Thursday, January 12, 2012

நெடுஞ்சாலைத் தெரு ஓரம்

குடிசையிலே பிறந்து தொலைத்து
தெருவோரம் வாழ்ந்தே சாகும்
நடைபாதை மனிதன் உடலில்
கஸ்தூரி மணமா  கொஞ்சும் ?

அடுப்பினிலே இல்லா தீயை
அடிவயிற்றில் தேக்கி வைத்து
நொடிதோரும் சாவோன் வாயில்
திருக்குறளா வந்து கொட்டும் ?

மழையின்றி போனால் தூக்கம்
மறைவின்றி ரோட்டில் போகம்
முறையின்றி வாழ்வோன் நெஞ்சில்
முகிழ்த்திடுமோ மனித நேயம் ?

நாயோடு நாயாய் வாழ்வு
நச்சுநதிக் கரையே வீடு
நோயோடே பிறப்போன் நெஞ்சில்
ந்னனெறியா பிறந்து தழைக்கும் ?

மிதிபட்டுத் துடிப்போன் தன்னை
மிதித்தவனே மிரட்டும் கொடுமை
சரியாகிப் போகும் காலம்
வருவதுதான் எந்தக் காலம் ?

உடலதனில் கைகள் மட்டும்
உறுதிபெற்றால் சரியோ சொல்வீர்
சமவளர்ச்சி ஒன்றே என்றும்
சரியான வளர்ச்சி அன்றோ

முடிந்தவரை அவர்கள் வாழ்வை
உயர்த்திடவே வழிகள் காண்போம்
அதுகூடக் கடினம் எனிலோ
மனதிலேனும் கருணை  கொள்வோம்


 (சமீபத்தில் குடிசைப் பகுதியில் நடந்து
செல்லுகையில் காருக்கு குறுக்கே  ஒரு குழந்தை
வந்து விட காரில் இருந்து இறங்கிய ஓட்டு நர்
காரின் கீழிறங்கி கடினமான வார்த்தையை
உபயோகிக்க குடிசை வாழ் மக்கள் அதைவிட
கடினமான வார்த்தைகள் பேசிவிட சூழல்
அசிங்கமாகப் போய்விட்டது
நான்  இடையில் புகுந்து இருவரையும்
சமாதானப்படுத்தி விட்டுகையில் இருந்த பிஸ்கெட்
பாக்கெட்டை குழந்தை கையில்
கொடுத்துவிட்டு நடக்கலானேன்.டிரைவர்  என்னை
ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டுப் போனார்
எனக்கென்னவோ குடிசை வாழ் மக்கள்அப்படி இருக்க
நாமும் ஒருகாரணமாக இருப்பதுபோல் பட்டது.
அதனடிப்படையில் எழுதியது இது )


76 comments:

  1. ரமணி சார் நீங்கள் எழுதுவதில் மட்டுமல்ல நடைமுறையிலும் நல்லதை செய்யும் உயர்ந்த மனிதர் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //சமவளர்ச்சி ஒன்றே என்றும்
    சரியான வளர்ச்சி அன்றோ //

    உண்மைதான். அந்தக்காலம் எப்பொது வருமோ??

    ReplyDelete
  3. உங்களை போல நல்ல உள்ளம் கொண்டவரை பார்க்க முடியாமல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறது. நிச்சயம் அடுத்த முறை மதுரைவரும் போது நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் வீட்டு கதவை தட்டுவேன் என்பது நிச்சயம்

    ReplyDelete
  4. //அடுப்பினிலே இல்லா தீயை
    அடிவயிற்றில் தேக்கி வைத்து
    நொடிதோரும் சாவோன் வாயில்
    திருக்குறளா வந்து கொட்டும் ?//

    மிகச் சரியாக சொன்னிர்கள்

    ReplyDelete
  5. உண்மைதான் ரமணி சார் .
    பட்டினி கிடந்து பார்த்தால் தானே
    அதன் வலி நமக்குப் புரியும். கொள்கையாவது , ஒன்றாவது ?
    இதனால் தான் முகம்மதியர்கள் நோன்பு இருக்கிறார்கள் .
    பசியின் கொடுமை உணர்ந்து தானதர்மம் செய்கிறார்கள்.
    உங்கள் உதவும் உள்ளம் கண்டு மகிழ்ச்சி சார்.
    சிறந்த பதிவு.

    ReplyDelete
  6. ஏழ்மையை உணர வேண்டும். ஏழையையும் உணர வேண்டும். நல்ல கவிதை.

    ReplyDelete
  7. நீங்க சொல்றதும் சரிதான். அடிபட்டு, மிதிபட்டு, வாழ்க்கையில் நொந்து நூடுல்ஸாகி நிக்கிற மனசின் வலிகள்தான் கடினமான வார்த்தைகளாக வந்து விழுந்துடுது..

    இதைத்தான் கவிஞர் அன்னிக்கே பாடி வெச்சிட்டு போயிருக்காரோ..
    "பாம்பு வந்து கடிக்கையில்
    பாழும் உடல் துடிக்கையில்
    யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு"ன்னு..

    ReplyDelete
  8. அருமையான பதிவு.
    முதன் முதலாக 1981 இல் தான் சென்னை சென்றேன். நடைபாதையில் வசிக்கும் மக்கள் பார்த்து மனம் மிகவும் வேதனைப்பட்டது. இன்னும் சென்னை செல்வது என்றால் வேதனையாக, வேண்டா வெறுப்பாக இருக்கிறது.
    இதற்கு ஒரு விடிவே கிடையாதா? வேதனை.

    ReplyDelete
  9. ///சமவளர்ச்சி ஒன்றே என்றும்
    சரியான வளர்ச்சி அன்றோ////

    இந்த சமதர்மம் தான் நண்பரே எங்கே போனதென்றே தெரியவில்லை. சமத்துவம் என்பதெல்லாம் சமூக நெறிகளில் யாரும் கடைபிடிப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை.
    பேச்சுக்களில் மட்டுமே முடங்கிக் கிடக்கிறது. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்காது அன்பு நோக்கில் அடுத்தவர்களை உற்று நோக்கினாலே போதும், சமத்துவம் தானாக வளரும்.

    உங்களுக்கு நல்ல மனது நண்பரே.

    ReplyDelete
  10. விளிம்பு நிலை மனிதர்களை மேடேற்றாமல் நாடு முன்னேறாது! அவர்களுக்கு பிச்சை போடாமல், தகுதிக்கேற்றவாறு பிழைத்திருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! முதலமைச்சரின் மூத்தோர் காப்பகத் திட்டம் அதில் ஒரு முயற்சியே!

    ஆன்மீகப்படி ஆதரவற்றோருக்கு உதவுவது துன்பங்களுக்குப் பெரிய பரிகாரம்!

    தங்களின் செயல் கண்டிப்பாக அந்த ஓட்டுநரை சிந்திக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

    ReplyDelete
  11. மிதிபட்டுத் துடிப்போன் தன்னை
    மிதித்தவனே மிரட்டும் கொடுமை
    சரியாகிப் போகும் காலம்
    வருவதுதான் எந்தக் காலம் ?
    >>
    அந்த காலம் வெகு தூரத்தில் ஐயா. நம் சமூகம் இன்னும் மாற வேண்டியுள்ளது நான் உட்பட

    ReplyDelete
  12. Ithayathin aazham varai oodurum arputha varigal Sir!

    ReplyDelete
  13. வறுமையை நசிக்கும்போதுதான் அதன் ஆவேசம் வெளிவரும்.நானும் கண்டு பயந்தது !

    ReplyDelete
  14. முடிந்தவரை அவர்கள் வாழ்வை
    உயர்த்திடவே வழிகள் காண்போம்
    அதுகூடக் கடினம் எனிலோ
    மனதிலேனும் கருணை கொள்வோம்

    நடைமுறையில் சாத்தியமான கருத்துகள் ..
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்..

    ReplyDelete
  15. தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழகான உற்சாகமூட்டும்
    தொடர் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.தங்களைச் சந்தித்து உரையாட
    நானும் ஆர்வமாய் உள்ளேன்.கோப்பெருஞ்சோழன்
    பிசிராந்தையார் நட்பைப் போல பதிவுலகில்
    எனக்கு பல உறவுகள் பதிவுலகில் உண்டு
    அதில் முதனமையானவர் தாங்கள்.
    தொடர்ந்து சந்திப்போம்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. RAMVI //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. ஸ்ரவாணி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பதிவின் மையக் கருத்தை மிகச் சரியாக நாடிபிடித்து
    கொடுத்துள்ள அழகான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்மனமார்ந்த நன்றி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. தமிழ் உதயம் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. அமைதிச்சாரல் //

    ஆஹா மிகச் சரியான உதாரணம் கொடுத்து
    கவிதைக்கு சிறப்பு சேர்த்தமைக்கும் தங்கள்
    உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. Rathnavel //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. மகேந்திரன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. ரமேஷ் வெங்கடபதி //

    ஆன்மீகப்படி ஆதரவற்றோருக்கு உதவுவது துன்பங்களுக்குப் பெரிய பரிகாரம்!

    தங்களின் செயல் கண்டிப்பாக அந்த ஓட்டுநரை சிந்திக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. மனிதன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதைச் சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்க்கையில் உயரமுடியாதவர்களைக் கைகொடுத்துத் தூக்கிவிட வேண்டும் என்கின்றீர்கள். தமது தவறை மறைப்பதற்குப் பிறர்மேல் பழியைச் சொல்வது எம் மக்கள் வழக்கமாகிவிட்டது தன குறை மறைக்க நடந்து கொண்டவரைப் பற்றிக் கூறியுள்ளீர்கள். அவர் அனுபவம் மூலம் உங்கள் கவிதைக்கு நல்ல கருக்கிடைத்தது . இதனை படிப்பதன் மூலம் நற் சிந்தனை கிடைத்தது. உங்கள் கவிதைகள் அனைத்தும் உள்ளே ஒரு நற் சூக்குமத்தைக் கொண்டிருப்பது சிறப்பே.

    ReplyDelete
  24. ராஜி //


    இன்னும் மாற வேண்டியுள்ளது நான் உட்பட //

    உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் தங்கள்
    உணர்வுகளை வெளிப்படுத்தும் மனம் திறந்த
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. துரைடேனியல் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. ஹேமா //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. இராஜராஜேஸ்வரி //

    நடைமுறையில் சாத்தியமான கருத்துகள் ..
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்..//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. ஒவ்வொரு பத்தியும் உரைக்கும் உண்மைகளில் மனம் ஒன்றிப் போனேன். மிதித்தவனே மிரட்டும் அவலம்! எல்லா இடங்களிலும் இதுதான் நடக்கிறது. மிதிபட்டு மிதிபட்டு அவர்களிடத்தில் முரட்டுத்தனமும் மூர்க்கமும் கூடியிருப்பதில் வியப்பென்ன? மகிழ்ச்சியோ துக்கமோ அன்றாடம் தீர்த்து அன்றாடங்காய்ச்சியாய் வாழ்பவனிடம் நாம் நடந்துகொள்ளவேண்டிய முறையை முன்னுதாரணமாய் நடந்து காட்டியதோடு நயமாகவும் உரைத்துள்ளீர்கள். மிகுந்ந நன்றியும் பாராட்டுகளும் ரமணி சார்.

    ReplyDelete
  29. பசியிலும் வறுமையிலும் வாடிக்கொண்டிருப்பவனை சீண்டினால் அவன் அப்படித்தான் கிளர்ந்தெழுவான்..எல்லாம் கிடைத்தவர்கள் அவர்களைப் பொருட்டாக எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் தான் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்..உங்களது உதவி புரியும் உள்ளத்திற்கு நன்றி..
    வாசித்தேன்..வாக்கிட்டேன்..அருமை..

    ReplyDelete
  30. கீதா //

    மிதிபட்டு மிதிபட்டு அவர்களிடத்தில் முரட்டுத்தனமும் மூர்க்கமும் கூடியிருப்பதில் வியப்பென்ன ? //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. மதுமதி //

    பசியிலும் வறுமையிலும் வாடிக்கொண்டிருப்பவனை சீண்டினால் அவன் அப்படித்தான் கிளர்ந்தெழுவான்..//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. சந்திரகௌரி //

    வாழ்க்கையில் உயரமுடியாதவர்களைக் கைகொடுத்துத் தூக்கிவிட வேண்டும் என்கின்றீர்கள். தமது தவறை மறைப்பதற்குப் பிறர்மேல் பழியைச் சொல்வது எம் மக்கள் வழக்கமாகிவிட்டது தன குறை மறைக்க நடந்து கொண்டவரைப் பற்றிக் கூறியுள்ளீர்கள். //
    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. நிகழ்வை கவிதையாக்க கையாண்டிருக்கும் எளிய சொற்களும், வீரிய கருத்துக்களும் மிகவும் கவர்ந்தது.

    ReplyDelete
  34. அருமை. எந்த வரிசையில் இந்த விஷயங்களை அடுக்கடுக்காகக் கொண்டு வருகிறீர்கள் என்று யோசித்துக் கொண்டே படித்து வந்த போது எங்கிருந்து உணர்வூக்கம் என்பதைக் கடைசி வரிகளில் சொல்லியிருப்பதைப் படித்த போது புரிந்தது. உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

    ReplyDelete
  35. கவிதை நல்லா இருக்கு சார்.....

    ReplyDelete
  36. ஸ்ரீராம். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. சத்ரியன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  38. சசிகுமார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  39. ////முடிந்தவரை அவர்கள் வாழ்வை
    உயர்த்திடவே வழிகள் காண்போம்
    அதுகூடக் கடினம் எனிலோ
    மனதிலேனும் கருணை கொள்வோம்
    ////

    ஒவ்வொறு வரிகளும் நச் என்று இருக்கு

    ReplyDelete
  40. K.s.s.Rajh //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  41. முடிந்தவரை அவர்கள் வாழ்வை
    உயர்த்திடவே வழிகள் காண்போம்
    அதுகூடக் கடினம் எனிலோ
    மனதிலேனும் கருணை கொள்வோம்


    ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  42. குடிசை வாழ்மக்களின் வாழ்வு மட்டுமல்ல.பலரின் வாழ்வில் இப்படித்தான் எசக்கேடாககஏதாவது நடந்து போகிறதுண்டு.நமது சமூகமும்,அதை கண்டும் காணாமலும் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறது.டிரைவரின் பயம் விபத்து நடந்து விடக்கூடாது என்பதில்/குழந்தையின் இன்பம் விளையாடுவதில்.குடிசை வாசிகளின் இன்பம் ஏதாவது அதிசயம் ந்டந்து தங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிடாதா எனபது/இப்படி மாறி,மாறி பிறக்கிற நினைவுகளும்,சொல்லாக்கங்களும் நமது சமூகத்திலன் நிரந்தரமான ஒன்றாக/

    ReplyDelete
  43. Lakshmi //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  44. விமலன் said...

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. வணக்கம்!

    //காரில் இருந்து இறங்கிய ஓட்டுநர்
    காரின் கீழிறங்கி கடினமான வார்த்தையை
    உபயோகிக்க//

    சாலையில் குழந்தையை விளையாடவிடும் குடிசைவாசியின் பொறுப்பற்ற போக்கை கார் டிரைவர் கண்டித்து இருப்பார். குடிசைவாசிகள் என்பதால் இருக்காது. எப்படியோ கவிஞருக்கு
    ஒரு சமத்துவப் பாட்டு உருவாக காரணமாகி விடது.

    ReplyDelete
  46. 15/15



    ''நெடுஞ்சாலைத் தெரு ஓரம்
    குடிசையிலே பிறந்து தொலைத்து
    தெருவோரம் வாழ்ந்தே சாகும்
    நடைபாதை மனிதன் உடலில்
    கஸ்தூரி மணமா கொஞ்சும் ?

    அடுப்பினிலே இல்லா தீயை
    அடிவயிற்றில் தேக்கி வைத்து
    நொடிதோரும் சாவோன் வாயில்
    திருக்குறளா வந்து கொட்டும்//

    அடடா..! என்ன கருத்து ! என்ன உவமை!
    இரமணி!கவிதையின் விண்ணையே தொட்டு விட்டீர்! உமக்கு ஈடு ஒருவரும் இல்லை!
    உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை! உளமார்த்த உணர்வின் வெளிப்பாடே இது
    வாழ்க! உங்கள் கவி உளம்! வளம்!
    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  47. தி.தமிழ் இளங்கோ //

    அவர்கள் வாழ்வுச் சூழலே அதுதான்
    நாம அதை சரிசெய்ய முடியாவிட்டாலும்
    கொஞ்சம் கருணையோடு பொறுமை காப்போம்
    எனச் சொல்ல முயன்றிருக்கிறேன்

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  48. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் பாராட்டை மிகப் பெரிய
    அங்கீகாரமாகக் கொள்கிறேன்
    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. நாயோடு நாயாய் வாழ்வு
    நச்சுநதிக் கரையே வீடு
    நோயோடே பிறப்போன் நெஞ்சில்
    ந்னனெறியா பிறந்து தழைக்கும் ?

    சுடும் வார்த்தைகள் அனலாய் பறக்கிறது.என்னே ஒர் கவிதை.உண்மையான கவிதை.வாழ்த்துகள்

    ReplyDelete
  50. இவர்களைப்பற்றிக் கருணை கொண்டால் மட்டும் போதாது.இவர்கள் இந்தச் சூழலிலிருந்து வெளிவர உதவ வேண்டும். இவர்களைக் குறித்த மிகப்பெரிய பொருப்பு அரசாங்கத்தினுடையது. அரசாங்கத்தின் செயல்பாடுகள் எல்லாத்துறையிலும் அவலமாகவே
    இருக்கிறது. அத்தனையும் சரி செய்து கடைசியாக இவர்களிடம் வரவதற்குள் என்ன ஆகுமென்றே தெரியவில்லை.

    ReplyDelete
  51. மிக அருமை ரமணீ.. என்ன ஒரு சீரிய சிந்தனை!

    ReplyDelete
  52. //அடுப்பினிலே இல்லா தீயை
    அடிவயிற்றில் தேக்கி வைத்து
    நொடிதோரும் சாவோன் வாயில்
    திருக்குறளா வந்து கொட்டும் ?//

    அருமையான வரிகள்!! 'வீட்டிலில்லாத நெருப்பு ஏழை மக்களின் அடிவயிற்றில் ' என்பதை வலியுடனும் வேதனையுடனும் உணர்த்துகிறது உங்களின் கவிநயம்!!

    ReplyDelete
  53. dhanasekaran .S //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  54. VENKAT //

    அரசாங்கம் எனப் போனால் சுத்து
    கதையாகாது.நாம் கூட எதுவும் செய்யவேண்டாம்
    அவர்கள் நிலையை கொஞ்சம் கருணையோடு
    பார்த்தால் போதும் என்பதே என் எண்ணம்
    தங்கள் வரவுக்கும் வித்தியாசமான அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  55. மனோ சாமிநாதன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  56. ஷைலஜா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  57. தொடக்கப் பகுதியிலிருந்து முடிவுப்பகுதி கருத்தளவில் விலகியிருப்பது போல் தோன்றினாலும், முழுதும் எளிமையும் எழுச்சியும் நிரம்பியிருக்கும் கவிதை. முதல் எட்டு வரிகள் மறக்கமுடியாது என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  58. ரொம்ப நல்லா இருந்தது சார். உங்கள் கருத்துகளை நானும் ஒத்துக் கொள்கிறேன்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. அப்பாதுரை //

    தங்கள் கருத்து மிகச் சரி
    எனக்கும் அப்படித்தான் தோன்றியது
    அதனால்தான் பின் குறிப்பு
    எழுத வேண்டிய அவசியம் வந்தது
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  61. கோவை2தில்லி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  62. உங்களின் கருத்தும், அதன் விளக்கமும் அருமை! ஒவ்வொரு வார்த்தையும் சவுக்கடி Sir! நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! அன்புடன் அழைக்கிறேன் :
    "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

    ReplyDelete
  63. திண்டுக்கல் தனபாலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  64. ///முடிந்தவரை அவர்கள் வாழ்வை
    உயர்த்திடவே வழிகள் காண்போம்
    அதுகூடக் கடினம் எனிலோ
    மனதிலேனும் கருணை கொள்வோம்///

    இவர்கள் கண்ணீரை துடைக்க எழுகிறேன்
    என் கண்ணீரிலேயே வழுக்கி விழுகிறேன்...........
    முடியாதவனாகிறேன்.........
    (நாயை கண்டால் கல்லை காணோம்
    கல்லை கண்டால் நாயை காணோம் )
    உதவி செய்ய நினைப்பவன் கையில் பணம் இருப்பதில்லை.......
    ..........................

    அருமையான கவிதை .........

    ReplyDelete
  65. இடி முழக்கம் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  66. குடிசையிலே பிறந்து தொலைத்து
    தெருவோரம் வாழ்ந்தே சாகும்
    நடைபாதை மனிதன் உடலில்
    கஸ்தூரி மணமா கொஞ்சும் ?

    அடுப்பினிலே இல்லா தீயை
    அடிவயிற்றில் தேக்கி வைத்து
    நொடிதோரும் சாவோன் வாயில்
    திருக்குறளா வந்து கொட்டும் ?...''
    மிக அருமையான வரிகள். ...அப்படியே அமைந்துள்ளது. வாழ்த்துகள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  67. வணக்கம் அண்ணா,
    மனதை நெருடும் ஓர் கவிதையினைக் கொடுத்திருக்கிறீங்க. தெருவோரத்தில் குடியிருக்கும் மக்களின் நிலையினை நெஞ்சைத் தொடும் வரிகளூடாக யதார்த்த கவிதையாக / நிஜங்களின் பிரதிபலிப்பாக கொடுத்திருக்கிறீங்க.

    ReplyDelete
  68. kavithai (kovaikkavi) //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  69. நிரூபன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  70. இந்நிலையை மாத்தாம!
    வல்லரசு என நம்மை-
    நாமே சொல்லிகொள்வதில்-
    வெட்கமாக உள்ளது!
    கவிதை!
    அருமை!

    ReplyDelete
  71. Seeni //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  72. அடுப்பில் இல்லாத நெருப்பு வயிற்றில் எரிகிறது. இந்தப் பட்டினியால் ,பரிதவித்துப் பாதைகள் மாறும் மானுடம். அதுதான் அவல,
    சாலையோரக் காவியமாகிறது.
    மிக அருமையாக அதை வரைந்துவிட்டீர்கள்.ஒரு வேளை ஒரு பிடி உணவு யாரும் யாருக்கும் அளிக்கலாம்.

    ReplyDelete
  73. ''முடிந்தவரை அவர்கள் வாழ்வை
    உயர்த்திடவே வழிகள் காண்போம்
    அதுகூடக் கடினம் எனிலோ
    மனதிலேனும் கருணை கொள்வோம்''
    வெட்டியாகப் புரட்சிக் கருத்துக்களை மட்டும் அள்ளிவீசாமல் நடைமுறைக்கு ஒத்துவரும் கருத்தை
    முத்தாய்ப்பாககஃ கூறியுள்ளீர்கள். காந்திஜி கூறியுள்ளதுபோல் பணக்காரர்கள் தங்களுக்குக் கடவுள்
    அளித்த பொருளை தர்மகர்த்தா போல்நடந்து கொண்டு
    வசதியில்லா ஏழைகளுக்குப் பயன் தரும் வகையில்
    செலவிட்டால் ஏழ்மை குறையாமல் போகுமா?
    இனிய, கருத்துள்ள கவிதைக்கு நன்றி சார்

    ReplyDelete
  74. radhakrishnan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  75. வல்லிசிம்ஹன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகானபின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete