Tuesday, January 24, 2012

கவிதைச் சித்தாந்தமும் அரசியல் வேதாந்தமும்

அளவுக்கு மீறிய நெருக்கத்தில்
பொருளின் உண்மைத் தன்மை
கண்ணுக்குத் தெரியாமல்தான் போகும்
அது கல்லானாலும் சரி
உயிர்த் தோழியானாலும் சரி

ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகள் தொடர்ந்திட
வாரிசுப் போர்
தவிர்க்க முடியாததாகிவிடும்
மாமன்னர்கள் காலமாயினும் சரி
மக்களாட்சி காலமாயினும் சரி

உடல் வலிமை எத்தகையதாயினும்
கால் பலமற்றவன் அடுத்தவன் முதுகினை
அண்டித்தான் வாழவேண்டும்
அது பயில்வானாயினும் சரி
பணபலமுள்ளவன் ஆயினும் சரி

எத்தகைய  வீரியமிக்க விதையாயினும்
மண்ணில் நட்டுத்தான் உயிர் பெறக்கூடும்
ஆகாயப் பந்தலில் நடமுடியாது
அது ஆதிகாலத்து ஆலமரமாயினும் சரி
இருபதாம் நூற்றாண்டு "அரச"மரமாயினும் சரி

படிமங்கள் குறியீடுகளென
எப்படித்தான் பம்மாத்து செய்தாலும்
கருவற்ற சொல்லடுக்குகள் கவிதையாக முடியாது
அது கந்தன் மூக்கன் இயற்றியதாயினும் சரி
கவி அரசர்கள் இயற்றியதாயினும் சரி

81 comments:

  1. wav ....கவிதை சுபேரா இருக்கு ...
    நல்லக் கவிக் கொடுத்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. அரசியல் வேதாந்தத்தில் கவிதை சித்தாந்தத்தை இணைத்து எழுதியது அருமை. எல்லோருக்கும் அவர்கள் கால்கள் நிலத்தில் படிந்திருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. //கருவற்ற சொல்லடுக்குகள் கவிதையாக முடியாது
    அது கந்தன் மூக்கன் இயற்றியதாயினும் சரி
    கவி அரசர்கள் இயற்றியதாயினும் சரி//

    அருமை சார். விஷயம் இல்லை என்றால் அது உளறல் ஆகிவிடும்.

    ReplyDelete
  4. கவிதை எழுதப்படுவதில்லை, படிக்கப்படுவது (என்று நினைக்கிறேன் :))
    கருவற்ற சொல்லடுக்கு - சுற்றிச் சுற்றி வருகிறது.

    ReplyDelete
  5. கலை //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. G.M Balasubramaniam //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  7. RAMVI //
    அருமை சார்.
    விஷயம் இல்லை என்றால் அது உளறல் ஆகிவிடும்.

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. அருமை எது சிறப்பு பெறவும் விஷயம் வேண்டும் - அது எத்தனை அழகானதாய் இருந்தாலும். மனம் ரசித்த கவிதை.

    ReplyDelete
  9. நல்ல கவிதை நல்ல கருத்து. இது இந்த கால அரசியலுக்கு மிக பொறுத்தமாக உள்ளது.

    முதலில் பாரவில் மம்மியின் நட்பையும் பற்றியும் இரண்டாவதாக கருணாநிதியின் வாரிசுகள் போராட்டத்தையும் முன்றாவதாக எப்போதும் அடுத்தவனை அண்டி வாழும் காங்கிரசையும், நாலவதாக சூப்பர் ஸ்டாரையும் ப்ற்றியும் மிக அழகாக கவிதை வடிவில் உணர்த்திய நீங்கள் இறுதியில் பதிவுலகில் கவிதைகள் எழுதி வரும் பதிவர்களையும் நக்கல் அடித்து முடித்து இருப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது.

    இப்படி சிறப்பாக எழுத பதிவுலகில் பவனி வரும் "கவி பேரரசராக" வரும் உங்களால்தான் முடியும். வாழ்த்துகள் பதிவுலக "கவி பேரரசரே!!!!!!"

