Sunday, December 11, 2011

சிரிப்பின் பலமறிவோம்

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

104 comments:

  1. சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கை இருப்புன்னு கலைவாணர் சொன்ன சிரிப்பல்லவா? ‌வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டு்ல போகும்? சிரிச்சா என்ன செலவா ஆகும்! அருமையான வரிகளை அழகுறத் தந்திருக்கிறீர்கள். மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. உலகு அறியச் சொல்லி நாமும்
    உயர்வு கொள்ளுவோம்//
    செய்திடுவோம். அதுக்கு முதல்ல நமக்கு சிரிக்கத் தெரியணுமே ? நல்ல கவிதை ஐயா

    ReplyDelete
  3. அழகான கவிதை

    ReplyDelete
  4. குழந்தை மனதில் தெய்வம் இருந்து
    சிரிப்பைத் துவங்குமே-அது
    குழந்தை இதழில் மெல்ல வழிந்து
    இல்லம் நிறைக்குமே-அந்த
    அழகை உணர துன்பம் எல்லாம்
    அழிந்து ஒழியுமே

    பூவாய் மலர்ந்து சிரித்து மண்ம் பரப்பி
    மனம் நிறைந்த பகிர்வு.. பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. //இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
    உணர்ந்து கொள்ளுவோம்-இதை
    உலகு அறியச் சொல்லி நாமும்
    உயர்வு கொள்ளுவோம்//

    அருமையான கருத்து.
    அழகான கவிதை.
    த.ம - 5

    ReplyDelete
  6. // விழிகள் இரண்டும் காண வென்றே
    அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
    செவிகள் இரண்டும் கேட்க வென்றே
    புரிந்தி ருக்கிறோம்-இனி
    இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
    உணர்ந்து கொள்ளுவோம்-இதை
    உலகு அறியச் சொல்லி நாமும்
    உயர்வு கொள்ளுவோம்//


    சகோ!
    பாடல் முழுவதும் அருமை!
    அதிலும் மேலே உள்ள வரிகள் தங்கத்தில் பொதிந்த
    வைரம் போல் மின்னுகின்றன!
    த ம ஒ 5

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. அருமையான கவிதை.

    ReplyDelete
  8. A hearty laughter can throw the pains a mile away. A neat presentation, sir.

    ReplyDelete
  9. விழிகள் இரண்டும் காண வென்றே
    அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
    செவிகள் இரண்டும் கேட்க வென்றே
    புரிந்தி ருக்கிறோம்-இனி
    இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
    உணர்ந்து கொள்ளுவோம்-இதை
    உலகு அறியச் சொல்லி நாமும்
    உயர்வு கொள்ளுவோம்


    அழகான ரசனை மிக்க வரிகள்.

    ReplyDelete
  10. எதையும்
    இதயம் தன்னில் மூடி வைத்தால்
    என்றும் துன்பமே


    அழகான வார்த்தைகள் கொண்டு அருமையான அர்த்தம் தரும் பாடல் அருமை நண்பரே

    தமிழ்மணம் 9

    ReplyDelete
  11. அர்த்தம் தரும் அருமையான பாடல்...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. கணேஷ்

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. சசிகுமார் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. rufina rajkumar //

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. Riyas //

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. கோவை2தில்லி //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. //இனி
    இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
    உணர்ந்து கொள்ளுவோம்//

    oh! Fantastic..

    ReplyDelete
  19. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. Rathnavel //

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. G.M.Balasubramaniam //

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. Lakshmi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. M.R //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. தமிழ் உதயம் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்

    ReplyDelete
  25. Madhavan Srinivasagopalan //


    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. நண்டு @நொரண்டு -ஈரோடு //

    தங்கள் உடன் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. சிரிப்பைப் போற்றுதும், சிரிப்பைப் போற்றுதும். நல்ல கவிதை ரமணி. 'இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே' வரிகளில் நானும் விழுந்தேன். எழுந்திருக்க மனம் வரவில்லை இன்னும்.

    ReplyDelete
  28. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. //வளர்ந்த நிலவு வானில் இருந்து
    மெல்லச் சிரிக்குமே-அதன்
    அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
    மணந்து சிரிக்குமே-அதன்
    மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
    சொர்க்க மாகுமே-அந்த
    உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
    மனிதம் பூக்குமே//

    பூவாய் மலர்ந்து சிரித்து மணம் பரப்பும்
    மனம் நிறைந்த பகிர்வு.

    வெகு அழகான கவிதை! பாராட்டுக்கள்.

    தமிழ்மணம்: 12 vgk

    ReplyDelete
  30. அன்பு தணிந்த இந்த உலகில் சிரிப்பும் இல்லாமல் போய் விட்டது ஆச்சர்யம்தான்...!!!

    ReplyDelete
  31. அன்று வீட்டுத்திண்ணையில் அமர்ந்து அளவளாவி சிரித்து மகிழ்ந்த மனிதன், இன்றைக்கு உணர்வில்லாதவனாக டிவி முன்பு அமர்ந்து இருக்கிறான்...!!!

    ReplyDelete
  32. //குழந்தை மனதில் தெய்வம் இருந்து
    சிரிப்பைத் துவங்குமே-அது
    குழந்தை இதழில் மெல்ல வழிந்து
    இல்லம் நிறைக்குமே//

    மனம் கவர்ந்தவரிகள்.நன்று

    ReplyDelete
  33. விழிகள் இரண்டும் காண வென்றே
    அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
    செவிகள் இரண்டும் கேட்க வென்றே
    புரிந்தி ருக்கிறோம்-இனி
    இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
    உணர்ந்து கொள்ளுவோம்-இதை
    உலகு அறியச் சொல்லி நாமும்
    உயர்வு கொள்ளுவோம்///

    அடடா..என்ன அருமையான வரிகள்.ஒவ்வொரு கருவையும் கையில் எடுத்துக்கொண்டால் பின்னி பெடல் எடுக்கின்றீர்கள் சார் கவிதை வரிகளில்..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. வணக்கம்!

    //இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
    உணர்ந்து கொள்ளுவோம் //

    புகைப்படக் கலைஞர்கள் இனிமேல் “ஸ்மைல் ப்ளீஸ்” என்று சொல்ல வேண்டியதில்லை. தங்கள் கவிதையின் மையக் கருவே இந்த வரிகள்தான். வளரட்டும் தங்கள் தமிழ்ப் பணி.

    ReplyDelete
  35. சிரிப்பதற்கு ஏன் கஞ்சத்தனம் ...? சிரிப்போம் , உயர்வோம்...பகிர்வுக்கு நன்றி ...!

    ReplyDelete
  36. இதழ்கள் பற்றிய தங்கள் வர்ணனையில் தேனில் விழுந்த ஈ போல நானும் வீழ்ந்து கிடக்கிறேன்..அதுவும் வெகு சுகமாக...


    அன்புடன்,
    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  37. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்று இருப்பவன் தான் சிரிக்கிறான்... அது அவன் சுய கவலையை மறக்கவா? தெரியவில்லை..

    ReplyDelete
  39. MANO நாஞ்சில் மனோ //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. shanmugavel //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. ஸாதிகா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. தி.தமிழ் இளங்கோ //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. ananthu //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. suryajeeva //

    தங்கள் வரவுக்கும் சிந்திக்கத் தூண்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. சிரித்து வாழ்வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ஞாபகம் வருகிறது.கள்ளமில்லாச் சிரிப்போடு வாழ்வோம்.நல்ல வரிகள் எப்போதும்போல !

    ReplyDelete
  47. ஹா....ஹா...சிரிப்பு சிரிப்பு....எனக்கு பிடித்த விடயம்.

    ReplyDelete
  48. ஹேமா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. சி.பி.செந்தில்குமார் //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. //இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
    உணர்ந்து கொள்ளுவோம்-//
    படிக்கும்போதே உணர்ந்து புன்னகை தோன்றவைக்கிற வரி!

    ReplyDelete
  51. கே. பி. ஜனா... //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. //விழிகள் இரண்டும் காண வென்றே
    அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
    செவிகள் இரண்டும் கேட்க வென்றே
    புரிந்தி ருக்கிறோம்-இனி
    இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
    உணர்ந்து கொள்ளுவோம்-இதை
    உலகு அறியச் சொல்லி நாமும்
    உயர்வு கொள்ளுவோம்//

    உங்கள் விரல்கள் ஐந்தும் எழுதவென்றே
    தெரிந்திருக்கிறோம்-கொண்ட
    எழுதுகலன் சிந்தனை மட்டுமன்றி
    சிரிப்பும் கற்றுத் தர
    தெளிந்திருக்கிறோம்

    அருமையான பதிவு.பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  53. ரெம்ப அழகா பாடல்கள் எழுதுறீங்க பாஸ்...... ;)

    ReplyDelete
  54. ஆஹா எத்தனை நேர்த்தியான உணர்வுகள் அற்புதம் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  55. இதழ்கள் இருப்பது சிரிப்பதற்கென்றே புரிந்துகொள்ளும் படியாக புனைந்த கவிதை. மிருகங்களும் சிரிக்கும் அதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் எமக்கு இல்லை. சிரிப்பின் மகத்துவம் உணர்த்தினீர்கள். அதைத் தெரிந்தும் ஏன் சில மனிதர்கள் முகத்தில் வரட்சியைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் தெரிவதில்லை. காசு கொடுத்தான் சிரிப்பை வாங்க முடியாது இருக்கும். இவர்களுக்கு உங்கள் கவிதை சிந்திக்க வரி தந்திருக்கின்றது .

    ReplyDelete
  56. raji //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. துஷ்யந்தன் //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. ! ❤ பனித்துளி சங்கர் ❤ ! //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. சந்திரகௌரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  60. சிரிக்காத இதழ்கள் இருந்தென்ன லாபம்...


    அபாரமான கவிதை! :-)

    ReplyDelete
  61. RVS //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  62. நன்றாக இருக்கிறது. சிரிப்பின் பலமறிய உங்களின் எழுத்தின் பலம் தமிழனுக்கு தேவைபடுகிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  63. இணையத்தில் உங்கள் ஆதரவை தெரிவிக்க:
    நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.

    http://www.change.org/petitions/central-government-of-india

    நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.

    ReplyDelete
  64. விலங்குளிலிருந்து நம்மை வேறுபடுத்தி காட்டும் சிரிப்பின் அருமை பற்றி அழகான கவிதை. பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  65. Avargal Unmaigal //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  66. ராஜி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  67. சசிகுமார் //

    தங்கள் வரவுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. கள்ளமில்லாக் குழந்தையின் சிரிப்பாய்க் கவர்ந்திழுக்கும் கவிதை. இறுக்கம் தளர்த்தி இதம் தரும் மென்புன்னகைப் பரிமாற்றம் கூட நிகழ்வதில்லை குடும்பத்தினரிடையே. சிரிப்பின் மகத்துவம் உணர்த்தும் அழகுக் கவிதையாக்கத்துக்குப் பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  69. சிரிப்பின் சிறப்பை உணர்த்தும் மிக அழகான கவிதை.உலகத்தில் உள்ள எந்த ஒரு ஜீவராசிகளிடமும் இல்லாத உணர்வு மனிதனிடம்தான் இருக்கிறது.அதனால் கட்டாயம் சிரிக்க வேண்டும்.

    வாய்விட்டு சிரித்தால் நேய்விட்டுப்போகும் என்று பெரியவர்கள் தெரியாமாலா சொல்லிவைத்திருக்கிரார்கள்??

    அருமை.

    ReplyDelete
  70. கீதா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  71. RAMVI //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  72. புன்னகைதான் வாழ்க்கை. உயிர்த்திருத்தல். சிரிக்காதவன் பிணமே. அருமையான சொற்கோர்ப்பில் புன்னகைத்த கவிதை.

    ReplyDelete
  73. ஏழிசை பிறந்ததெல்லாம்
    சிரிப்பின் சந்தத்தால் என
    யாரோ ஒரு கவிஞன் சொன்னது ஞாபகம் வருகிறது..

    சிரிப்பின் வலிமையை
    ஆழமாய் சொல்லும் பதிவு மிக அருமை நண்பரே.

    ReplyDelete
  74. ஹ ர ணி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  75. மகேந்திரன் //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  76. அண்ணே சிரிப்பு மிகப்பெரிய சொத்தாய்சேன்னே..சரியா சொன்னீங்க!

    ReplyDelete
  77. சிரிப்பும் புன்னகையும் மனிதனுக்கு தெய்வம் தந்த கொடை. சிரிப்பும் புன்னகையும்தான் எளிதில் தொற்றிக் கொள்ளும், ஆனால் எல்லோராலும் விரும்பப் படும் தொற்று நோய்....

    ReplyDelete
  78. Sir,
    Migavum arumai. Thodara Vaalthukkal.

    Tamilmanam Vote 21.

    ReplyDelete
  79. துரைடேனியல் //

    தங்கள் வரவுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  80. ஸ்ரீராம். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  81. விக்கியுலகம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  82. மனிதன் மட்டுமே அழ விரும்புகிறான். கடவுள் அவன் அழுகையைச் சமன் செய்யக் கொடுத்த அற்புதமான கொடை சிரிப்பு.

    மிருகங்களும் தாவரங்களும் சிரிக்கின்றன.அது நம் சிரிப்பைப் போன்றதல்ல.அவை மனதால் சிரிக்கின்றன.அதை உணர்வது எல்லோருக்கும் சாத்தியமில்லை.

    ஆனால் உணர்வின் பாற்பட்டு அவை ஒருபோதும் அழுவதில்லை.உடல்வலி மட்டுமே அவற்றின் அபூர்வமான கண்ணீரை வெளிப்படுத்துகின்றன.

    தாவரங்களோ அழுவது அவற்றின் மனதால் மட்டுமே. வெட்டப்பட்ட மரங்களிலும் பிய்த்தெறியப் பட்ட இலைதழைகளிலும் அவற்றின் கண்ணீர் மறைந்திருக்கின்றன.

    ReplyDelete
  83. நெஞ்சை கொள்ளை கொள்ளும் பதிவு....
    சிரிப்பின் அவசியம் சிறப்பா சொன்ன விதம் புதுமை ..
    வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  84. ''..சிரிக்க வென்றே
    உணர்ந்து கொள்ளுவோம்-இதை
    உலகு அறியச் சொல்லி நாமும்
    உயர்வு கொள்ளுவோம்..'''
    இதை மறந்து தானே பலர் வேதனை அனுபவிக்கின்றனர். மறக்காமல் இருப்போம். வாழ்த்துகள் சகோதரா.(சில பார்க்கத் தவறியவைகளுக்கும் கருத்திட்டுள்ளேன்)
    வேதா. இலங்காதிலகம்.
    http://www,kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  85. சுந்தர்ஜி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  86. அரசன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  87. kovaikkavi //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  88. திண்டுக்கல் தனபாலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  89. சூப்பர் கவிதை. குழந்தைகளின் சிரிப்புக்கு இணை ஏது?

    ReplyDelete
  90. vanathy //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  91. நல்ல தத்துவக் கவிதை.... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  92. சி.கருணாகரசு //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  93. \\இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
    உணர்ந்து கொள்ளுவோம்

    வாய் இருப்பது வம்பு பேசத்தான் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்,

    துள்ளலான நடை.
    அருமையான கவிதை.

    ReplyDelete
  94. சிவகுமாரன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  95. அற்புதமான கவிதை படித்த உணர்வு ஏற்பட்டது..

    ReplyDelete
  96. மதுமதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  97. சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
    மனிதப் பிறவியே-இதை
    அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
    பெரிய கொடுமையே
    இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
    இன்பம் இன்பமே-எதையும்
    இதயம் தன்னில் மூடி வைத்தால்
    என்றும் துன்பமே


    வரிகள் அருமை

    ReplyDelete
  98. r.v.saravanan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  99. ''இதழ்கள் இரண்டும் சிரிக்கவென்றே உணர்ந்து
    'கொள்ளுவோம்''
    அட்டா, இதை உணர்ந்தால் சிரிப்பைத் தொலைப்போமா
    சிடுமூஞ்சிகளுக்கு சரியான சவக்கடி
    இனியகவிதைக்கு நன்றி சார்

    ReplyDelete
  100. radhakrishnan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete