர்ந்தவர்கள் எல்லாம்
    அனுபவ அறிவுக்கு முன்னாள் ஒன்றுமில்லை என ஆகிப்போன கதை
    தினமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன..
    அழகான சம்பவம் மூலம் எளிமையாக விளக்கியமை நன்று நண்பரே..

    ReplyDelete
  28. சம்பவங்களை சாமர்த்தியமாக கையாண்டு அதில் வாழ்வியல்
    கருத்துக்களை கூறும் துரோணாச்சார்யா மந்திரத்தை உங்களிடமிருந்து
    கற்றுக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  29. இப்ப தான் சென்னை பித்தன் சார் தளத்தில் ஒரு நீதிக்கதை படிச்சிட்டு வந்தேன்... நீங்களுமா...

    ReplyDelete
  30. தன் தொழிலில் தான் பெற்ற அனுபவத்தை காசாக்கத் தெரியாமல் இலவசமாகக் கொடுத்து கொடுத்தே வாழ்வில் நொடித்த ஒருவரைப் பார்த்திருக்கிறேன். அந்தச் செல்வந்தரின் கேள்வியும் நியாயமற்றது. எப்படியோ கார் இயங்கினால் போதும் என்று நினைத்தவருக்கு எப்படி இயங்கினால் என்ன? சொன்னபடி அதற்கானக் கூலியைத் தரவேண்டியதுதானே? இப்படியும் காலநேரமறியாது தர்க்கம் பேசுவ்பர்கள் இருக்கிறார்கள்! அனுபவப்பாடம் எங்களுக்கு இலவசம்!
    நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  31. ஷைலஜா //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. Rathnavel //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. A.R.ராஜகோபாலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. மகேந்திரன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. கோகுல் //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. Philosophy Prabhakaran //

    பிலாஸபி பிரபாகரனாக இருந்து கொண்டு
    இப்படி நீதிக் கதைகளுக்கெல்லாம்
    சங்கடப்பட்ட்டால் எப்படி ?
    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. கீதா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கள்
    விரிவான அழகான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. நறுக்கென்று கடுகு‌ போல் சிறிய கதையாக இருந்தாலும் அது சொன்ன விஷயமோ கடல் போல் பெரியது. அனுபவத்திற்கு விலைமதிப்பு ஏது? நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!

    ReplyDelete
  39. அனுபவத்திற்கு விலை நல்ல கதை. ரமணிசார் உங்களை போன்ற அனுபவசாலிகள் எழுதும் பதிவிற்கு எங்கள் அன்பைதான் விலையாக தருகிறோம்.

    ReplyDelete
  40. கணேஷ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கள்
    விரிவான அழகான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. Avargal Unmaigal //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. இது போன்ற அனுபவங்கள் எனக்கும் உண்டு. ஏன், அனைவருக்குமே இருக்கும்தான்....நியாயம்தானே...!

    ReplyDelete
  43. ஸ்ரீராம். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. சரியான பதில் மற்றும் கதை அருமைன்னே!

    ReplyDelete
  45. விக்கியுலகம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. அனுபவத்திற்குதான் அந்த விலை.அருமையான பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  47. அனுபவத்தின் மதிப்பை அழகாகச் சொல்லும் கதை!

    ReplyDelete
  48. அனுபவ அறிவுக்கு விலையே கிடையாது. காரியம் நடந்த பிறகு மனசுதான் எப்படியெல்லாம் யோசிக்குது :-)

    ReplyDelete
  49. //இங்கு தட்டினால் கார் ஸ்டார்ட்
    ஆகும் என்பதைத்தெரிந்து கொள்ள பதினைந்து
    ஆண்டுகள் செலவிட்டு இருக்கிறேன்
    அந்த அனுபவத்திற்குத்தான் இந்தக் காசு//

    அனுபவமே வாழ்க்கை சுருக்கமா இருந்தாலும் சூப்பரா சொல்லி இருக்கீங்க....

    ReplyDelete
  50. RAMVI //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. சென்னை பித்தன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. அமைதிச்சாரல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கள்
    விரிவான அழகான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. சசிகுமார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. தட்டுவது யார் வேண்டுமானாலும் தட்டலாம்.

    தட்ட வேண்டிய இடம் எது, எப்படி எங்கே எந்தளவு தட்டினால், அது வேலைக்கு ஆகும் என்று தெரிவது தான் பட்டறிவு.

    அதற்கான விலை நியாயமே தான்.

    தெரிந்த கதையை ரமணி சார் சொல்லும் விதத்தில் சொல்லும்போது அதன் மதிப்பே உயர்ந்து விடுகிறது.

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    தமிழ்மணம்: 16 vgk

    ReplyDelete
  55. வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. கார் டிரைவர் சொல்லும் நியாயம் சரியானதே, செல்வந்தரும் ஒத்து கொண்டுதானே பணம் கொடுத்தார், கேள்வி ஏன் கேக்குறார் அப்புறம்..?

    ReplyDelete
  57. MANO நாஞ்சில் மனோ //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. http://www.rvsm.in/2011/12/blog-post_06.html

    இதே போல முன்னால ஒரு கதை.. கையெழுத்து போடத் தெரிஞ்சிருந்தா கோவில்ல மணி அடிச்சுகிட்டு இருந்திருப்பேன்னு..

    ReplyDelete
  59. http://www.rvsm.in/2011/12/blog-post_06.html

    தங்கள் வரவுக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  60. விச்சு //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. Eventhough this has been heard before, it gains credence when it is written by you. All the best.

    ReplyDelete
  62. G.M.Balasubramaniam //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  63. பணத்தால் பெற முடியாது சிலவற்றை அவற்றில் ஒன்று அனுபவ அறிவு பாடம் .அருமையான கருத்துள்ள நீதி கதை

    ReplyDelete
  64. படிப்புத் தராத அனுபவம் வாழ்க்கை தரும் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் !

    ReplyDelete
  65. திண்டுக்கல் தனபாலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  66. angelin //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  67. ஹேமா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம்! தமிழர் சிந்தனை களத்தில் நீங்களும் இணைந்து எழுதலாமே!

    * யார்? யாரோடு? இன்றைய பத்திரிகை செய்திகளை படித்ததில் உறுத்தலான சில விடயங்களை குறித்து

    * ரஜினி, கமல், ஜெய் ஆகாஷ்! ஆயுதப்போராட்டம்! நடிகர் ரஜினி, கமல் முதல் ஜெய் ஆகாஷ் போன்ற நடிகர்கள் வரை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும்

    * இந்தியாவின் ஜென்டில்மேன் முதல்வர்! இவர் இந்தியாவின் பிரதமராவாரா?

    * பாபர் மசூதி உடைப்பும் அது தரும் படிப்பினையும்! ஹிந்து பாசிஸ்டுகள் பாபர் மசூதியோடு மட்டும் தங்கள் திட்டத்தை நிறுத்திக்கொள்ளவில்லை!

    ReplyDelete
  69. PUTHIYATHENRAL //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  70. அருமையான பதிவு ..
    சூப்பர்

    ReplyDelete
  71. jayaram thinagarapandian //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  72. அனுபவமே வாழ்வின் மிகப்பெரிய ஆசான் சிறிய கதைமூலம் அழகாக சொல்லிவிட்டிர்ர்கள்.

    ReplyDelete
  73. அம்பலத்தார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. சொல்ல வேண்டிய கருத்தினை சுருக்கமாக கதை மூலம் தெரிவித்து விட்டீர்கள்.

    ReplyDelete
  75. அனுபவத்தின் பெருமையை மிக அழகாக
    எடுத்துக்காட்டியுள்ளீர் அருமை!

    த ம ஒ 20

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  76. கோவை2தில்லி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  77. புலவர் சா இராமாநுசம் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  78. சி.பி.செந்தில்குமார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  79. பணத்தை விடவும் அனுபவம் உயர்ந்தது,நன்று

    ReplyDelete
  80. shanmugavel //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  81. அனுபவம் விலை மதிப்பற்றது என்று சொல்வார்கள்... இதைதான் உங்கள் கதை சொல்லுது பாஸ்.... நல்ல விடயத்தை சொல்லி போறீங்க... குட்

    ReplyDelete
  82. அனுபவத்துக்கு விலைமதிப்பில்லை.

    ReplyDelete
  83. துஷ்யந்தன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  84. LIFE IS EXPERIENCE. VERY NICE RAMANI

    ReplyDelete
  85. Latha Vijayakumar //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  86. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  87. ''..செல்வந்தரால் பதில் ஏதும் பேச முடியவில்லை..''

    இப்படி அனுபவங்கள் (பாதையில் அல்ல வேறு சந்தர்ப்பங்களில்)எமக்கும் கிடைத்துள்ளது. கணவர் கூறுவார் அது அப்படித்தான் என்று கொடுத்துள்ளோம்.

    ReplyDelete
  88. kovaikkavi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  89. அனுபவத்தின் அருமையை சொன்ன கதை நன்று

    ReplyDelete
  90. r.v.saravanan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  91. நீங்கள் அடுத்த முறை கடவுளைக் கண்டேன் ... சிறகுமுளைத்த குதிரை கண்டேன் , மலை பேசக் கண்டேன்
    என்று எழுதினாலும்
    நான் ஆஹா , பேஷ் , பேஷ் என்று சொல்வதைத் தவிர எனக்கு நோ சாய்ஸ் ..... வேறு என்னத்த சொல்ல ?

    ReplyDelete
  92. ஸ்ரவாணி //

    தங்களுக்கு என் பதிவும் அதன் கருத்தும்
    உடன்பாடில்லை என நினைக்கிறேன்
    காலமென்னை சரிசெய்கிறதா எனப் பார்ப்போம்

    ReplyDelete
  93. இதைத்தான் அனுபவம் பேசுகிறது என்பார்கள்

    ReplyDelete
  94. sasikala //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  95. வேலை முடிந்ததும் கூலி கொடுக்கத் தயக்கம் வருகிறதே. இதுதான் மனித இயல்போ?
    கருத்துள்ள கதை. நன்றி சார்.

    ReplyDelete
  96. radhakrishnan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  97. அன்பின் ரமணி -

    வலைச்சர மூலமாக வந்தேன்

    அனுபவமே விலை - உண்மை உண்மை - கதை செல்லும் விதம் நன்று - எளிய நடையில் அருமையான கதை - அனுபவம் என்ற ஒரு சொல்லினை அடிப்படையாக - கருவாக வைத்து எழுதப்பட்ட கதை நன்று - நல்வாழ்த்துகள் ரமணி - நட்புடன் சீனா

    ReplyDelete