    ReplyDelete
  10. அளவுக்கு மீறிய நெருக்கத்தில்
    பொருளின் உண்மைத் தன்மை
    கண்ணுக்குத் தெரியாமல்தான் போகும்
    அது கல்லானாலும் சரி
    உயிர்த் தோழியானாலும் சரி
    >>>
    ரொம்ப சரியா சொன்னீங்க ஐயா. இதுக்குதான் கிட்ட இருந்தால் முட்ட பகைன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க போல, அவங்கவங்க தன் எல்லை எதுன்னு புரிஞ்சுக்கிட்டு நடந்துகிட்டால் துன்பம் ஏதுமில்லை ஐயா

    ReplyDelete
  11. அப்பாதுரை //

    உங்கள் பின்னூட்டத்திற்கு மட்டும் சட்டென
    பதில் எழுத தயக்கமாக உள்ளது
    பின்னூட்டத்தின் பொருள் மிகச் சரியாகப் புரிந்தபின்
    பதில் அளிக்கிறேன்

    ReplyDelete
  12. தமிழ் உதயம் //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. ஆஹா அற்புதம். படிமங்கள் குறியீடுகளென
    எப்படித்தான் பம்மாத்து செய்தாலும்
    கருவற்ற சொல்லடுக்குகள் கவிதையாக முடியாது
    அது கந்தன் மூக்கன் இயற்றியதாயினும் சரி
    கவி அரசர்கள் இயற்றியதாயினும் சரி

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. அரசியல் மற்றும் கவிதை சித்தாந்தம் ரசித்தேன் ரமணி சார்...
    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Avargal Unmaigal //

    முதலில் பாரவில் மம்மியின் நட்பையும் பற்றியும் இரண்டாவதாக கருணாநிதியின் வாரிசுகள் போராட்டத்தையும் முன்றாவதாக எப்போதும் அடுத்தவனை அண்டி வாழும் காங்கிரசையும், நாலவதாக சூப்பர் ஸ்டாரையும் ப்ற்றியும் மிக அழகாக கவிதை வடிவில் உணர்த்திய நீங்கள் இறுதியில் பதிவுலகில் கவிதைகள் எழுதி வரும் பதிவர்களையும் நக்கல் அடித்து முடித்து இருப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது.


    எழுதுகையில் உள்ள சுகத்தை விட
    மிகச் சரியாக புரிந்து கொள்ளப்பட்டு
    பின்னூட்டமிடப்படும்போது மனம்
    இரட்டிப்பு சந்தோஷம் கொள்வது உண்டு
    அது பல சமயம் எனக்கு தங்கள் பின்னுட்டங்களால்
    கிடைக்கிறது.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. ரெவெரி //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. .
    ராஜி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. சூப்பர். நல்ல கருத்துக்களை, தங்களது கவிதைகளில், சுவாரசியமாக தருவது அருமை.

    ReplyDelete
  21. உயிர் அற்ற வார்த்தைகள் வெற்றுப்படைப்புத்தான் அரசியலில் வாரிசு அதிகம் வந்தால் உள்வீட்டுச் சண்டை வீதிவரை வரும் அருமையான கவிதை ரமனிசார்.தொடருங்கள் நல்ல விடயங்களை கற்றுக் கொள்வோம்.

    ReplyDelete
  22. Chitra //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. தனிமரம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. அது அது அந்தந்த இடங்களில் அர்த்ததோடு இருந்தால்தான் அழகு என்கிறீர்கள்.உண்மைதான் !

    ReplyDelete
  25. ஹேமா //

    அல்லது இருக்கக் கூடாதவைகள்
    இருக்கக் கூடாத இடங்களில் இல்லாமல் இருந்தாலும் சரிதான்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. எத்தகைய வீரியமிக்க விதையாயினும்
    மண்ணில் நட்டுத்தான் உயிர் பெறக்கூடும்
    ஆகாயப் பந்தலில் நடமுடியாது
    அது ஆதிகாலத்து ஆலமரமாயினும் சரி
    இருபதாம் நூற்றாண்டு "அரச"மரமாயினும் சரி


    அழகாகச் சொன்னீர்கள் அன்பரே

    ReplyDelete
  27. guna thamizh //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. ஆரம்பவரிகளை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் நான். அதனாலேயே அது மனதில் அதிகமாகப் படிந்து விட்டது. எதுவாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் நம்மோடு அது சம்பந்தப் படும்போது நம்மிடம் அதன் தாக்கம் அதிகம்தான்.

    ReplyDelete
  29. ஸ்ரீராம். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. //உடல் வலிமை எத்தகையதாயினும்
    கால் பலமற்றவன் அடுத்தவன் முதுகினை
    அண்டித்தான் வாழவேண்டும்
    அது பயில்வானாயினும் சரி
    பணபலமுள்ளவன் ஆயினும் சரி//


    நடைமுறையிலுள்ள யதார்த்தம்.

    பகிர்விற்கு நன்றிங்க.

    ReplyDelete
  31. MTG விளக்கம் சொன்னதால் புரிந்தது.

    அதனால் கருத்திடுகிறேன்.

    நன்றி MTG !

    கவிதை சிறப்பு ரமணி சார் !

    ReplyDelete
  32. //படிமங்கள் குறியீடுகளென
    எப்படித்தான் பம்மாத்து செய்தாலும்
    கருவற்ற சொல்லடுக்குகள் கவிதையாக முடியாது
    அது கந்தன் மூக்கன் இயற்றியதாயினும் சரி
    கவி அரசர்கள் இயற்றியதாயினும் சரி//

    - அருமையிலும் அருமை. நடனமாடுகிறது உங்கள் கவிதை விரல்கள். அரசியல் மற்றும் கவிதை என கலந்து கட்டி வெளுத்திருக்கிறீர்கள். உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் நலமாக இருக்கும். வாழ்த்துக்கள். தொடருங்கள் சார்.



    தமஓ 10.

    ReplyDelete
  33. படிமங்கள் குறியீடுகள் என்றால் என்னவென்றே தெரியமாலும் ஒரு கூட்டம் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறது. உரைநடையை வெட்டி வெட்டி கீழே போட்டால் போதும். அதுதான் கவிதை எனவும் சொல்லிக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ரமணி சார்?!

    ReplyDelete
  34. இந்திரா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. ஸ்ரவாணி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. நல்ல கவிதை!
    வாழ்த்துக்கள்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  37. துரைடேனியல் //

    என்னுடைய மார்ச் பதிவில் உள்ள யாதோவும்
    கேள்விகளே கேள்விகளாயும் ஒருவேளை தங்கள்
    வினாவுக்கான சரியான பதிலாக இருக்கும் என நினைக்கிறேன்

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. வழக்கம் போல் அருமையான கருத்துகக்ளைத்தாங்கி வந்த அருமையானதொரு கவிதை.

    ReplyDelete
  40. சசிகுமார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. ஸாதிகா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. karuththu illaatha kavithai-
    ezhuthaathe!
    entru sollideenga!
    rasanaiyudan irunthathu!

    ReplyDelete
  43. அடுக்கடுக்காய் அசத்தலான உண்மைகள். அட போடவைக்கும் அற்புத எண்ணவோட்டங்கள். உங்களால் மட்டுமே தெளிவாகப் படைக்கப்படக்கூடிய மனோவியல் தெரிவுகள்.. மிகுந்த பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  44. உடல் வலிமை எத்தகையதாயினும்
    கால் பலமற்றவன் அடுத்தவன் முதுகினை
    அண்டித்தான் வாழவேண்டும்
    அது பயில்வானாயினும் சரி
    பணபலமுள்ளவன் ஆயினும் சரி

    இப்படி இல்லாதவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.ஆனால் சிறிதளவே.

    சிந்திக்க வைத்த கவிதை.அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  45. ''....படிமங்கள் குறியீடுகளென
    எப்படித்தான் பம்மாத்து செய்தாலும்
    கருவற்ற சொல்லடுக்குகள் கவிதையாக முடியாது
    அது கந்தன் மூக்கன் இயற்றியதாயினும் சரி
    கவி அரசர்கள் இயற்றியதாயினும் சரி..''

    இந்த வரிகள்...ம்...ம்...இடிக்குது கவிக்கு....!
    நீங்கள் எழுதும் பாணி மிக வித்தியாசமானது!
    மிக ரசனைக்குரியது. எனக்குப் பிடித்துள்ளது.
    அருமை! வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    hhtp://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  46. அரசியல் வேதாந்தமும்
    கவிதை சித்தாந்தமும்
    அருமையாய் கையாளப்பட்டிருக்கிறது
    எதையுமே அமைதியாய் அழகாய் நறுக்கென்று
    கூறும் தங்கள் படைப்புத் திறனுக்கு என்
    சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    ReplyDelete
  47. வணக்கம்!

    //படிமங்கள் குறியீடுகளென
    எப்படித்தான் பம்மாத்து செய்தாலும்
    கருவற்ற சொல்லடுக்குகள் கவிதையாக முடியாது//

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் “உள்ளத்தில் உள்ளது கவிதை” என்ற கருத்துக்கு எடுத்துக் காட்டு உங்கள் வரிகள்.

    ReplyDelete
  48. ஒவ்வொன்றுமே யதார்த்தமான வரிகள்.....
    நல்லதொரு கவிதை சார்.

    த.ம - 14

    ReplyDelete
  49. Seeni //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. கீதா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. kavithai (kovaikkavi) //

    நீங்கள் எழுதும் பாணி மிக வித்தியாசமானது!
    மிக ரசனைக்குரியது.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. மகேந்திரன் //

    எதையுமே அமைதியாய் அழகாய் நறுக்கென்று
    கூறும் தங்கள் படைப்புத் திறனுக்கு என்
    சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. தி.தமிழ் இளங்கோ .

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் “உள்ளத்தில் உள்ளது கவிதை” என்ற கருத்துக்கு எடுத்துக் காட்டு உங்கள் வரிகள்.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. கோவை2தில்லி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. வணக்கம் ரமணி அண்ணா, உண்மையில் நல்லதொரு கவிதை. அர்த்தம் பொதிந்த வரிகள். ரசித்தேன்.

    ReplyDelete
  56. கவிதை அருமை.கடைசிவரிகள்!சூப்பர்.

    ReplyDelete
  57. பி.அமல்ராஜ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. சென்னை பித்தன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகள் தொடர்ந்திட
    வாரிசுப் போர்
    தவிர்க்க முடியாததாகிவிடும்//

    பார்த்தவுடன் உடனே புரிந்து விட்டது இந்த வரிகள் .

    //அளவுக்கு மீறிய நெருக்கத்தில்
    பொருளின் உண்மைத் தன்மை
    கண்ணுக்குத் தெரியாமல்தான் போகும்//

    சரியாக சொன்னீங்க அளவுக்கி மீறினால் நஞ்சுதான்
    அன்பு கூட மிகையாகிபோனால் வெறுப்பூட்டும் .

    ReplyDelete
  60. angelin //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. கவிதைச் சித்தாந்தம் என்ற நிர்ணயத்தையும்
    அரசியல் வேதாந்தம் என்ற நிர்பந்தத்தையும்
    தங்களின் கவி ஞானத்தால் தந்து,
    விளக்கிய விதம் வியாபம்
    ரமணி சார்.

    ReplyDelete
  62. A.R.ராஜகோபாலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  63. வெளி குத்து வரிகள் ஹிம்...கவிதை அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  64. "கருவற்ற சொல்லடுக்குகள் கவிதையாக முடியாது"
    முதல் பத்தியில் உறவுகள், பின் அரசியல்,நிர்வாகம் என்று தொட்டு இலக்கியத்தையும் விடாமல் சாடியது அருமை. அசட்டுப் பிசட்டாக கவி அரசர்கள் கவிதையெழுதி வாங்கிக் கட்டிக் கொண்டதையும் உங்கள் இந்தப் பதிவு நினைவு படுத்துகிறது.

    ReplyDelete
  65. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  66. மனசாட்சி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  67. VENKAT //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. என்ன சார்! அந்நியன் தூக்கம் முழித்துவிட்டான் போலிருக்கே!18!

    ReplyDelete
  69. ரமேஷ் வெங்கடபதி //

    ஒரே மசமசன்னு போனாலும் போரடிச்சுதானே போகும்
    கொஞ்சம் காரம் அவ்வப்போது சேர்த்தால்தானே சுவாரஸ்யம்
    வரவுக்கும் உத்வேகமளிக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete
  70. எத்தகைய வீரியமிக்க விதையாயினும்
    மண்ணில் நட்டுத்தான் உயிர் பெறக்கூடும்

    சித்தாந்தமும் வேதாந்தமும் உயிர் பெற்று திகழிம் அருமையான கவிதை! பாராட்டுக்கள்..

    ReplyDelete
  71. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  72. கருவற்ற சொல்லடுக்குகள் கவிதையாக முடியாது

    இந்த வரியைக் கொண்டு பல கவிதைகள் எழுதலாம். அரசியல் எள்ளல் அருமையாக வருகிறது உங்களுக்கு அதேசமயம் வெகு நாகரிகமாகவும் ஆழமாகவும். அருமை.

    ReplyDelete
  73. அரசியல் எள்ளல் அருமையாக வருகிறது உங்களுக்கு அதேசமயம் வெகு நாகரிகமாகவும் ஆழமாகவும். அருமை.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. எத்த‌னை நாள் ஆனாலும் ச‌ரி
    உங்க‌ ப‌திவெல்லாம் ப‌டிக்கும்ப‌டி!

    ReplyDelete
  75. நிலாமகள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  76. உண்மைத் தன்மை தெரியும் தூரத்திலேயே இரு என்ற எச்சரிக்கை நமக்கும் கூட!.நன்று!நன்று!

    ReplyDelete
  77. சக்தி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அழகான விரிவான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  78. வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள் ஐயா..

    http://blogintamil.blogspot.in/2013/02/2.html

    ReplyDelete
  79. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete