Friday, January 13, 2012

பட்டவைகள் துளிர்க்க...

இருள்
தூரம்
அறியாமை
வெறுப்பு மட்டுமல்ல

கூடுதல் வெளிச்சம்
அதிக நெருக்கம்
பரிபூரணமாய் அறிதல்
அதீத அன்பு கூட

புரிதலையும்
அன்னியோன்யத்தையும்
அடியோடழித்துப் போகிறது

இப்போதெல்லாம்
போதுமான ஒளி
கண்ணுக்கெட்டியதூரம்
தேவையான அறிதல்
கைகுலுக்கும் நெருக்கத்தோடு
என்னை நிலை நிறுத்திக்கொள்கிறேன்

பட்டுப்போனவைகள் கூட
மிக லேசாய் துளிர்க்கத் துவங்குகின்றன

98 comments:

  1. தை பிறப்பின் நிச்சயம் பட்டவைகள் துளிர்க்கும்..கவிதை அருமை ஐயா..தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்..

    தமிழ் புத்தாண்டு தினத்தை தீர்மானிப்பது அரசியல் வாதிகளா?இலக்கியவாதிகளா?

    ReplyDelete
  2. பட்டுப்போனவைகள் கூட
    மிக லேசாய் துளிர்க்கத் துவங்குகின்றன

    நல்ல கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. Familiarity breeds contempt என்னும் சொல்வழக்கு அழகு தமிழில் கவிதையாய் மிளிர்கிறது. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பக்குவப்பட்ட மனதின் பொன்னெழில் வார்த்தைகள்
    கவிதையில் பளிச்சிடுகிறது நண்பரே.

    ReplyDelete
  5. கிட்டப்போனா முட்டப்பகைன்னு சொல்றீங்க.. ரைட்டு :-)

    கவிதை நல்லாருக்கு.

    ReplyDelete
  6. பொங்கல் நல்வாழ்த்துகள் சார்! :-)

    ReplyDelete
  7. ஒரு'distance ' மெயின்டையின் பண்ணனும் தானே சொல்றீங்க ?
    எனக்கு வரல. உங்களுக்கு அது அழகாக வருது சார் கவிதை மாதிரி.

    ReplyDelete
  8. மதுமதி //


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. Lakshmi //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. G.M Balasubramaniam //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. மகேந்திரன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அழகான அர்த்தமுள்ள கவிதை. வியக்க வைத்த கவிதை.

    ReplyDelete
  13. அமைதிச்சாரல் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. RVS //

    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்தபொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. ஸ்ரவாணி said...

    கவிதையின் கருவோடு என்னை இணைத்துக்
    குழப்பிக் கொள்ளவேண்டாம்
    நானும் இரண்டாம் பாரா அணிதான்
    எல்லைகள் புரியாதோருக்காக இது
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. தமிழ் உதயம் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. அளவுக்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல அன்பும் நஞ்சாகலாம் என்பதை அழகாக உணர்த்தும் வரிகள். அன்புத்தொல்லை என்றே சிலரது செய்கைகளைக் குறிப்பிடும் அளவுக்கு நமக்கு நெருக்கடியைத் தர வல்லவையாக இருப்பர். எதுவும் அளவோடு இருந்தால் மிக்க நலம். தங்கள் கருத்தொன்றிய கவிதை அற்புதம். பாராட்டுகள் ரமணி சார். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. கீதா //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. பட்டுப்போனவைகள் கூட
    மிக லேசாய் துளிர்க்கத் துவங்குகின்றன

    ReplyDelete
  20. ''..போதுமான ஒளி
    கண்ணுக்கெட்டியதூரம்
    தேவையான அறிதல்
    கைகுலுக்கும் நெருக்கத்தோடு
    என்னை நிலை நிறுத்திக்கொள்கிறேன்...''
    ஆம்! தெளிவின் தீர்மானம். நல்லது!
    Short and sweet ராக கூறப்பட்டது. அருமை! வாழ்த்துகள்! நன்றியுடன் இனிய பொங்கல் வாழ்த்துகள்! பொங்கலோ பொங்கல்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  21. அன்பின் ரமணி சார்,

    இத்தனை நாள் கழித்து உங்கள் கவிதைத்திரி பக்கம் வந்தேன்....

    என் மனதில் ஓடிய எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்திருக்கிறீர்களே ரமணி சார்... அதற்கு ஹாட்ஸ் ஆஃப்...

    அட படிப்பவர்களின் மனதிலும் இது தான் எழுந்திருக்கும்....

    இருட்டை பார்த்தால் பயம் சரி கொஞ்சம் வெளிச்சம் கிடைச்சால் வழி பார்த்து நடையை கூட்டலாம்னு பார்த்தால்….. கண் கூசும் அளவுக்கு வெளிச்சம் நம் அகத்தில் இருப்பவைக்கூட வெளிக்கொணரும் அளவுக்கு வெளிச்சம் வருவதை நாமே விரும்புவதில்லை தானே?

    ReplyDelete
  22. தூரத்தில் இருப்போரை பார்க்க போகணும்னாலே ஒருவித சோம்பல் எழும் மனதில் அடப்ப்போ அடுத்த வாரம் பார்த்துக்கலாம்.. அடுத்து ஒரு லாங் லீவ் வரும் அப்ப பார்த்துக்கலாம்…. அடுத்திருந்தால் தேவலை என்று நினைக்கும்போது… அடுத்து இருந்தால் நம்ம பிரைவசியை கெடுக்கும் அளவுக்கு தினமும் வீட்ல வந்து உட்கார்ந்துக்கொண்டு நம் நேரத்தையும் கபளீகரம் செய்தால் தூரமே மேல்டா சாமி அப்டின்னு நினைக்க தோணுது தானே?

    அறியாமை… அட நம்மை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்களே… அங்கே நம் ஒவ்வொரு செயலையும் விளக்குவதில் நேரமும் காலி நம் மனசும் சோர்ந்து போகிறது…. நம்மை பற்றி தெரியாதா இவர்களுக்கு என்ற மனநிம்மதி தரமுடியாத அளவுக்கு அறியாமை மனதை கண்ணை முழுமையா மூடி இருக்கேன்னு கொஞ்சம் நெருங்கி நம்மைப்பற்றி முழுதும் பகிர்ந்து விட்டால் அங்கே முடிஞ்சுது நம் சுதந்திரம்…. இந்த நேரம் இந்த நொடி இந்த நிமிடம் நாம என்ன செய்துட்டு இருக்கோம் என்பது வரை அவர்களின் மனக்கணக்கில் ஓடிக்கொண்டு…அட நம்மைப்பற்றி தெரிஞ்சுக்காம அறியாமையிலேயே இருந்திருக்கலாம்னு வேதனையுடன் நினைக்கவைக்கும் தானே?

    ReplyDelete
  23. கூடுதல் வெளிச்சம் கண்ணை கூசவைத்து எரிச்சலை அதிகரிக்கும்…
    அதிக நெருக்கம் இன்று நட்பாய் இருக்கும்வரை இனிமை கரைபுரண்டு ஓடும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மனவேதனையில் பிரியும்போது நாம் நம்பி பகிர்ந்த வார்த்தைகளே நமக்கு எதிர்நின்று கேட்கவைக்கும்…..
    பரிபூரணமாய் ஒருவர் பற்றி அறிவதால் அவர்களின் நெகட்டிவ்களை எடுத்து சொல்லவும் முடியாதபடி மௌனத்தில் மனம் குமுறி அழவைக்கும்படி ஆகிவிடுகிறது….

    அதீத அன்பின் முடிவில் அதீத பொசசிவ்நெஸ் முதல்படி ஆகி அதனால் பிரச்சனைகள் தொடர்ந்து நட்போ அல்லது உறவோ பிரியும் நிலைக்கு வந்துவிடுகிறது…. நம் அதீத அன்பு அடுத்தவருக்கு அவஸ்தையை கொடுக்கிறது என்பதைக்கூட அவர்களின் கண்ணீர் உணர்த்தினாலும் அதீத அன்பு நஞ்சாகி அன்பையே கொன்று விடுகிறது…..

    ReplyDelete
  24. அதீத அன்பு புரிதலையும் அன்னியோன்னியத்தையும் தகர்த்துவிடும்போது வேதனைகளையும் நினைவுகளையும் மட்டுமே மிச்சமாக்கிவிட்டு போய்விடுகிறது….

    நினைவுகள் அணைப்பதில்லை
    நினைவுகள் ஆறுதல் சொல்லுவதும் இல்லை
    நினைவுகள் அசைபோட மட்டுமே உதவும்…

    இதிலிருந்து தப்பிக்க அப்ப என்ன தான் வழி என்று வேண்டுவோர்க்கு….

    இதோ இந்த வரிகள் அருமருந்தாய் அமைந்தன ரமணி சார்…
    போதுமான ஒளி
    கண்ணுக்கெட்டியதூரம்
    தேவையான அறிதல்
    கைகுலுக்கும் நெருக்கத்தோடு
    என்னை நிலை நிறுத்திக்கொள்கிறேன்

    பட்டுப்போனவைகள் கூட
    மிக லேசாய் துளிர்க்கத் துவங்குகின்றன...

    எப்படி ரமணி சார்....
    கைகளை கொடுங்க கண்களில் ஒற்றிக்கொள்கிறேன்....

    ReplyDelete
  25. பிரச்சனைகள் எப்படி முளைக்கிறது என்று கொடுத்து....
    அந்த பிரச்சனைகளால் என்ன ஆகிறது என்று சொல்லி...
    அந்த பிரச்சனைகளால் எத்தனை அன்பாய் இருந்த உறவுகளும் நட்புகளும் பிரிகிறது என்ற வேதனைகளை எடுத்துக்கூறி....

    இப்படி இருந்து பிரிவதை விட இப்படி இல்லாமல் பட்டும்படாமலும் இருங்க.... உங்க எல்லையை தாண்டாதீங்க... நேசிக்கும் நட்பாய் இருப்போரின் எல்லையை தொடாதீங்க..... தொட்டு உள் நுழைந்து பின் அவர்கள் நிம்மதியும் குலைத்து நீங்களும் கண்ணீர் விட்டு கதறாதீங்க...

    பின் பிரிவெனும் கொடிய நிலைக்கு உங்களை வற்புறுத்திக்காதீங்க...பிரிவு ஏற்படுவதும் மரணத்தின் விளிம்பை தொடுவதும் ஒன்றே என்பதை மறந்துவிடாமல் தாமரை இலை நீராய் இருந்து அன்பை பகிருங்கள் என்றும்....

    ReplyDelete
  26. எதிர்ப்பார்ப்புகளில்லா அன்பில் ஏமாற்றம் ஏற்படுவதில்லை என்றும்...
    அதீத அன்பு தவறில்லை... ஆனால் பகிர்ந்த அளவு அன்பையே பகிர்ந்தவரிடம் எதிர்ப்பார்ப்பதால் தான் இத்தனை அவஸ்தைகளும் என்று சொன்ன மிக அற்புதமான கவிதை வைர வரிகள் ரமணி சார் இது....

    என்னை நான் கட்டுப்படுத்திக்க முடியாதபடி எழுதவைத்த கவிதை வரிகள் படைத்தமைக்கு ஹாட்ஸ் ஆஃப் ரமணி சார்.....

    இந்த கவிதை வரிகள் எல்லோருக்குமே ஒரு படிப்பினையாக கண்டிப்பாக அமையும்....

    அன்பு நன்றிகள் ரமணி சார் பொங்கலுக்கான அசத்தல் கவிதை வரிகளுக்கு....

    அன்பு பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ரமணி சார்.....

    ReplyDelete
  27. கவிதை அழகாயிருக்கு சார்.
    பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. kavithai (kovaikkavi) //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. சின்னப்பயல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. கோவை2தில்லி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. மஞ்சுபாஷிணி //

    பொங்கல் திரு நாளில் தாங்களும் தங்கள்தாயாரும்
    தொலைபேசியில்தொடர்புகொண்டு வாழ்த்தியது
    உண்மையில் ஒரு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.
    மகிழ்ச்சியாய் இருந்தது
    மிகச் சரியாக கவிதையின் அடி நாதத்தைப் புரிந்து
    பாராட்டி எழுதி இருப்பது மகிழ்வளிப்பதாய் உள்ளது

    தங்களுக்கும் த்ங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. //பட்டுப்போனவைகள் கூட
    மிக லேசாய் துளிர்க்கத் துவங்குகின்றன///

    உண்மைதான் சார் இந்த பொங்கள் திருநாளில் எனது வாழ்க்கையும் துளிர்விட ஆரம்பிக்கின்றன.

    உங்கள் கவிதைகள் அழகான பெண் என்றால் மஞ்சுபாஷினியின் பின்னுட்டம் அந்த பெண் இட்டுகொள்ளூம் நெற்றி பொட்டு போல உள்ளது.உங்களின் பதிவுகளுக்கு அவரின் பின்னுட்டம் இல்லாது பார்க்கும் போது பொட்டு இல்லா பெண்போல தோன்றியது. அவர்களின் வருகையால் அந்த குறை நீங்கியது,

    நல்ல கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. சின்ன கை குலுக்கலிலும்,தோள்தட்டலிலும்,மனம் கவர்ந்த சொல்லிலுமாய் பட்டுப்போனவைகள் கூட துளிர்த்து விடுகிறதுதானே?நல்ல கவிதை,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. Avargal Unmaigal //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. விமலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. மணிமகுடம் சூடிக்கொண்டதற்கு முதற்கண்
    வாழ்த்துக்கள்!
    எதிலும் அளவோடு இருப்பது
    வளமோடு வாழும் வழி!
    தங்கள் கவிதை சரியே!

    த ம ஓ 7

    சா இராமாநுசம்

    ReplyDelete
  37. கவிதை அருமை.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  38. கவிதை நல்லாயிருந்தது சார்...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  39. துளிர்க்கும் என்ற நம்பிக்கையுடன்


    பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. //பட்டுப்போனவைகள் கூட
    மிக லேசாய் துளிர்க்கத் துவங்குகின்றன//

    நம்பிக்கையை ஏற்றி விட்டிருக்கிறீர்கள்.
    பொங்கல் நல் வாழ்த்துகள்.
    எல்லா நலனுடன் வாழ வாழ்த்துகள்.

    ReplyDelete
  41. மிகச் சரியாகச் சொன்னீர்கள்! ஆனால் அதை புரிந்து கொள்ள நமக்கு ஆன காலம் அதிகம்! மீதம் குறைவு! 12!

    ReplyDelete
  42. பட்டுப்போனவைகள் கூட
    மிக லேசாய் துளிர்க்கத் துவங்குகின்றன

    வாழ்கையின் தத்துவத்தையும்
    காலத்தின் மகத்துவத்தையும் சொன்ன வரிகள் அருமை சார்

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  43. மிக மிக அருமை.இனிய பொங்கல்நாள் வாழ்த்துகள் !

    ReplyDelete
  44. கவிதை சிறப்பு... பாராட்டுக்கள் அய்யா.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. சி.கருணாகரசு //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  46. ஹேமா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  47. A.R.ராஜகோபாலன் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  48. ரமேஷ் வெங்கடபதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  49. Advocate P.R.Jayarajan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  50. கோவிந்தராஜ்,மதுரை. //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. துரைடேனியல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  52. ரெவெரி //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  53. ராமலக்ஷ்மி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  54. புலவர் சா இராமாநுசம் //.


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  55. வணக்கம்! எந்த கவிதையைப் படித்தாலும் முதலில் எனது கருத்துரை. அப்புறம்தான் மற்றவர்கள் கருத்துக்களைப் படிப்பேன். தங்கள் இந்த கவிதையைப் படித்தவுடன் “ஏன் என்னாச்சு” என்ற குழப்பம் எனக்கும் வந்தது. அப்புறம், தாங்கள் தந்த

    //கவிதையின் கருவோடு என்னை இணைத்துக்
    குழப்பிக் கொள்ளவேண்டாம் நானும் இரண்டாம் பாரா அணிதான்
    எல்லைகள் புரியாதோருக்காக இது //

    என்ற மறுமொழி கண்டு தீர்ந்தது. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  56. நானும் இரண்டாம் அணியைச் சேர்ந்தவன் என்ற தங்கள் கருத்தும் தோழி மஞ்சுபாஷினி எழுதியுள்ளவைற்றையும் மீறி நான் புதிதாக என்ன சொல்லி தங்களைப் பாராட்டிவிட முடியும் ரமணி ஸார்? கை கொடுங்க... உங்களுக்கு என் உளம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  57. ///போதுமான ஒளி
    கண்ணுக்கெட்டியதூரம்
    தேவையான அறிதல்
    கைகுலுக்கும் நெருக்கத்தோடு///

    அருமையான பதிவு

    என்றும் சந்தோசத்தை கொடுக்கும் இதன் படி நடந்தால் ....... ஆனால் கத்திமேல் நடப்பது போன்றே இது யதார்த்தத்துக்கு எல்லாவற்றையும் தாண்டி சில ஈர்ப்புகள் துரத்தை குறைத்து அறிதலை அதிகரித்து நெருங்க சொல்கிறது. மனிதன் ஒளி இழக்கத்தான் செய்கிறார்.எதிர்பார்ப்பை அதிகரித்து அது கிடைக்காமல் துன்பத்தில் துவண்டுபோகிறான்.

    போதும் என்ற மனம் மனிதனுக்கு வந்திருந்தால் ஏழை என்றொரு இனம் பட்டினி என்ற கொடூர சொல் அழிக்கபட்டிருக்கும்!!!!
    ta.ma 17

    ReplyDelete
  58. அன்பின் அவர்கள் உண்மைகள் , கணேஷ் இருவருக்குமே என் அன்பு நன்றிகள்....

    ReplyDelete
  59. பட்டுப்போனவைகள் கூட
    மிக லேசாய் துளிர்க்கத் துவங்குகின்றன

    தங்களுக்கும் இனிய இல்லத்தாருக்கும்
    இனிய பொங்கல் வாழ்த்துகள்..

    ReplyDelete
  60. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  61. சசிகுமார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  62. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  63. இடி முழக்கம் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  64. கணேஷ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  65. தி.தமிழ் இளங்கோ //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  66. இல்லத்தில் உள்ளத்தில் உள்ள அனைவருக்கும் தமிழ புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் . இடுகைக்கு பாராட்டுகள் .

    ReplyDelete
  67. திக்கெட்டுமாய் விரவியுள்ள
    தமிழர்கள் அனைவருக்கும்
    தித்திக்கும் நாளாய் அமைந்திட
    இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்க்கும் இதயங்கனிந்த “தை” பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  68. வாழ்வின் எந்தப் பகுதியிலும் இனிப்பது எதிர்பார்ப்புகள் இல்லாத அன்புதான். மிக நெகிழ்வான உணர்வுகளை அழுத்தமாகப் பதிந்து இருக்கிறீர்கள்.
    இனிய பொங்கல் நாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  69. அனுபவம் பேசுது!
    நன்று !

    நல்ல கவிதை!

    ReplyDelete
  70. இப்போதெல்லாம்
    போதுமான ஒளி
    கண்ணுக்கெட்டியதூரம்
    தேவையான அறிதல்
    கைகுலுக்கும் நெருக்கத்தோடு
    என்னை நிலை நிறுத்திக்கொள்கிறேன்//வழக்கம் போல் மிக சிரத்தை எடுத்த எழுதிய அழகானதொரு கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  71. சரியாகக் கணித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  72. கவிதை அருமை !

    ReplyDelete
  73. //அதீத அன்பு கூட

    புரிதலையும்
    அன்னியோன்யத்தையும்
    அடியோடழித்துப் போகிறது//

    தொலைவிலிருந்து அன்பை வெளிபடுத்துவது நல்லது .
    இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  74. @நெல்லி. மூர்த்தி

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  75. @வல்லிசிம்ஹன்

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  76. அருமையான கவிதை .சகோதரி மஞ்சு சுபாஷினியின் அழகான பின்னூட்டம் மிக அருமை

    ReplyDelete
  77. அருமையான கவிதை.

    பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  78. angelin //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  79. RAMVI //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  80. ananthu //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  81. ஹ ர ணி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  82. ஸாதிகா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  83. Seeni //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  84. வல்லிசிம்ஹன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  85. நெல்லி. மூர்த்தி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மனம் கனிந்த
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  86. கண்ணுக்குப் புலப்படாத எல்லைகள் சில மனதுக்கு மட்டும் புலப்படுவதால்..

    மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  87. ''கூடுதல் வெளிச்சம்
    அதிக நெருக்கம்
    பரிபூரணமாய் அறிதல்
    அதீத அன்பு கூட

    புரிதலையும்
    அன்னியோன்யத்தையும்
    அடியோடழித்துப் போகிறது''
    வாஸ்த்தவமான கருத்து.கயிறு அதிகமாக முறுக்கேறினால் அறுந்துபோக வாய்ப்புள்ளது.அளவோடு இருப்பது நல்லது.
    கருத்துச் செறிவான கவிதைக்கு நன்றி சார்

    ReplyDelete
  88. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  89. radhakrishnan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  90. அற்புதமான பதிவு.நல்ல முன்னோடி நீங்கள்

    ReplyDelete
  91. சக்தி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  92. அனுபவங்களின் பாடமாக தங்கள் கவிதை வழிகாட்டி நிற்கிறது. எட்டவும் இன்றி கிட்டவும் இன்றி அளவோடு இருந்தால்..எல்லாம்...எப்போதும் சுபமாகும். எத்தனை உண்மை.

    ReplyDelete
  93. தீபிகா(Theepika) //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  94. veedu //

    "அன்பு நண்பரே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி

    மனமார்ந்த நன்றி

    ReplyDelete