Thursday, January 5, 2012

எறும்பு ஊற...

"முயலாமைக் கதையில் "
ஆமை ஜெயித்தல்தான் சிறப்பு
முயல் ஜெயித்தால்
அது நிச்சயம் அதிசயமே
யானை நடந்து
மண் தரையில் தடம் பதிவதுண்டு
கற்களில் பதிந்ததாக பழமொழியில்லை
எறும்பு ஊறத்தான் கற்கள் தேயும்

பணி நாட்களில் யுத்தத்தை
ஒரு நாளும் சந்திக்காது
ஓய்வுபெற்று வந்த
இராணுவ வீரர்கள்   கூட
தினமும் பயிற்சி செய்யாது
பணியில் நிலைத்திருக்க
சத்தியமாய் சாத்தியமே இல்லை

பறந்துபோய்
சிகரம் இறங்கினால்
அது சமதளம் போலத்தானே 

முட்டி தேய பகலிரவாய்
நடந்தேறிப் பார்த்தால்தான்
சிகரமே சிகரமாய்த் தெரியும்
நமக்கும் அதன் அருமை புரியும்

தொடர் முயற்சியில் வென்ற
பல முட்டாள்கள் கூட
உலகினில் உண்டு
மெத்தனத்தில் ஜெயித்த 
பேரறிஞர்  எவரும் நிச்சயம் இல்லை

தெளிவாய்  இதை அறிவோம்
தொடர்ந்து நாளும் முயல்வோம்
அரியவை எதையும்
மிக எளிதாய் அடைந்து உயர்வோம்

92 comments:

  1. "முட்டி தேய பகலிரவாய்
    நடந்தேறிப் பார்த்தால்தான்
    சிகரமே சிகரமாய்த் தெரியும்"-- Brilliant! Summarizes everything!

    ReplyDelete
  2. பழகப் பழகத்தான் பாதை தெரியும்!
    உண்மை சகோ!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. உந்துசக்தியா அமையும் கவிதை அருமை.

    ReplyDelete
  4. கடினப்படாமல் கிடைக்கும் வெற்றிக்கு மதிப்பு கிடையாது...


    முயற்சியே மனிதனை விலங்கிடமிருந்து வேறுப்படுத்துகிறது...

    அழகிய உரைநடைக்கவிதை...

    ReplyDelete
  5. //யானை நடந்து
    மண் தரையில் தடம் பதிவதுண்டு
    கற்களில் பதிந்ததாக பழமொழியில்லை
    எறும்பு ஊறத்தான் கற்கள் தேயும்//

    யதார்த்தமான உண்மை....

    ReplyDelete
  6. தொடர் முயற்சியில் வென்ற
    பல முட்டாள்கள் கூட
    உலகினில் உண்டு
    மெத்தனத்தில் ஜெயித்த
    பேரறிஞர் எவரும் நிச்சயம் இல்லை

    முயற்சியே சிறப்பு..

    ReplyDelete
  7. கஷ்டப்படாம கிடைக்கிறது நிலைக்காதுங்கறதை அருமையா சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  8. Matangi Mawley

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. முயன்றால் அனைத்தும் சாத்தியமே

    ReplyDelete
  10. கீதா சாம்பசிவம் //.

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. மெத்தனத்தில் ஜெயித்த
    பேரறிஞர் எவரும் நிச்சயம் இல்லை//

    அழ‌கிய‌ வ‌ரிக‌ள்!

    முய‌ற்சியின் அருமையை சிற‌‌ப்பாக‌ எழுதியிருக்கிறீர்க‌ள்!!

    ReplyDelete
  14. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் விரிவான அழகான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. தமிழ் உதயம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. நடந்தேறிப் பார்த்தால்தான்
    சிகரமே சிகரமாய்த் தெரியும்
    நமக்கும் அதன் அருமை புரியும் //

    கஷ்ட்டபட்டு உழைத்தால்தான் வெற்றியின் அருமை புரியும்னு சொல்றீங்க குரு, சூப்பர்ப்...!!!

    ReplyDelete
  17. மெத்தனத்தில் ஜெயித்த
    பேரறிஞர் எவரும் நிச்சயம் இல்லை//

    அஜாக்கிரதையாக இருக்கிறவன் தரித்திரன் ஆவான்...!!!

    ReplyDelete
  18. மனோ சாமிநாதன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. MANO நாஞ்சில் மனோ //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் விரிவான அழகான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. ரஹீம் கஸாலி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. அமைதிச்சாரல் said... //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. கவி அழகன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. சசிகுமார் //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. அருமை. '..அல்லும் பகலும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்' வரிகளை நினைவூட்டியது... அதே எளிமை, அதே ஆழம்.

    ReplyDelete
  25. கவிதை வீதி... // சௌந்தர் // //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் விரிவான அழகான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. இயலாமை இருந்தாலும் “முயலாமை “இருக்கக் கூடாது. முயற்சி திருவினையாக்கும். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  27. G.M Balasubramaniam //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. ரமணி சார் அனைத்து வரிகளும் அருமை ஆனால் எனக்கு ஒரு வரியில் மட்டும் எனக்கு சந்தேகம் உள்ளது. இதை திருவிளையாடல் வசனம் போல படித்து பதில் கூறி பரிசை நீங்கள் பெற்று செல்லுங்கள்/
    ///மெத்தனத்தில் ஜெயித்த
    பேரறிஞர் எவரும் நிச்சயம் இல்லை//
    மெத்தனத்தில் ஜெயித்தவர் நம் தமிழக முதல் அமைச்சர். இதற்கு என்ன சொல்லுகிறிர்கள். உங்கள் வரி சரி என்று எடுத்து கொண்டால் ஜெயலலிதா அறிஞர் இல்லை அல்லது அவர் அறிஞர் என்று எடுத்து கொண்டால் உங்கள் வரி தவறா?

    ReplyDelete
  30. பறந்துபோய்
    சிகரம் இறங்கினால்
    அது சமதளம் போலத்தானே
    முட்டி தேய பகலிரவாய்
    நடந்தேறிப் பார்த்தால்தான்
    சிகரமே சிகரமாய்த் தெரியும்
    நமக்கும் அதன் அருமை புரியும்

    ஆமா அருமையான் வரிகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. மெத்தனத்தில் ஜெயித்த
    பேரறிஞர் எவரும் நிச்சயம் இல்லை
    சரியாய்ச் சொன்னீர்கள்..வாழ்த்துகள்..

    ReplyDelete
  32. superaa sollitinga...arumaiyaa irukku....


    ungalukkum ungal familykkum iniya puththandu vaazththukkal

    ReplyDelete
  33. அருமையான கவிதை. சூப்பர். தொடருங்கள்.

    ReplyDelete
  34. Avargal Unmaigal //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி
    அரசியலில் முன்பு அறிஞர்கள் இருந்தார்கள்
    அவர்கள் தலைவர்களாகவும் இருந்தார்கள்
    இப்போது தலைவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்
    இதில் யாரும் விதிவிலக்கில்லை
    பகிர்விற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. Lakshmi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. மதுமதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. கலை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. vanathy //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. முயற்சி திருவினையாக்கும்.
    அருமை.
    த.ம.8

    ReplyDelete
  40. ரொம்ப லேட்டா வந்துட்டனா? அருமையான கவிதை ஸார். இந்த வரிகள் பிடித்தன என்று என்னால் பிரித்துக் கூற இயலவில்லையே... என்ன செய்வது? என்ன செய்வது? (சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்) அத்தனை வரிகளும் முத்திரை வரிகள் என்பேன். அருமை ஸார்!

    ReplyDelete
  41. சென்னை பித்தன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. கணேஷ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. ரமணி,

    மிகவும் அருமை. கடினமான ஒரு விஷயத்தை மிக எளிமையாக வடித்திருக்கிறீர்கள். வாழ்க.

    ReplyDelete
  44. ShankarG //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் அழகானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. Madhavan Srinivasagopalan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. Vaarthaigal ARUVI yaga pozhikirathu. Eppadi Sir?

    ReplyDelete
  47. வணக்கம்!அகரத்தில் தொடங்கிய முயற்சி சிகரத்தில் முடிந்தது. தமிழ் மணம் முதலாம் எண் அடைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  48. //முட்டி தேய பகலிரவாய்
    நடந்தேறிப் பார்த்தால்தான்
    சிகரமே சிகரமாய்த் தெரியும்//

    ஆமாம்,கஷ்டப்பட்டால்தான் அருமை புரியும்,நல்ல கவிதை.

    ReplyDelete
  49. //தொடர் முயற்சியில் வென்ற
    பல முட்டாள்கள் கூட
    உலகினில் உண்டு
    மெத்தனத்தில் ஜெயித்த
    பேரறிஞர் எவரும் நிச்சயம் இல்லை//

    சிந்தனை தூண்டும் வரிகள் ..
    அருமை கவிதை சார்

    ReplyDelete
  50. ரமணி சார்..... மனசுவிட்டு சொல்லுறேன்...... உங்கள் மேல் மரியாதையை வியப்பு அதிகரித்துக்கொண்டே போகுது :)))

    உங்கள் கவிதைகள் படித்தால் மட்டுமே போதும் நல்ல வாழ்க்கை வாழ ....
    சூப்பர்

    ReplyDelete
  51. துரைடேனியல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. தி.தமிழ் இளங்கோ //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. shanmugavel //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. jayaram thinagarapandian //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. துஷ்யந்தன் //

    த்ங்கள் வரவுக்கும் மனம் திறந்த
    உற்சாகமூட்டும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. அழகான கவிக்கரு ரமணி சார். இந்தக் காலத்துப் பிள்ளைகளையே எடுத்துக்கொள்வோமே. எல்லாம் எளிதில் கிடைப்பதால் அதன் அருமை அவர்களுக்குப் புரிவதே இல்லை. சிரமப்பட்டு சிகரம் ஏறியவனுக்கே அதன் உயரமும் தெரியும். தன் முயற்சியின் பலனும் புரியும். அருமையான சிந்தனை. அதை நீங்கள் ஆக்கிய விதமும் அருமை.. பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  57. உற்சாகமூட்டும் உரம் மிக்க கவிதை.

    ReplyDelete
  58. கீதா //

    த்ங்கள் வரவுக்கும் மனம் திறந்த
    உற்சாகமூட்டும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. சத்ரியன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  60. "மெத்தனத்தில் ஜெயித்த
    பேரறிஞர் எவரும் நிச்சயம் இல்லை"

    >>>

    அண்ணே இது டாப்பு!

    ReplyDelete
  61. ரமணி சார் ,
    கீதா சொன்னதுதான் எனக்கும் டக்கென்று மனதில் உதித்தது.
    same pinch கீதா.
    எதுவுமே சற்று போக்கு காட்டினால் தான் சுகம் & சாதனை
    என்ற கருத்து உண்மை தான் சார். அருமை.
    கடைசியில் எளிதாய் என்ற வார்த்தை
    தங்கள் கருப்பொருளுடன் ஒன்ற மறுக்கிறது.நன்றி !

    ReplyDelete
  62. ''யானை நடந்து மண் தரையில் தடம் பதிவதுண்டு
    கற்களில் பதிந்ததாகப் பழமொழியில்லை
    எறும்பு ஊரத்தான் கறகள் தேயும்''
    அருமையான கருத்து. எதறகும் எடுத்து வைக்கும் முதல் அடிதான் முக்கியம். கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றால் யானையையும் தின்றுவிடலாம்' என்று கூறுவார்கள். முயறசியின் சிறப்பை இதைவிட சிறப்பாக கூறமுடியுமா?
    இனிய கவிதைக்கு நன்றிசார்

    ReplyDelete
  63. தொடர்ந்து நாளும் முயல்வோ முயறசியின் சிறப்பை இதைவிட சிறப்பாக கூறமுடியுமா?

    ReplyDelete
  64. முயற்சியின்றி பலனில்லை
    அழகாக கூறிப்போகிறது கவிதை.

    ReplyDelete
  65. This comment has been removed by the author.

    ReplyDelete
  66. ஸ்ரவாணி //

    radhakrishnan சார் சொன்னதை கவனித்தீர்களா
    யானையை முழுதாய் தின்பது மிகக் கடினம்
    கொஞ்சம் கொஞ்சமாய் என்றால் மிக எளிதாய் தின்று விடலாம்
    எவ்வளவு கடினமான காரியத்தையும் தொடர்ச்சியாகச் செய்தால்
    மிக எளிதாகிப் போகும் என்பதற்காக்வே எளிதாக என்கிற
    வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளேன்
    தங்கள் வரவுக்கும் விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  67. radhakrishnan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. விக்கியுலகம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  69. sasikala //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  70. மகேந்திரன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  71. குழப்பத்தைத் தீர்த்து வைத்ததிற்கு நன்றி ரமணி சார்.
    நானும் ஆழ்ந்து கவனித்து கவிதையின்
    பொருள் 'சரியாக' உணர தொடர்ந்து முயல்வேன்.
    சிரமத்திற்கு மன்னிக்கவும் .

    ReplyDelete
  72. //தொடர் முயற்சியில் வென்ற
    பல முட்டாள்கள் கூட
    உலகினில் உண்டு
    மெத்தனத்தில் ஜெயித்த
    பேரறிஞர் எவரும் நிச்சயம் இல்லை

    தெளிவாய் இதை அறிவோம்
    தொடர்ந்து நாளும் முயல்வோம்
    அரியவை எதையும்
    மிக எளிதாய் அடைந்து உயர்வோம் //

    மிகவும் அருமையாகவே எல்லாம் சொல்லியுள்ளீர்கள்.
    தொடர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே வெற்றியை அடையமுடியும்.

    நான் கடந்த 5 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து முயற்சிகள் செய்து என் கணினியை, இயங்கும் விதமாகச் செய்து விட்டேன். அதனால் தான் இந்தத் தாமதம். மன்னிக்க வேண்டும், ரமணி சார்.

    ReplyDelete
  73. ஸ்ரவாணி //


    தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

    ReplyDelete
  74. தங்களுடைய பதிவும் பின்னூட்டமும் இல்லாத
    பதிவுலகில் ஒரு வெறுமைநிலவி கஷ்டப்படுத்தியது நிஜம்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான அழகான
    சமயோசிதமான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  75. //முட்டி தேய பகலிரவாய்
    நடந்தேறிப் பார்த்தால்தான்
    சிகரமே சிகரமாய்த் தெரியும்
    நமக்கும் அதன் அருமை புரியும் //

    அப்பப்பா அருமையான வரிகள்....

    நல்ல கவிதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  76. முயற்சி திருவினையாக்கும்.
    அருமை.
    முயற்சியின்றி பலனில்லை
    அழகாக கூறிப்போகிறது கவிதை.
    பாராட்டுகள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  77. தெளிவாய் இதை அறிவோம்
    தொடர்ந்து நாளும் முயல்வோம்
    அரியவை எதையும்
    மிக எளிதாய் அடைந்து உயர்வோம்
    >>
    முய்ற்சித்தால் முடியாதது ஏதும்மில்லை இவ்வுலகில். கடின உழைப்பை பற்றி பகிர்ந்த விதம் அருமை. நன்றி ஐயா

    ReplyDelete
  78. தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி என்னும் பாடல் நினைவுக்கு வருகிறது .முயன்றால் முடியாதது எவரும் இல்லை. இலகுவாக எக்காரியத்திலும் வெற்றி பெற்றுவிட முடியாது என்பது உண்மைதான்

    ReplyDelete
  79. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  80. சந்திரகௌரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  81. ராஜி //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  82. kavithai (kovaikkavi) //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  83. வாழ்க்கைப் பாடம் ...வரிகளில்.
    www.arutkavi.blogspot.com

    ReplyDelete
  84. சிவகுமாரன்

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  85. சிகரம் பற்றிய வரிகள் அருமை.

    பாடப் பாடத்தான் ராகமும் வரும்! (என் பங்குக்கு ஒன்று!)

    ReplyDelete
  86. ஸ்ரீராம். //

    மிகச் சரி
    பாடப் பாடத்தான் ராகமும் வரும்
    அருமையான கருத்துடன் கூடிய பின்னூட்டத்திற்கும்
    வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  87. தொடர் முயற்சியில்
    ஜெயித்த முட்டாள் உள்ளான்!
    மெத்தனத்தில் ஜெயித்த
    பேரறிஞனும் இல்லை!

    சிந்திக்க வைத்த வரிகள்!

    ReplyDelete
  88. Seeni //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete