Wednesday, December 14, 2011

புதுப் பொங்கலில் பழைய உப்பு

மனவெளிக்காட்டினில்
மண் மேடாய் எண்ணங்கள்
சிந்தனை ஏர் நடத்தி
விதைத்து வைத்த கவி விதைகள்
கால வெள்ளத்தில் கரைந்து போமோ ?
எண்ணங்கள் கேள்வியாய்
உருமாறி என்னை
உலுக்கி எடுத்துப் போக
ஆழ உழுகிறேன்
தேவுடா நுவ்வே கதி

இதய கட்டுத்தறியில் எண்ணப் பாவுகள்
பொருட்சுவை இழையோட
நெய்துவைத்த கவியாடைகள்
கால நகம் பட்டுக்
கிழிந்தழிந்து போமோ ?
மனக் குளத்தில்
சிறுகல் எழுப்பிய சிற்றலயையாய்
எண்ணங்கள் விரிந்து பரவ
அழுந்த நெய்கிறேன்
ஈஸ்வரோ ரஷது

மனப் பட்டறையில்
வார்ப்புகளாய் எண்ணங்கள்
அனுபவ உலையிலிட்டு
சீர் செய்த கவிதாயுதங்கள்
காலக் காற்றினில் துருவேறி
மண்ணாகி மக்கிப் போமோ ?
கேள்விகள் பயமாகி
வெறியேற்றிப் போக
இன்னும் கூராக்குகிறேன்
தெய்வமே நீயே துணை

84 comments:

  1. தலைப்பினைப்போல் கவிதையிலும் புதுமை.

    ReplyDelete
  2. கேள்விகள் தான் வாழ கற்றுக்கொடுக்கின்றன.
    நல்ல கவிதைகளையும் பெற்றுத்தருகின்றன.

    ReplyDelete
  3. அச்சம் தேவையில்லை,
    அன்றுமுதல் விதைக்கப்பட்டவை யாவும்
    ஆழ்மனந்தனில்தாம்.
    கவலை தேவையில்லை,
    கனத்தக் கவியாடையது
    கிழியும் சாத்தியமில்லை,
    வருத்தமும் தேவையில்லை,
    கவிக்கருக்கள் யாவும்
    காலத்தாலும் மழுங்காத்திறம் கொண்டவை.

    மனிதனுக்குதான் மதமும் மொழியும். கடவுளுக்கு ஏது? கவலையூடே உணர்த்தும் கருத்திலும் உண்டு ஆழமும், அழுத்தமும், கூர்மையும். பாராட்டுகள்.

    ReplyDelete
  4. நல்ல படைப்பு.
    புது கவிதையில் கடவுள் வாழ்த்து
    புது பொங்கலில் பழைய உப்பு என்பது அதுதானே?

    ReplyDelete
  5. வீரியத்தோடு வாருங்கள்...
    எதுவும் வீணாகாது...

    ReplyDelete
  6. ஸாதிகா //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  7. சத்ரியன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. கீதா //

    கடவுள் வாழ்த்தினை புதுக் கவிதை பாணியில்
    எழுதலாம என முயற்சித்துப் பார்த்தேன்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. Preethy //

    மிகச் சரி
    நான சொல்ல நினைத்தது அதுவே
    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  10. விக்கியுலகம் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. கவிதை வீதி... // சௌந்தர் // //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. கவிதையை -பயிராக்கி, ஆடையாக்கி, ஆயுதமாக்கி - அழகான கற்பனை.

    ReplyDelete
  13. கேள்விகள் தான் வாழ்க்கையே..
    நல்ல கவிவரிகள்..

    ReplyDelete
  14. அருமையான கவிதை.

    ReplyDelete
  15. தமிழ் உதயம் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. * வேடந்தாங்கல் - கருன் *!

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. மிக அழகாக சிறப்பாக நெய்து இருக்கீங்க, காலத்துக்கும் அழியாது இருக்கும் கவிதை.

    ReplyDelete
  18. * வேடந்தாங்கல் - கருன் *! //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. கோவை2தில்லி //.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. RAMVI //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. நண்டு @நொரண்டு -ஈரோடு //..

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. படைப்புகளை தாளிலும் அச்சினால் படைக்கலாமே, புத்தக வடிவில்! முயற்சியுங்கள்! பதிவு நன்று!

    ReplyDelete
  23. அருமையான கேள்விக் கவிதை வரிகள் .மிக்க நன்றி
    ஐயா பகிர்வுக்கு ......

    ReplyDelete
  24. அம்பாளடியாள்

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. இதய கட்டுத்தறியிலிருந்து செதுக்கி வடித்த கவிதை பேசுகின்றது.

    ReplyDelete
  26. ரமேஷ் வெங்கடபதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    நல்ல கருத்துக்கும் மனமார்ந்த நன்றி
    முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  27. மாதேவி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. அனுபவ உலையிலிட்டு
    சீர் செய்த கவிதாயுதங்கள்

    என்றும் வீண் போகாது..

    ReplyDelete
  29. ஏன் இந்தக் கலக்கம் அத்தனைக் கவிப் பொங்கலும் வாசகர் எம் மனதில் நறுசுவையாய் தித்திக்க கயாயுதங்கள் அத்தனையும் வாசகர் மனங்களில் ஆயுதப் பரிசோதனை செய்து மனச் சீர் செய்ய வீணாகப் போகும் என்ற எண்ணம் சற்றேனும் இல்லாது கவி வடிப்பீர்களாக. முறையாய் செய்த எக்காரியமும் எக்காலத்திலும் வீணாவதில்லை. இன்றுபோல் என்றும் உலகம் உங்கள் பெயர் சொல்லும். அழகுக் கவிதைக்கு அன்புடன் என் வாழ்த்து

    ReplyDelete
  30. ரிஷபன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. சந்திரகௌரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. இது நாள் வரை உப்பின் சுவை உவர்ப்பு அனா எண்ணியிருந்தேன்.நீங்கள் புதுப்பொங்கலில் இட்ட உப்பு என் எண்ணத்தை மாற்றி விட்டது இப்படி இனிக்கிறேதே?

    ReplyDelete
  33. அருமையான கவிதை! பிரமாதம்! -இதற்கு மேல் எதுவும் சொல்லத் தோன்றவில்லை ரமணி சார்!

    ReplyDelete
  34. புதுப் பொங்கள்..

    அருமை அன்பரே..

    ReplyDelete
  35. கோகுல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. கணேஷ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. முனைவர்.இரா.குணசீலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. நல்லா இருக்கு கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. எல்லா வரிகளும் அருமை...கவிதாயுதங்கள் என்ற சொல் பிடித்தது.

    ReplyDelete
  40. Lakshmi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. ஷைலஜா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. பொருட்சுவை இழையோட
    நெய்துவைத்த கவியாடைகள்
    கால நகம் பட்டுக்
    கிழிந்தழிந்து போமோ ?
    மனக் குளத்தில்

    அழகாக நெய்த கவிதை

    ReplyDelete
  43. அட்டகாசமாய் இருக்கு பாஸ்..... ரியலி குட்... கவிதை வரைவதில் உங்களை யாரும் மிஞ்ச முடியாது பாஸ்

    ReplyDelete
  44. பூங்குழலி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. துஷ்யந்தன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. புத்தம்புதுப் புதுக்கவிதையில்
    அழகாக கடவுள் வாழ்த்துப்
    பாடியிருக்கிறீர்கள்....
    மிக அருமை நண்பரே.

    ReplyDelete
  47. மொத்தமும் அருமை. குறிப்பாய் இரண்டாம் பாரா.

    ReplyDelete
  48. மகேந்திரன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. ஸ்ரீராம். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. கவிதை மிக அருமை சார்....

    ReplyDelete
  51. //இதய கட்டுத்தறியில் எண்ணப் பாவுகள்
    பொருட்சுவை இழையோட
    நெய்துவைத்த கவியாடைகள்
    கால நகம் பட்டுக்
    கிழிந்தழிந்து போமோ ?//
    அருமையான வரிகள்!!

    ReplyDelete
  52. அண்ணே கடைசி வரி தான் வாழ்கை போல...!

    ReplyDelete
  53. சசிகுமார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. மனோ சாமிநாதன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. விக்கியுலகம் //

    நீங்கள் புரிந்து கொண்டதே மிகச் சரி
    வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. வித்தியாசமான வாழ்த்துகள்.. அருமை

    ReplyDelete
  57. ////மனப் பட்டறையில்
    வார்ப்புகளாய் எண்ணங்கள்
    அனுபவ உலையிலிட்டு
    சீர் செய்த கவிதாயுதங்கள்
    காலக் காற்றினில் துருவேறி
    மண்ணாகி மக்கிப் போமோ ?
    கேள்விகள் பயமாகி
    வெறியேற்றிப் போக
    இன்னும் கூராக்குகிறேன்
    தெய்வமே நீயே துணை////

    அட்டகாசமான கவிதை வரிகள்

    ReplyDelete
  58. நல்ல்தொரு கவிதை வாசித்த திருப்தி..

    ReplyDelete
  59. உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். ஆண்டவன் அருளைவிட நம்மையே நாம் நம்ப வேண்டும் என்று நினைப்பவன் நான். கடவுள் ஒரு கிரியா ஊக்கி என்பது மட்டில் உடன்பாடுண்டு. AS YOU SOW ,SO YOU REAP.கவிதை புனைவு அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  60. //மனக் குளத்தில்
    சிறுகல் எழுப்பிய சிற்றலயையாய்
    எண்ணங்கள் விரிந்து பரவ
    அழுந்த நெய்கிறேன்//

    அருமையான வரிகள். அற்புதமான வார்த்தை பிரயோகங்கள். பிரமாதம் சார். புது முயற்சி. பாரதி, பிச்சமூர்த்தி, தருமு சிவராமு, சிற்பி, அப்துல் ரகுமான், மேத்தா, வைரமுத்து இன்னும் பெயர் குறிப்பிட முடியாத அருமையான கவிஞர்களும் புதுப் புது வடிவங்களில் கவிதை எழுத முயன்றதால்தான் இன்று தமிழ் கவிதை வளர்ச்சியுற்றது. வடிவம் முக்கியமல்ல. உள்ளடக்கம்தான் முக்கியம் என்பது என்னுடைய கருத்து. தொடருங்கள் சார். காத்திருக்கிறோம்.
    என்றும் அன்புடன்,
    உங்கள் சகோ. துரை டேனியல்.

    ReplyDelete
  61. தமிழ்மணம் வாக்கு செலுத்தி விட்டேன்.

    ReplyDelete
  62. அமைதிச்சாரல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  63. G.M Balasubramaniam //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  64. துரைடேனியல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  65. K.s.s.Rajh //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  66. மதுமதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  67. தெய்வமே நீயே துணை
    >>
    அவனன்றி நமக்கு ஏது துணை. நல்ல கேள்விகள், நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  68. ராஜி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  69. கேள்விகள்தான் வாழ்வைப் புதுப்பிக்கிறது.நல்ல கவிதை !

    ReplyDelete
  70. ஹேமா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  71. நம்முடைய படைப்புகள் முடிவிலியாக இருக்கும் பொழுது அதற்கு அழிவே கிடையாது sir. . . அருமையான படைப்பு. . .

    ReplyDelete
  72. பிரணவன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  73. ஏனிந்த ஐயம்? எழுத்தை
    வாழ்விக்கும் வையம்!

    ReplyDelete
  74. கே. பி. ஜனா... //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  75. கவிதை மிக அருமை

    ReplyDelete
  76. r.v.saravanan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  77. புதுப்புது எண்ணங்கள், முன்னேற்றம், சுதந்திரம், அறியாமை, ஏன் இன்றய உலகில் அன்பு கூட அடைபட்டிருப்பது கேள்விகளில் தானே...

    உங்களது கவிதையும், வரிகளும் எனக்கும் முன்னோடியாய் இருக்கிறது...

    அருமையான கவிதை முன்னோடி அவர்களே...

    ReplyDelete
  78. Thamizh //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  79. இனி 'ப‌ழைய‌ க‌ள் புதிய‌ மொந்தையில்' என‌ சொல்வ‌தைவிட‌ 'புதிய‌ பொங்க‌லில் ப‌ழைய‌ உப்பு' என‌ சொல்வ‌து மிக‌ அழ‌காக‌ இருக்கும் போல‌. இறை வ‌ண‌க்க‌த்தை மொழிவேறுபாடின்றி அனைவ‌ருக்குமாக‌ அருமையான‌ சொல்லாட‌ல்க‌ளுட‌ன் க‌விதையாக்கிய‌ திற‌ன் போற்ற‌ற்குரிய‌து. உங்க‌ சிந்த‌னை வீச்சு ஒவ்வொரு ப‌டைப்பிலும் மாறுப‌ட்ட‌ பிரகாசிப்போடு!

    ReplyDelete
  80. nilaamaghal //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  81. ''அநுபவ உலையிலிட்டு சீர் செய்த கவிதாயுதங்கள்''
    அருமையான வரிகள்---இனியகவிதைக்கு நன்றி சார்

    ReplyDelete
  82. radhakrishnan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete