Sunday, January 22, 2012

மத்யமர்

மனித மனங்களில் எல்லாம்
புதர் மண்டிப் போக
நாடும் காடாகிப் போனதால்
ரொட்டிக்கான தொடர் போருக்கு
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

பொறுக்கப் போகிற பாவனை மறைத்து
வேட்டைக்குச் செல்வதுபோல்
முகமெங்கும் புலிவரிகளை
பூசிக் கொண்டாலும் கூட
நிஜப் புலிகளின் நெருக்கத்தில்
மருங்கிய பார்வையை ஏனோ
மறைக்க முடிவதேயில்லை

பாவப்பட்ட  முட்டாள் ஜந்துக்கள்
புலியெனஏமாந்து ஒதுங்குவதில்
கிடைக்கும் சில சௌகரியங்களும்
தொலையும் சில அசௌகரியங்களும்
ஒப்பனையின் அவசியத்தை
உறுதிப்படுத்திப்போனாலும் கூட

ஒவ்வொரு முறை ஒப்பனையிடும்போதும்
நோவையும் நோயையும்  மறைக்கவென
விலைமகள் போடும்
மாலைவேளை ஒப்பனையை
ஒப்பிட்டு வேதனையுறும்  மனம் மட்டும் ஏனோ
அடுப்படிப் பூனையாய் ஒடுங்கிப போகிறது

ஆனாலும் என்ன
ரொட்டிக்கான போருக்கு
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

63 comments:

  1. மிடில்க்ளாஸ்காரர்களைப் பற்றி வாத்தியாரின் வர்ணனையான வார்த்தையை தலைப்பில் பொருத்தியுள்ளீர்கள்.

    கவிதையும் அற்புதம்!

    ReplyDelete
  2. முகமெங்கும் புலிவரிகளை
    பூசிக் கொண்டாலும் கூட
    நிஜப் புலிகளின் நெருக்கத்தில்
    மருங்கிய பார்வையை ஏனோ
    மறைக்க முடிவதேயில்லை//
    ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு அம்புகள் போல இருக்கு..பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. //பாவப்பட்ட முட்டாள் ஜந்துக்கள்
    புலியெனஏமாந்து ஒதுங்குவதில்
    கிடைக்கும் சில சௌகரியங்களும்
    தொலையும் சில அசௌகரியங்களும்
    ஒப்பனையின் அவசியத்தை
    உறுதிப்படுத்திப்போனாலும் கூட//


    ஆமாம் சார். நாம் அமைதியானவர்களாய் இருந்தாலும் இந்த உலகத்திற்காக சில நேரங்களில் பொருத்தமில்லாத வேஷங்களை போட்டுத்தான் ஆகவேண்டி இருக்கிறது. கொத்தினால்தான் பாம்பு; கொட்டினால்தான் தேள் என்றுதானே இந்த உலகம் சொல்கிறது. அருமையான உள்ளடக்கம் கொண்ட அற்புதமான கவிதை. கவிதையின் வீரியம் வானத்தை தொடுகிறது சார். வாழ்த்துக்கள்! தொடரவும்.

    ReplyDelete
  4. பொருத்தமில்லாத முகமூடிகளும்,வேஷங்களும் சில நேரங்களில் தேவைப்படுகிறது.சொந்த முகம் சிலநேரங்களில் எங்களையே பார்த்துச் சிரிக்கும் நீ ஒரு உதவாக்கரையென்று.நல்லதொரு வாழ்க்கைப்பாடம் சொல்லும் கவிதை !

    ReplyDelete
  5. ஆனாலும் என்ன
    ரொட்டிக்கான போருக்கு
    புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது
    >>>
    முகமூடி அணிந்தால்தான் பிழைக்கமுடியும் என்ற்றகிவிட்ட நம் பரிதாப நிலையை என்ன சொல்வது

    ReplyDelete
  6. கவிதை நல்லா இருக்கு....

    ReplyDelete
  7. RVS //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. குணசேகரன்... //

    ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு அம்புகள் போல இருக்கு..பாராட்டுக்கள் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. துரைடேனியல் //

    கவிதையின் வீரியம் வானத்தை தொடுகிறது சார். வாழ்த்துக்கள்! தொடரவும்.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. .ஹேமா //

    நல்லதொரு வாழ்க்கைப்பாடம் சொல்லும் கவிதை !

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. ராஜி //

    முகமூடி அணிந்தால்தான் பிழைக்கமுடியும் என்ற்றகிவிட்ட நம் பரிதாப நிலையை என்ன சொல்வது//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. எனக்கென்னவோ இது அதிகாரிகளின் குரலாகத் தெரிகிறது! சரிதானா! கவிதை நன்று! த.ம 6!

    ReplyDelete
  13. சசிகுமார் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. ரமேஷ் வெங்கடபதி //.

    எனக்கென்னவோ இது அதிகாரிகளின் குரலாகத் தெரிகிறது!

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    சரியான புரிதலுடன் கூடிய அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. அருமையான கவிதை.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  16. ////
    ஒவ்வொரு முறை ஒப்பனையிடும்போதும்
    நோவையும் நோயையும் மறைக்கவென
    விலைமகள் போடும்
    மாலைவேளை ஒப்பனையை
    ஒப்பிட்டு வேதனையுறும் மனம் மட்டும் ஏனோ
    அடுப்படிப் பூனையாய் ஒடுங்கிப போகிறது////

    சிறப்பான ஒரு ஓப்பீட்டு வரிகள் அருமை

    ReplyDelete
  17. Rathnavel //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. K.s.s.Rajh //.

    சிறப்பான ஒரு ஓப்பீட்டு வரிகள் அருமை //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. ரமணி சார்...

    நிறைய நாள்கள் இதுபோன்ற புலிவேஷமிடுபவர்களையும்...தெய்வங்களின் வேடமிடுபவர்களையும் பார்ர்து மனம் சங்கடப்பட்டிருக்கிறேன். உங்கள் கவிதை என்னை சலனப்படுத்துகிறது. மறுபடியும் அந்த சங்கடப்பரப்பில் நனைகிறேன்.

    ReplyDelete
  20. சுஜாதாவின் மத்யமர் வார்த்தையால் ஈர்க்கப்பட்டு உள்ளே வந்தேன். கவிதையும் அருமை

    ReplyDelete
  21. பாவப்பட்ட முட்டாள் ஜந்துக்கள்
    புலியெனஏமாந்து ஒதுங்குவதில்
    கிடைக்கும் சில சௌகரியங்களும்
    தொலையும் சில அசௌகரியங்களும்
    ஒப்பனையின் அவசியத்தை
    உறுதிப்படுத்திப்போனாலும் கூட
    ///
    அருமையான கவிதைவரிகளை அழகாக தொகுத்து அற்புதமாக படைத்து விட்டீர்கள் சார்.

    ReplyDelete
  22. நடுத்தர மக்கள் அனைவருமே ஒப்பனையின் பிண்ணனியில்தான் வாழ்க்கையையே நடத்துகிறோம்.

    ReplyDelete
  23. நடிகர் , அரசியல்வாதி முதல் விலைமகள் வரை அனைவரும்
    ஏதோ ஒரு ஒப்பனை அணிந்தே வாழ்க்கையை ஒப்பேற்றுகிறோம்.
    சுயமுகங்கள் அவ்வப்போது ஏதோ ஒரு விதத்தில்
    தலைகாட்டத் தான் செய்கின்றன ரொட்டியை ருசித்த பின்.
    அருமை.

    ReplyDelete
  24. "நோவையும் நோயையும் மறைக்கவென
    விலைமகள் போடும் மாலைவேளை ஒப்பனை" அவர்களைப் பற்றியும் சிந்திக்கும் நல்ல உள்ளங்கள் இருப்பதில் மகிழ்ச்சியே

    ReplyDelete
  25. ரொட்டிக்கான போருக்குப் புலி வேஷம் பொருத்தமாயிருக்கலாம். ஆனால் நல்லவர்கள், சாத்விகர்கள் என்னும் போர்வையில் உலா வருபவர் எதற்காக வேஷம் போடுகிறார்கள்.?

    ReplyDelete
  26. பொருத்தமில்லாத முகமூடிகளும்,வேஷங்களும் சில நேரங்களில் தேவைப்படுகிறது.சொந்த முகம் சிலநேரங்களில் எங்களையே பார்த்துச் சிரிக்கும் நீ ஒரு உதவாக்கரையென்று.நல்லதொரு வாழ்க்கைப்பாடம் சொல்லும் கவிதை

    ReplyDelete
  27. புலி வேஷத்திற்கு பின்னால் ஒரு ரொட்டி துண்டுக்கான நிஜ துயரம். கவிதை நன்றாக இருந்தது.

    ReplyDelete
  28. அரிதாரம் பூசிவாழும் வாழ்க்கையை சாடும் கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. //வேட்டைக்குச் செல்வதுபோல்
    முகமெங்கும் புலிவரிகளை
    பூசிக் கொண்டாலும் கூட
    நிஜப் புலிகளின் நெருக்கத்தில்
    மருங்கிய பார்வையை ஏனோ
    மறைக்க முடிவதேயில்லை//

    அருமை.

    என்னதான் வேஷம் போட்டாலும் சொந்தமுகம் நம்மை சில சமயம் காட்டிக்கொடுத்து விடுகிறதே!!

    சிறப்பான கவிதை,சார்.

    ReplyDelete
  30. தொலையும் சில அசௌகரியங்கள்..உண்மை..முகம் பார்த்த கண்ணாடி

    ReplyDelete
  31. தொலையும் சில அசௌகரியங்கள்..உண்மை..முகம் பார்த்த கண்ணாடி

    ReplyDelete
  32. Ayya ramani avarkale!
    vilaimakaludan oppittathu-
    valikal thantha vari!
    vaazhka neengal!

    ReplyDelete
  33. வணக்கம் ரமணி அண்ணா, 
    சிலவற்றை அடைவதற்காய் வேசம் போட்டு, மனிதன் தன் இயல்பினை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவைக்கு ஆளாகின்றான் என்பதனை இக் கவிதை சொல்லுகிறது.

    ReplyDelete
  34. சிறப்பான கவிதை...

    ReplyDelete
  35. வேசம் போட்டு வேறாளாய்க் காட்டித்தான் பிழைக்கும் நிலை !
    நன்று

    ReplyDelete
  36. நல்ல கவிதை.... தலைப்பைப் பார்த்ததும் சுஜாதாவின் அதே தலைப்பு நினைவுக்கு வந்தது....

    மத்யமர் நிலையே தினம் தினம் போராட்டம் தானே....

    ReplyDelete
  37. ஹ ர ணி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. மோகன் குமார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
    (தங்களை ஈர்த்த அந்த வார்த்தைக்கும் )

    ReplyDelete
  39. ஸாதிகா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. விச்சு //

    மிகச் சரி
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. ஸ்ரவாணி //

    சுயமுகங்கள் அவ்வப்போது ஏதோ ஒரு விதத்தில்
    தலைகாட்டத் தான் செய்கின்றன ரொட்டியை ருசித்த பின்.அருமை.//
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. வியபதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. G.M Balasubramaniam //

    நல்லவர்கள், சாத்விகர்கள் என்னும் போர்வையில் உலா வருபவர் எதற்காக வேஷம் போடுகிறார்கள்.?

    நல்லவர்களாகவும் சாத்வீகர்களாகவும்
    தொடர்வதற்காகத்தான்


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. Lakshmi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. தமிழ் உதயம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. dhanasekaran .S //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. RAMVI //

    என்னதான் வேஷம் போட்டாலும் சொந்தமுகம் நம்மை சில சமயம் காட்டிக்கொடுத்து விடுகிறதே//!!

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. சக்தி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. Seeni //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. நிரூபன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. கோவை2தில்லி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. சென்னை பித்தன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. கவிதைக்கு பொய் அழகு என்பார்கள்.......... உங்கள் கவிதை?????????? யதார்த்தத்துடன் மின்னுகிறது. அழகான ஆழமான கவர்ந்த வரிகள்.
    ta.ma 13

    ReplyDelete
  55. கொஞ்சம் அழுத்தமான சொற்களில் அருமையான கவிதை ,.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  56. ஆம்.. ரொட்டிக்கான போருக்கு
    புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது...அற்புத நடுத்தர மக்கள் கவிதை ரமணி சார்...

    ReplyDelete
  57. இடி முழக்கம் //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. அரசன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. .ரெவெரி //

    அற்புத நடுத்தர மக்கள் கவிதை ரமணி சார

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  60. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. புலி வேஷம் போடும் பூனையின் மனக்குமுறல் ..

    ReplyDelete
  62. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete