Tuesday, January 3, 2012

தொடர் பயணம்

சமதளமாய்
காலடியில் கிடக்கிறது
எட்டிவிட்ட சிகரம்

ஒரு அடையாளமாய்
சேர்ந்தே இருக்கிறது
அடைந்துவிட்ட இலக்கும்

சிகரத்தை அடைவது
ஓய்ந்துச் சாய இல்லை
கொஞ்சம் ஓய்வெடுத்து
மீண்டும் துவங்கவே என்பதில்
தெளிவாய் இருக்கிறேன்

வெகு கவனமாய்
சிகரத்தில்  கிடைத்த
கிரீடங்களையும் மாலைகளையும்
உடலிலிருந்தும் மனத்திலிருந்தும்
இறக்கி வைத்து
என்னை எளிதாக்கிக் கொள்கிறேன்

ஏனெனில்
ககமான பயணத்தை
சீரழிக்கும் முதல் எதிரி
 கூடுதல் சுமைகளே என்பதில்
எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை

தேடலும் பயணிப்பதுமே
வாழ்க்கையேயன்றி
ஒன்றை அடைதலும் இல்லை
ஒன்றில் அடைதலும் இல்லை
இதில்  எனக்கு எவ்வித குழப்பமுமில்லை

மீண்டும் பயணிக்கத் துவங்குகிறேன்
எதிரே நீண்டு விரிகிறது பயணப் பாதை

99 comments:

  1. பயணம் சுகமா இருந்தது நன்றி

    ReplyDelete
  2. தூங்க நினைத்தாலும் மீன்கள் நீந்த மறக்காது,
    நாமும் துவண்டு விட்டாலும் பயணத்தை நிறுத்தக் கூடாது.

    வாழ்த்துகள்.அருமையான கவிதை.

    ReplyDelete
  3. மீண்டும் பயணிக்கத் துவங்குகிறேன்
    எதிரே நீண்டு விரிகிறது பயணப் பாதை

    அருமை..

    த.ம 2

    ReplyDelete
  4. //வெகு கவனமாய்
    சிகரத்தில் கிடைத்த
    கிரீடங்களையும் மாலைகளையும்
    உடலிலிருந்தும் மனத்திலிருந்தும்
    இறக்கி வைத்து
    என்னை எளிதாக்கிக் கொள்கிறேன்//

    அருமை.
    அப்பொழுதுதான் பயணம் சுகமாக அமையும்.
    அருமையான கவிதை.

    தங்களின் புத்தாண்டு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி,சார்.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. சுகமான சுமைகளாக இருந்தாலும்
    'மூட்டை முடிச்சின்றி ' பயணிப்பது தான் சுகமான பயணம்.
    நீங்கள் பயணியுங்கள் நாங்கள் பின்தொடர்கிறோம்.

    ReplyDelete
  6. ஓய்வில்லாத பயணம் தானே எங்கள் வாழ்க்கை

    ReplyDelete
  7. பயணத்தின் இலக்கு பல சிகரங்கள்.பயணப் பாதையும் சிகரங்களை நோக்கித்தானே. முடிவிலாத இலக்குகள் அறியாத சிகரங்கள் தேடலின் சுவாரசியம் கூட்டும். அடைந்து விட்டோம், தொட்டு விட்டோம் என்னும் எண்ணங்களே சுமையாகி தேடலின் ஆர்வத்தைக் குறைத்துவிடும்.நம்பிக்கைதான் கூட வரும் சக்தி. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. வெகு கவனமாய்| சிகரத்தில் கிடைத்த | கிரீடங்களையும் மாலைகளையும் | உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் | இறக்கி வைத்து |என்னை எளிதாக்கிக் கொள்கிறேன்.

    -அருமையான வரிகள். சுமைகள் இருப்பின் பயணம் சுமுகமாகச் செல்ல இயலுமா என்ன... நல்ல சிந்தனையை விதைத்தது (க)விதை. அருமை.

    ReplyDelete
  9. ஏனெனில்
    ககமான பயணத்தை
    சீரழிக்கும் முதல் எதிரி
    கூடுதல் சுமைகளே என்பதில்
    எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை//

    சுகமான சுமைகளும் வாழ்க்கை பயணத்தில் நம்மோடு கூட வரத்தான் செய்கிறது குரு...!!!

    ReplyDelete
  10. தேவை இல்லாத விஷயங்களை தூக்கி தூரப்போட்டுட்டு சந்தோஷமா போயிகிட்டே இருன்னு சொல்றீங்க ம்ம்ம்ம் சத்தியமான வரிகள்...!!!

    ReplyDelete
  11. மீண்டும் பயணிக்கத் துவங்குகிறேன்
    எதிரே நீண்டு விரிகிறது பயணப் பாதை

    ஓய்வின்றி உழைத்தலும் மேலும் உளநலன் தரும்
    தேடலின் முயற்சிக்கு பரிசாக புதுப் புது
    அனுபவங்களாய்!.. தொடரட்டும் சிறப்பாக
    இந்தப் பயணமும்.மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு . .

    ReplyDelete
  12. Lakshmi //

    தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. வாழ்க்கை பயணத்திற்கு தேவையான கவிதை.

    ReplyDelete
  14. ”””வெகு கவனமாய்
    சிகரத்தில் கிடைத்த
    கிரீடங்களையும் மாலைகளையும்
    உடலிலிருந்தும் மனத்திலிருந்தும்
    இறக்கி வைத்து
    என்னை எளிதாக்கிக் கொள்கிறேன்”””

    வெற்றியை
    நெற்றியில்
    ஏற்றிக் கொள்ளக்கூடாததை
    பற்றி எரியும் கருத்தால் சொன்ன விதம்
    அருமை ரமணி சார்

    ReplyDelete
  15. RAMVI //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. வலிமையான படைப்பு ... வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  17. MANO நாஞ்சில் மனோ //

    தேவை இல்லாத விஷயங்களை தூக்கி தூரப்போட்டுட்டு சந்தோஷமா போயிகிட்டே இருன்னு சொல்றீங்க ம்ம்ம்ம் சத்தியமான வரிகள்...!//!!

    தங்கள் வரவுக்கும் என் படைப்புக்கு
    மிகச்சரியான விளக்கமாக அமைந்த
    தங்கள் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. அரசன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. A.R.ராஜகோபாலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. மிக சிறப்பானக் கவிதை.பயணம் வெல்லும் பார்வை சிறப்பு.

    ReplyDelete
  21. KANA VARO //

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. குறைந்தபட்சக் குறிக்கோள்களை குறியாகக் கொண்டு அடைந்தபின்,ஆசுவாசப்படுத்திக் கொண்டு,பொன் செய்யும் மருந்தான போதும் ஐ விட்டு,அடுத்த குறியை நோக்கி செல்லவேண்டும் என்பதே,இக்கவிதையின் கருத்து!

    நன்று!

    ReplyDelete
  23. தமிழ் உதயம் //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. சி.கருணாகரசு //

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. அம்பாளடியாள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. G.M Balasubramaniam //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. ஸ்ரவாணி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. //சிகரத்தை அடைவது
    ஓய்ந்துச் சாய இல்லை
    கொஞ்சம் ஓய்வெடுத்து
    மீண்டும் துவங்கவே //
    அசத்திட்டீங்க!

    ReplyDelete
  29. //சிகரத்தை அடைவது
    ஓய்ந்துச் சாய இல்லை
    கொஞ்சம் ஓய்வெடுத்து
    மீண்டும் துவங்கவே //

    உண்மை.தூங்கி விட்டால் அப்புறம் வாழ்க்கை இல்லை.நல்ல கவிதை.

    ReplyDelete
  30. சென்னை பித்தன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. shanmugavel //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. தேடலைத் தேடி தேடியே பயணம்...

    ReplyDelete
  33. தேடலும் பயணிப்பதுமே
    வாழ்க்கையேயன்றி
    ஒன்றை அடைதலும் இல்லை
    ஒன்றில் அடைதலும் இல்லை
    இதில் எனக்கு எவ்வித குழப்பமுமில்லை


    உண்மைதான்.. நீரோடையாய் தெளிவான கருத்து.. பாராட்டுக்கள் ஐயா..

    ReplyDelete
  34. ஒன்றை அடைதலும் இல்லை
    ஒன்றில் அடைதலும் இல்லை
    ஆஹா
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  35. இராஜராஜேஸ்வரி //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. ரிஷபன் //

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. கோகுல் //

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. பயணங்கள் தொடர்வதற்க்குத்தான். வெற்றி தோல்விகளில் சிக்கி, அதை முடிவாக கொள்வதற்கில்லை, என்பதனை உணர்த்தும் அருமையான பதிவு. நன்றி!

    ReplyDelete
  39. வே.சுப்ரமணியன். //

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. மிக மிக அருமையான கருத்துடன் கூடிய கவிதை....

    ReplyDelete
  41. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. WoW.... Great Sir. Evvalavu azhagaaka Kavithai punaigirirgal. Amazing! Tamil-il pinnuttam ida asai. But mobile moolam iduvathal athu mudiyathu. Labtop vaangiya piragu paarungal. Nichayam azhagu tamil il pinnuttam iduven. Athu varai english than. Sorry sir. Ithu migavum manam kavarntha pathivu. Thodaravum.

    TM 12.

    ReplyDelete
  43. ///தேடலும் பயணிப்பதுமே
    வாழ்க்கையேயன்றி
    ஒன்றை அடைதலும் இல்லை
    ஒன்றில் அடைதலும் இல்லை
    இதில் எனக்கு எவ்வித குழப்பமுமில்லை///

    வாழ்க்கையின் இத்தகைய அர்த்தத்தை
    தங்கள் வரிகளுக்குள் ஒலித்துவைத்துவிட்டு
    உங்களை எளிதாக்கிக்கொண்டீர்கள்!
    புதியதொரு அர்த்தம் கற்றுக்கொண்டேன் நான்!
    மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  44. சிகரத்தை அடைவது
    ஓய்ந்துச் சாய இல்லை
    கொஞ்சம் ஓய்வெடுத்து
    மீண்டும் துவங்கவே என்பதில்
    தெளிவாய் இருக்கிறேன்


    அருமை
    அருமை
    சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள்..

    ReplyDelete
  45. முயலுங்கள்.
    வெற்றி நிச்சயம்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  46. எப்போதும் உங்கள் வாழ்வியல் தத்துவம் சொல்லும் கவிதைகள் ஒரு பாடமாய் மனதில் நிற்கிறது.நன்றி !

    ReplyDelete
  47. சிகரம் சம தளமாகி, எட்டும் இலக்கும் அடையானமாகினாலும், மறுபடி சிகரம், இலக்கு என்று ஓய்வற்ற பயணம் தான். தலைக் கனம், கர்வம் எனும் சுமைகளையும் இறக்கி தொடர்ந்து பயணிப்போம். மிக நன்றாகக் கருத்து வைக்கப் பட்டுள்ளது. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  48. //தேடலும் பயணிப்பதுமே
    வாழ்க்கையேயன்றி
    ஒன்றை அடைதலும் இல்லை
    ஒன்றில் அடைதலும் இல்லை
    இதில் எனக்கு எவ்வித குழப்பமுமில்லை//

    ரொம்பவும் உண்மை. ஏதாவதொன்றில் நிறைவடைஞ்சு அதுலயே நின்னுட்டா அப்றம் எப்படி மேற்கொண்டு பயணிப்பதாம் :-))

    ReplyDelete
  49. ///சிகரத்தை அடைவது
    ஓய்ந்துச் சாய இல்லை
    கொஞ்சம் ஓய்வெடுத்து
    மீண்டும் துவங்கவே///

    அன்னை மிகவும் ஈர்த்த வரிகள் நண்பரே.
    அருமையான கவிதை.

    ReplyDelete
  50. Rathnavel //

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. அமைதிச்சாரல் m //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. kavithai (kovaikkavi) //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. ரஹீம் கஸாலி //

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. ஹேமா //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. guna thamizh //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. யுவராணி தமிழரசன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. துரைடேனியல் said...

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. தொலை தூர பயன்கள் போல் உங்கள் கவிதையும் அழகு பாஸ் :))

    ReplyDelete
  59. தலைக்கனமும் சுயதிருப்தியும் தேடலுக்கு முட்டுக்கட்டைகள் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்! தடங்கலின்றி ஓடிக்கொண்டேயிருக்கும் நதியைப் போல பயணித்துக் கொண்டேயிருப்பதில்தான் வாழ்க்கை ருசிக்கும் என்பதை அற்புத வரிகளால் வெளிப்படுத்தியுள்ளீர்கள். தங்கள் அனுபவ ஏட்டிலிருந்து மற்றுமொரு பாடம். மிகவும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  60. துஷ்யந்தன் //

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. கீதா said... //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  62. ////ஏனெனில்
    ககமான பயணத்தை
    சீரழிக்கும் முதல் எதிரி
    கூடுதல் சுமைகளே என்பதில்
    எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை
    ////

    யதார்த்தமான வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கு கவிதை அருமை

    ReplyDelete
  63. K.s.s.Rajh //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  64. வழக்கம் போலவே கவிதை அருமை. தொடருங்கள்.

    ReplyDelete
  65. vanathy //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  66. ''சுகமான பயணத்தைச் சீரழிக்கும் முதல் எதிரி கூடுதல்
    சுமைகளே''
    அருமையான வரிகள். லெஸ் லக்கேஜ்--மேர்ர் காம்ஃபர்ட் என்பது இதுதானோ?
    இனிய கவிதைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  67. /சமதளமாய்
    காலடியில் கிடக்கிறது
    எட்டிவிட்ட சிகரம்

    ஒரு அடையாளமாய்
    சேர்ந்தே இருக்கிறது
    அடைந்துவிட்ட இலக்கும்/

    அருமை.

    ReplyDelete
  68. //வெகு கவனமாய்
    சிகரத்தில் கிடைத்த
    கிரீடங்களையும் மாலைகளையும்
    உடலிலிருந்தும் மனத்திலிருந்தும்
    இறக்கி வைத்து
    என்னை எளிதாக்கிக் கொள்கிறேன்//

    அனுபவித்து எழுதியது

    ReplyDelete
  69. radhakrishnan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  70. ராமலக்ஷ்மி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  71. கோவிந்தராஜ்,மதுரை. //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  72. மீண்டும் பயணிக்கத் துவங்குகிறேன்
    எதிரே நீண்டு விரிகிறது பயணப் பாதை//

    பாதை நீள நீள பயணங்களும் நீண்டுவிரியும்.

    மிக அருமையான சிந்தனை அய்யா. வாழ்த்துகள்..

    ReplyDelete
  73. அன்புடன் மலிக்கா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. "ஒன்றை அடைதலும் இல்லை
    ஒன்றில் அடைதலும் இல்லை"
    நன்று கூறினீர்...
    அருமையான கவிதை அதைவிட அற்புதக் கருத்து...
    விழுந்த மாலைகளை சுமந்துகொண்டே திரிந்தால் அவைகள் சுமைகள் தானே!...

    அற்புதம் பாராட்டுக்கள் நண்பரே!

    ReplyDelete
  75. //தேடலும் பயணிப்பதுமே
    வாழ்க்கையேயன்றி
    ஒன்றை அடைதலும் இல்லை
    ஒன்றில் அடைதலும் இல்லை//

    பிரமாதம்..

    ReplyDelete
  76. அண்ணே ”பயணம்” - நிதர்சனம்!

    ReplyDelete
  77. கிரீடங்களையும் மாலைகளையும் கவனமாய் உடலில் இருந்து இறக்கி வைத்து விடலாம். மனத்திலிருந்து இறக்கி வைக்கத் தெரிந்த அந்த கவிதை நாயகருக்கு ஒரு சபாஷ்.!

    நல்ல கருத்து. சிறந்த தோற்றமும் உங்கள் கவிதையில் பெற்றிருக்கிறது.
    அன்புடன்,
    வெங்கட்

    ReplyDelete
  78. தேடலும் பயணிப்பதுமே
    வாழ்க்கையேயன்றி
    ஒன்றை அடைதலும் இல்லை
    ஒன்றில் அடைதலும் இல்லை
    இதில் எனக்கு எவ்வித குழப்பமுமில்லை


    மீண்டும் பயணிக்கத் துவங்குகிறேன்
    எதிரே நீண்டு விரிகிறது பயணப் பாதை

    சரியான வரிகள். தனது படைப்பில் திருப்திகொள்பவன் கலைஞனாக இருக்கமுடியாது. மற்றவர்களை அதைநோக்கிப் பயணிகக வைப்பதே சரி. உங்களின் பாதை விரியட்டும் தணியாது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  79. தமிழ் விரும்பி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  80. ஹ ர ணி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  81. VENKAT //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  82. கே.ஆர்.பி.செந்தில் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  83. விக்கியுலகம் //

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  84. வணக்கம்!

    //தேடலும் பயணிப்பதுமே
    வாழ்க்கையேயன்றி
    ஒன்றை அடைதலும் இல்லை
    ஒன்றில் அடைதலும் இல்லை//

    இதனால்தான் வள்ளுவர் வாழ்க்கையை பிறவிப் பெருங்கடல் என்றார்.

    ReplyDelete
  85. தி.தமிழ் இளங்கோ //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  86. சிகரத்தை அடைவது
    ஓய்ந்துச் சாய இல்லை
    கொஞ்சம் ஓய்வெடுத்து
    மீண்டும் துவங்கவே என்பதில்
    தெளிவாய் இருக்கிறேன்

    ஆம் நிச்சயமாக. தொடரும் பாதையில் சலிப்பில்லாமலும் கலைப்பில்லாமலும் இருப்பதற்காக . தொடருங்கள் வாழ்க்கை பிரகாசமாகும்

    ReplyDelete
  87. சந்திரகௌரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  88. 'என்னை எளிதாக்கி..' - இதுதான் பக்குவம். உயரம் கண்ட பிறகு எளிமை நாடுவது மிக மிகச் சிரமம். வரிகள் மனதில் இறங்கி உட்கார்ந்துவிட்டன.

    ReplyDelete
  89. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  90. ரமணி,

    தொடர் பயணம் நல்லதொரு கருவை உள்ளடக்கிய அற்புதக் கவிதை. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  91. ShankarG //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  92. தெளிவான சிந்தனையுடன் கூடிய பயணம். நிச்சயம் வெற்றி தான்
    www.arutkavi.blogspot.com

    ReplyDelete
  93. சிவகுமாரன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  94. பருவத்தின் பசி-
    காதல்!
    அறிவின் பசி-
    தேடல்'
    இரண்டின் பயணமும்-
    முடிவதில்லை!

    என்பதை உணர்த்திய கவிதை!

    ReplyDelete
  95. Seeni //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  96. sir, thedel ullavarai valvill rusi irukkm enpathai ungal payanam thodarum padithu arinthen. r.chockalingam

    ReplyDelete
  97. . r.chockalingam //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete